ஜாய் ஜே. கைமபரம்பன்
ஜாய் ஜே. கைமபரம்பன் ( ஜெய் ஜெ கயிமபரம்பன் ) (Joy J. Kaimaparamban (Jōyi Je Kayimāparampan) பிறப்பு: அக்டோபர் 11, 1939) ஓர் இந்திய புதின எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பான்மையாக மலையாளத்தில் எழுதுகிறார். இந்தியாவின் கேரளாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கைமபரம்பன் ஆங்கில ஆசிரியராக கேரளாவின் பல பள்ளிகளில் பணியாற்றினார். [1] இளம் வயதிலேயே தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது இவர் குடும்பத்துடன் ஆலப்புழா (அலெப்பி) மாவட்டத்தில் உள்ள வயலாரில் வசித்து வருகிறார். இவர் தனது தாய்மொழியான மலையாளத்தில் பல புதினங்கள், சில நாடகங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை அனைத்தும் கோட்டயம், டி.சி புக்ஸ் மற்றும் எஸ்.பி.சி.எஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அகில இந்திய வானொலி இவரது பல சிறுகதைகள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பியுள்ளது. 1977 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் விருதை வென்றார் , அவரது முதல் புதினமான உரையூருணா பக்கலுகலுக்காகவும், 1990 ஆம் ஆண்டில் குங்குமம் பரிசை வென்றார். தி அஸூர் ஆஃப் சொலிசிட்யூட் என்பது ஆங்கிலத்தில் இவரது முதல் புதினமாகும்.
மலையாளத்தில் வெளியிடப்பட்ட நூல்கள்
தொகு- உராயூரன்னா பக்கலுகல் ( தி ஸ்லட் ஷெடிங் டேய்ஸ்) [1977, 1980, 1995]
- ஏகாந்தாதீரம் (தெ ஷோர் ஆஃப் லோன்லினஸ்) [1977, 1999]
- வஜியாரியதவர் ( பெர்சன்ஸ் அனவேர் ஆஃப் பாத் ) [1977]
- அஸ்வஸ்த சந்திகல் ( தி அன்பிளசண்ட் டூம்ஸ் ) [1978]
- உன்மதா நிமிஷங்கல் ( மொமண்ட்ஸ் ஆஃப் ஹாலிசினேசன்) [1979]
- துக்கம் தேடுன்னவர் (சீக்கர்ச் ஆஃப் சேட்னஸ்) [1979]
- மனசில் நிஜாலுகல் ( ஷேடோ ஆஃப் தெ மைண்ட்) [1981]
- திருச்சுவன்னவர் ( தி ரிட்டர்னீஸ்) [1982]
- புரம்தோடுகல் ( தி ஷெல்ஸ் ) [1984]
- வலயங்கள் ( த சர்க்கிள்ஸ் ) [1985]
- வனந்தர்கல் ( தெ இன்னர் பாரஸ்ட்ஸ் ) [1987]
- தீரபூமிகல் ( தெ கோச்டல் லேண்ட் ) [990]
- வால்மீகம் ( தி டெர்மிட்டரி ) [1995]
- சாகரகீதங்கல் ( பாலாட்ஸ் ஆஃப் தி சீ ) [1999]
ஆங்கிலம்
தொகு- தி ஸ்னேக் சார்மர் மற்றும் கிங் கோப்ரா [2013]
- தி சீகல்ஸ் [2013]
- தி ஆயுர்வேதிக் ஹீலர்[2010]
- தி அஸூர் ஆஃப் சொலிசிட்யூட் [2009]
மேற்கோள்கள்
தொகு- ↑ "dcbookstore.com - Author Details" (in மலையாளம்). puzha.com. Archived from the original on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 November 2009.