ஜாரவா பழங்குடியினர்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ஜாரவா பழங்குடியினர் (ஆங்கிலம் : Jarawa) அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வாழும் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர். ஜாரவா எனும் சொல்லிற்கு “மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள்.[2] இவர்களின் மரபணு சோதனையில் இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை.[3]

ஜாரவா பழங்குடியினர்
மொத்த மக்கள்தொகை
(250–400
240 (2001-மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தெற்கு அந்தமானின் மேற்கு பகுதி மற்றும் நடு அந்தமான் பகுதி, (அந்தமான் நிக்கோபார் தீவுகள்)
மொழி(கள்)
அந்தமான் மொழி
சமயங்கள்
சமயம் அற்றோர்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஒன்கே மக்கள், அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள், அந்தமானியப் பழங்குடிகள்
தெற்கு அந்தமான்
அந்தமான் தீவைக்காட்டும் படம் இதில் சிகப்பு நிறம் தெற்கு அந்தமானை காட்டுகிறது.
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°47′N 92°39′E / 11.783°N 92.650°E / 11.783; 92.650
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
பரப்பளவு1,347.7 km2 (520.3 sq mi)
உயர்ந்த ஏற்றம்456.6 m (1,498 ft)
உயர்ந்த புள்ளிKoiob
நிர்வாகம்
India
மத்திய பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
பெரிய குடியிருப்புபோர்ட் பிளேர் (மக். 100,186)
மக்கள்
மக்கள்தொகை181,949 (2001)
அடர்த்தி135 /km2 (350 /sq mi)
இனக்குழுக்கள்ஜாரவா பழங்குடியினர், அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள், ஒன்கே மக்கள் அந்தமானியப் பழங்குடிகள் மற்றும் ஷோம்பென் மக்கள்[1]

ஜாராவா பழங்குடி மக்களின் எண்ணிக்கை 250 முதல் 400 வரை இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். வெளி உலக தொடர்பின்றி தனிமையில் வாழும் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானின் மேற்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் வாழும் ஜாரவா மக்கள் விலங்குகளையும் அந்தமான் கடலில் மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். மேலாடையின்றி வாழும் இம்மக்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.

ஜாரவா பழங்குடி மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி மக்கள் இனத்தில் சேர்த்துள்ளது.[4] மேலும் இப்பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டிய மக்களாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை

தொகு

ஜாரவா ஆதிவாசிகள் அழிந்துவரும் இனமாக கருதப்படுவதால் அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்ல எவரையும் அரசு அணுமதிப்பதில்லை. ஆனாலும் தற்போது இவர்களின் மொத்த மக்கள் தொகையே 412 பேர்தான் என தோராயமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்விடம் தெற்கு மற்றும் நடு அந்தமான் பகுதிகளாகும்.[5]

ஜாரவா மக்கட்தொகை குறையக் காரணங்கள்

தொகு

ஜாரவா பழங்குடியினர் வாழும் பகுதிகளை கடக்கும் சுற்றுலா பயணீகளிடமிருந்தும், வேட்டைக்காரர்களிடமிருந்தும், இம்மக்கள் வாழும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைத்த தொழிலாளர்களிடமிருந்தும் பரவிய தொற்று நோய்களால் ஜாராவா மக்கள் பலர் இறந்துவிட்டனர்.[6].

ஜாரவா பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்

தொகு

சுற்றுலா பயணிகளாலும், வேட்டைக்காரர்களாலும் இப்பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர்[7][8]

ஜாராவா பழங்குடி மக்களை காக்க அரசின் நடவடிக்கைகள்

தொகு

ஜாரவா மக்களை வெளியாட்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசு இம்மக்களை பாதுக்காக்கப்பட்ட இனத்தவர்கள் என்று அறிவித்துள்ளது. எனவே அம்மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா செல்லும் பயணிகள், தாங்கள் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தவோ, ஜாரவா மக்களிடம் பேசவோ, புகைப்படம் எடுக்கவோ, ஜாரவா பழங்குடி பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்யவோ, தின்பண்டங்கள் வழங்கவோ கூடாது என்று அந்தமான் அரசு நிர்வாகம் சுற்றுலாக்களை இயக்கும் நிறுவனங்களுக்கு மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது.[9].அரசின் எச்சரிக்கைகளை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா நடத்துனர்களிடம் தண்டத்தொகை வசூலிப்பதுடன், அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்கிறது அந்தமான் அரசு நிர்வாகம்.[9][10]

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் இதர பழங்குடியினர்

தொகு
  1. அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள்
  2. ஒன்கே மக்கள்
  3. ஷோம்பென் மக்கள்[1]
  4. அந்தமானியப் பழங்குடிகள்[1]

இதனையும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 http://www.and.nic.in/C_charter/Dir_tw/pri_tri.htm
  2. Andrews, H.V. 2000. ‘Impact assessment around the Jarawa reserve, Middle and South Andaman Islands’, in Jarawa Contact – Ours with Them, Theirs with Us. K. Mukhopadhyay, R. K. Bhattacharya & B. N. Sarkar (eds). Kolkata, Anthropological Survey of India, pp. 72–96.
  3. மரபணுவில் சாதி! தி இந்து தமிழ் 05 பிப்ரவரி 2016
  4. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. p. 27. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  5. George van Driem (2001), Languages of the Himalayas: An Ethnolinguistic Handbook of the Greater Himalayan Region : Containing an Introduction to the Symbiotic Theory of Language, BRILL, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12062-9, ... The Aka-Kol tribe of Middle Andaman went extinct by 1921. The Oko-Juwoi of Middle Andaman and the Aka-Bea of South Andaman and Rutland Island were extinct by 1931. The Akar-Bale of Ritchie's Archipelago, the Aka-Kede of Middle Andaman and the A-Pucikwar of South Andaman Island soon followed. By 1951, the census counted a total of only 23 Greater Andamanese and 10 Sentinelese. That means that just ten men, twelve women and one child remained of the Aka-Kora, Aka-Cari and Aka-Jeru tribes of Greater Andaman and only ten natives of North Sentinel Island ...
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
  7. http://www.aljazeera.com/news/2014/02/india-ancient-jarawa-tribe-faces-sex-abuse-201421055339801910.html] [1] [2][3]
  8. "தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அந்தமான் நிகோபர் அரசு நோட்டீசு". Archived from the original on 2012-06-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02.
  9. 9.0 9.1 http://indiatogether.org/gtroad-society
  10. ஜாரவா பழங்குடியினரின் நிர்வாண காட்சிகளை நீக்க யூ டியுப் நிர்வாகத்திடம் இந்தியா கோரிக்கை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாரவா_பழங்குடியினர்&oldid=3573040" இலிருந்து மீள்விக்கப்பட்டது