ஜான் ரால்ஸ்டன் மார்
ஜான் ரால்ஸ்டன் மார் (John Ralston Marr; ஜோன் மார், 5 சூலை 1927 – 19 மே 2022) ஒரு பிரித்தானிய இந்தியவியலாளர், எழுத்தாளர் மற்றும் லண்டனில் உள்ள கீழைத்தேய, ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஆவார்.[1] அவர் கருநாடக இசை மற்றும் தமிழ் இலக்கியத்தில் அறிஞராகவும் அறியப்பட்டவர்.[2]
ஜான் ரால்சுட்டன் மார் John Ralston Marr | |
---|---|
பிறப்பு | இலெதர்கெட்டு, சரே, இங்கிலாந்து | 5 சூலை 1927
இறப்பு | மே 19, 2022 ஐக்கிய இராச்சியம் | (அகவை 94)
பணி | எழுத்தாளர் இந்தியவியல் |
அறியப்படுவது | தமிழ் ஆய்வுகள் |
வாழ்க்கைத் துணை | வென்டி மார் |
பிள்ளைகள் | நீலாயதாட்சி, சரசுவதி |
விருதுகள் | பத்மசிறீ குறள் பீடம் விருது |
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழையும் கர்நாடக இசையையும் பயின்றார். பெரிய புராணம், சைவ நாயன்மார்கள், புறநாநூறு, பதிற்று பத்து தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றியதோடு, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்தில் கர்நாடக இசைக் கச்சேரி ஒன்றையும் நடத்தியிருந்தார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் பாரதிய வித்யா பவனின் இன் நிறுவனரும் அறங்காவலரும் ஆவார்.[3]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇசுக்காட்டியரான சான் மார் இங்கிலாந்தில் சர்ரே மாநகரில் இலெதர்கெட்டு என்ற ஊரில் மோனிகா நைட்லி, இரால்சுட்டன் மார் ஆகியோருக்கு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1927 இல் பிறந்தார். இளமைக் கல்வியை விம்பிள்டன், டான்கெட் தொடக்கப் பள்ளியிலும், சான் பௌமெண்டு பள்ளியிலும் பயின்றார். பின்னர் பழைய வின்சரில் போமொண்ட் கல்லூரியில் தங்கிப் பயின்றார்.[4]
எழுதிய நூல்கள்
தொகுஇவர் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்:[5]
- பேச்சுத் தமிழ்-ஓர் அறிமுகம்.[6] இந்நூல் கீழைத்தேய, ஆப்பிரிக்க மொழிகள் பள்ளியில், முதுகலை தமிழ் மொழியில் படிப்பிறகான பாடநூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[7][8]
- தாராசுரத்தில் பெரிய புராண குறுஞ்சிற்பங்கள்: தமிழ் நாயன்மார்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்[9]
- எட்டுத்தொகை சங்கத் தமிழ் தொகை நூல்: சிறப்புக் குறிப்புடன் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து[10]
- திராவிட இலக்கியம் (இத்தாலிய மொழியில்)[11]
விருதுகள்
தொகு- இவர் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான செம்மொழி தமிழ் மைய நிறுவனத்தின் 2011 குறள் பீடம் விருதைப் பெற்றவர் ஆவார்.[12]
- கல்விக்கான இவரது பங்களிப்புகளுக்காக, இந்திய அரசாங்கம் 2009 ஆம் ஆண்டிற்கான பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமுறை விருதை அவருக்கு வழங்கியது.[13]
மறைவு
தொகுஇசுக்காட்டியரான முனைவர் ஜோன் மார், அவருடைய 95ஆவது வயதில் 2022 மே 19 அன்று காலமானார். முன்னதாக, இவரது மனைவி வென்டி மார் 2021 இல் காலமானார். இவர்களுக்கு நீலாயதாட்சி, சரசுவதி என இரு பிள்ளைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ David Shulman (2009). Spring, Heat, Rains: A South Indian Diary. University of Chicago Press. pp. Preface (p.254). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226755786.
- ↑ "Padma Shree Dr John Marr (part 1 of 5)". யூடியூப் video. Life is Glorious. 23 Mar 2009. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- ↑ "Description". Bharatiya Vidya Bhavan. 2016. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- ↑ பேராசிரியர் சான் இரால்சுடன் மார், மு. இளங்கோவன், பெப்ரவரி 19, 2009
- ↑ "Marr on WorldCat". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- ↑ John Ralston Marr (1979). An introduction to colloquial Tamil. School of Oriental and African Studies. p. 130.
- ↑ "Tamil Language 1 (PG)". School of Oriental and African Languages. 2016. Archived from the original on நவம்பர் 24, 2015. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- ↑ "Details of the Research Papers". Sangam. 2014. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- ↑ John Ralston Marr (1979). The Pĕriya purāṇam frieze at Tārācuram : episodes in the lives of the Tamil Śaiva saints. School of Oriental and African Studies. p. 289.
- ↑ John Ralston Marr (1985). The eight Tamil anthologies, with special reference to Pur̲anān̲ūr̲u and Patir̲r̲uppattu. Institute of Asian Studies. p. 550.
- ↑ John Ralston Marr (1969). Letterature dravidiche. Società Editrice Libraria. pp. 559–626.
- ↑ "Presidential awards for classical Tamil presented". The Hindu. 10 October 2013. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- "Padma Shree Dr John Marr (part 1 of 5)". யூடியூப் video. Life is Glorious. 23 Mar 2009. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- "Padma Shree Dr John Marr (part 2 of 5)". யூடியூப் video. Life is Glorious. 23 Mar 2009. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- "Padma Shree Dr John Marr (part 3 of 5)". யூடியூப் video. Life is Glorious. 23 Mar 2009. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- "Padma Shree Dr John Marr (part 4 of 5)". யூடியூப் video. Life is Glorious. 23 Mar 2009. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
- "Padma Shree Dr John Marr (part 5 of 5)". யூடியூப் video. Life is Glorious. 23 Mar 2009. பார்க்கப்பட்ட நாள் February 15, 2016.
மேலும் படிக்க
தொகு- John Ralston Marr (1969). Letterature dravidiche. Società Editrice Libraria. pp. 559–626. இணையக் கணினி நூலக மைய எண் 500157803.
- John Ralston Marr (1979). An introduction to colloquial Tamil. School of Oriental and African Studies. p. 130. இணையக் கணினி நூலக மைய எண் 416445131.
- John Ralston Marr (1979). The Pĕriya purāṇam frieze at Tārācuram : episodes in the lives of the Tamil Śaiva saints. School of Oriental and African Studies. p. 289. இணையக் கணினி நூலக மைய எண் 498713718.
- John Ralston Marr (1985). The eight Tamil anthologies, with special reference to Pur̲anān̲ūr̲u and Patir̲r̲uppattu. Institute of Asian Studies. p. 550. இணையக் கணினி நூலக மைய எண் 13270225.