ஜான் புரூஸ் நார்டன்
ஜான் புரூஸ் நார்டன் (John Bruce Norton) (8 சூலை 1815 - 13 சூலை 1883) என்பவர் பிரித்தானிய வழக்கறிஞரும் கல்வியாளருமாவார். இவர் மதராஸ் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் வழக்கறிஞரும் இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளருமான எர்ட்லி நார்டனின் தந்தை ஆவார் .
ஜான் புரூஸ் நார்டன் | |
---|---|
சென்னை மாகாண தலைமை வழக்கறிஞர் | |
பதவியில் 1863–1868 | |
முன்னையவர் | தாமஸ் சிட்னி ஸ்மித் |
பின்னவர் | ஜான் டி. மேனே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இங்கிலாந்து, இலண்டன் | 8 சூலை 1815
இறப்பு | 13 சூலை 1883 இங்கிலாந்து, இலண்டன் | (அகவை 68)
பிள்ளைகள் | எர்ட்லி நார்டன் |
முன்னாள் கல்லூரி | Harrow, Merton College, Oxford |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஜான் புரூஸ் நார்டன் 1815 இல் லண்டனில் பிரித்தானிய படை வீரரும், வழக்கறிஞருமான ஜான் டேவிட் நார்டனுக்கு (1787-1843) மகனாக பிறந்தார். ஜான் டேவிட் நார்டன் 1841–42ல் சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். ஜான் புரூஸ் நார்டன் தனது கல்வியை ஹாரோ மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் பயின்றார் . பின்னர் சட்டம் பயின்ற இவர் 1841 இல் லிங்கனின் இன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார்.
நார்டன் ஒரு ஆர்வமிக்க துடுப்பாட்ட வீரராக இருந்தார். 1832-33 காலக்கட்டத்தில் ஹாரோ கிரிக்கெட் லெவனில் விளையாடினார். [1]
தொழில்
தொகுநார்டன் தனது தந்தையுடன் 1842 இல் இந்தியாவுக்குச் சென்று சென்னை வழக்கறிஞர் வேலையைத் தொடங்கினார். 1845 ஆம் ஆண்டில் அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர் 1845 முதல் 1862 வரை பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டில் இவர் சென்னை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இப்பதவியல் 1863 முதல் 1871 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.
நார்டன் 1843இல் சென்னையின் ஷெரீஃப்பாக நியமிக்கப்பட்டார். இப்பதவியல் 1843 முதல் 1845 வரை இவர் இருந்தார். மேலும் இவர் சென்னை சட்டமன்ற உறுப்பினராக 1862 முதல் 1868 வரை இருந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Mr. Eardley Norton." Times [London, England] 16 July 1931: 14. The Times Digital Archive. Web. 2 Apr. 2014
- "Norton, John Bruce". Dictionary of National Biography 41. (1895). London: Smith, Elder & Co.