ஜாபர் உல் இஸ்லாம் கான்

ஜாபர் உல் இஸ்லாம் கான் (Zafarul Islam Khan) டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். மேலும் இவர் ஓர் எழுத்தாளர் மற்றும் புது டெல்லியை மையமாகக் கொண்டு வெளியாகும் தி மில்லி கெஜட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் மற்றும் வெளியீட்டாளராகவும் உள்ளார். இந்த பத்திரிக்கை முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.

ஜாபர் உல் இஸ்லாம் கான்
பிறப்பு12 மார்ச்சு 1948 (1948-03-12) (அகவை 76)
பதரியா, ஆசம்கர், உத்தர பிரதேசம், இந்தியா
இருப்பிடம்தெற்கு டெல்லி
தேசியம்இந்தியன்
கல்விகலாநிதி பட்டம் (இஸ்லாமிய படிப்பு), மென்ச்சேஸ்டர் பல்கலைகழகம், 1987
பணிபத்திரிக்கையாளர், எழுத்தாளர், இஸ்லாமிய அறிஞர்
பெற்றோர்சபியா கான், வஹிதுதீன் கான்

மேலும் ஜாபர் இந்தியாவில் நிவாரணம் மற்றும் நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் "சாரிட்டி அலையன்ஸ்" என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார்.[1][2]  

பிறப்பு மற்றும் கல்வி

தொகு

கான் 1194 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆசம்கர், பாதரியவில் பிறந்தார். இவர் டெல்லியில் அல் ரிசாலா இஸ்லாமிய மையத்தை நடத்தி வரும் புகழ்பெற்ற முஸ்லிம் சிந்தனையாளரான மௌலானா வாஹிதுதீன் கானின் மகன் ஆவார். ஜபார் தனது முதன்மை கல்வியை ஆசம்கரில் மதரசா துல் இஸ்லா மற்றும் லக்னோவில் தாருல் உலூம் நத்வதுல் உலமாவில் கற்றார். பின்னர் இவர் 1966-73 ஆம் ஆண்டில் அல்-அசார் பல்கலைகழகம் மற்றும் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1987 இல் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகளில் முனைவர் பட்டம்ப் பெற்றார்.[3] 1970களில் இவர் லிபியா வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மொழிபெயர்ப்பாளர் ஆசிரியராக பணியாற்றினார். 1980களில் இவர் லண்டனை தளமாகக் கொண்ட தி முஸ்லீம் நிறுவனத்துடன் இணைந்து முஸ்லிம் ஊடகம் சேவை மற்றும் பிற வெளியீடுகளை நடத்தி வந்தார். மேலும் முன்னணி பிரித்தானிய முஸ்லிம்களின் முமுறைசாரா அமைப்பான முஸ்லீம் பாராளுமன்றத்தை நிறுவியுள்ளார்.

ஜாபர் அரபு, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் "ஹிஜ்ரா இன் இஸ்லாம்" (டெல்லி, 1996) மற்றும் பாலஸ்தீன ஆவணங்கள் (புது தில்லி 1998) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும் மற்றும் மொழிபெயர்த்தும் உள்ளார். இவர் இந்தோ-முஸ்லீம் கருப்பொருள்கள் குறித்து என்சைக்ளோபீடியா ஆஃப் இஸ்லாமுக்கு (லைடன்) எட்டு கட்டுரைகளை எழுதியுள்ளார். அல் ஜசீரா மற்றும் பிபிசி அரபு உள்ளிட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் இஸ்லாமிய மற்றும் தெற்காசிய பிரச்சினைகள் குறித்து வழக்கமான வர்ணனையாளராக இவர் இருக்கிறார். இவரது எழுத்துக்கள் அரபு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவருகின்றன.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் இல், இவர் இந்தியாவில் முஸ்லிம் அமைப்புகளின் குடை அமைப்பான அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ்-இ-முஷாவரத்தின் தலைவராக இரண்டு ஆண்டு காலத்திற்கு (2008-2009) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2012 ஆம் ஆண்டிற்கான தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் இரண்டு ஆண்டு காலத்திற்கு (2014-2015) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Rediff.comக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கு உறுதியான ஆதாரம் இல்லை" என்று ஜாபர் கூறினார்.[4] 2017 ஜூலை இல், இந்திய தலைநகர் டெல்லியின் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நலன்களைக் கவனித்துக்கொள்வதற்கான ஒரு அரை-நீதித்துறை அமைப்பான டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் மூன்று ஆண்டு காலத்திற்கு இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5]

தேசத்துரோக வழக்கு

தொகு

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று, கான் ஒரு பேஸ்புக் இடுகையை வெளியிட்டார். அதில் "இந்தியாவில் முஸ்லிம்கள் இந்துத்துவா அமைப்புகளால் வெறுப்பு பிரச்சாரங்கள், அடித்து கொலைகள் மற்றும் கலவரங்களை எதிர்கொள்கின்றனர்:" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்திய முஸ்லிம்களுக்கு குவைத் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் குறிப்பிடிருந்தார். இதற்காக டெல்லி காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124ஏ இன் கீழ் கான் மீது தேசத்துரோக வழக்கை சுமத்தியது. மேலும் கானின் மற்ற பேஸ்புக் பதிவுகள் குறித்து விசாரிப்பதாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த பதவிக்கு ஜாபர் உல் இஸ்லாம் கான் மன்னிப்பு கேட்டார்.[6][7]

இவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் முதல் நாள் விசாரணையிலே தள்ளுபடி செய்யப்பட்டது.[8]

குறிப்புகள்

தொகு
  1. Charity Alliance
  2. "Charity Alliance". பார்க்கப்பட்ட நாள் 27 August 2007.
  3. International, Orient Press. "Brief Bio: Dr Zafar-ul-Islam Khan (India)". www.pharosmedia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  4. [1]
  5. "Zafar ul Islam Khan appointed chairperson of Delhi minorities commission". http://www.hindustantimes.com/delhi-news/zafarul-islam-khan-appointed-chairperson-of-delhi-minorities-commission/story-0DMDzZs9WXEe5K9k9mHftK.html. 
  6. https://theprint.in/india/delhi-minorities-commission-chief-charged-with-sedition-for-provocative-social-media-post/413112/
  7. https://www.indiatoday.in/india/story/delhi-police-fir-minorities-commission-chairman-inflammatory-content-social-media-india-muslims-1673568-2020-05-02
  8. https://www.indialegallive.com/constitutional-law-news/courts-news/lg-has-issued-show-cause-notice-to-zafarul-islam-khan-delhi-govt-tells-hc-99086[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாபர்_உல்_இஸ்லாம்_கான்&oldid=3925093" இலிருந்து மீள்விக்கப்பட்டது