ஜார்ஜ் கேலி
சர் ஜார்ஜ் கேலி (Sir George Cayley, திசம்பர் 27, 1773 - திசம்பர் 15, 1857) என்பவர் ஆங்கிலப் பொறியாளரும், வானூர்தியியலின் வரலாற்றில் மிக முக்கியமான நபரும் ஆவார். பலரது கூற்றுப்படி, இவரே முதன்முதல் பறத்தல் தொடர்பான கருத்தாக்கங்களில் நிபுணத்துவம் பெற்ற அறிவியலாளர். மேலும், இவரே முதன்முதலில் பறத்தலுக்கான அடிப்படைத் தத்தவங்களையும் பறத்தலில் உருவாகும் விசைகளையும் ஆராய்ந்தவர்.[1][2][3] 1799-இல் நிலை-இறக்கை பொருத்தப்பட்ட வானூர்தி வடிவமைப்பை செய்தார்; அது, ஏற்றம், உந்துகை, மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கென தனித்தனி அமைப்புகளைக் கொண்டிருந்தது.[4][5] இவர் வானூர்திப் பொறியியலில் மிகப்பெரும் நிபுணராவார், இவர் காற்றியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரே மனிதரை ஏற்றிச் செல்லக்கூடிய மிதவை வானூர்தியை வெற்றிகரமாக செயல்படவைத்தவர். ஒரு பறக்கும் வாகனத்தின் மீது செயல்படும் விசைகளான ஏற்றம், இழுவை, உந்துவிசை, மற்றும் எடை ஆகியவற்றைக் கண்டுணர்ந்தவராவார்.
சர் ஜார்ஜ் கேலி Sir George Cayley | |
---|---|
ஜார்ஜ் கேலி | |
பிறப்பு | ஸ்கார்பரோ, இங்கிலாந்து | 27 திசம்பர் 1773
இறப்பு | 15 திசம்பர் 1857 பிராம்ப்டன், இங்கிலாந்து | (அகவை 83)
தேசியம் | ஆங்கிலேயர் |
அறியப்படுவது | முதலாவது வெற்றிகரமான மனித மிதவை விமானத்தை வடிவமைத்தவர். |
குறிப்புதவிகள்
தொகு- ↑ "Sir George Cayley". Flyingmachines.org. பார்க்கப்பட்ட நாள் 26 July 2009.
- ↑ "The Pioneers: Aviation and Airmodelling". Archived from the original on 2019-02-08. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2009.
- ↑ "U.S Centennial of Flight Commission – Sir George Cayley". Archived from the original on 2008-09-20. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Aviation History". பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2009.
- ↑ "Sir George Cayley (British Inventor and Scientist)". பிரித்தானிக்கா. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2009.
வெளியிணைப்புகள்
தொகு- 2007 Biography of Sir George Cayley பரணிடப்பட்டது 2010-12-30 at the வந்தவழி இயந்திரம்
- Cayley's principles of flight, models and gliders பரணிடப்பட்டது 2005-12-14 at the வந்தவழி இயந்திரம்
- Cayley's gliders
- Some pioneers of air engine design
- Sir George Cayley – Making Aviation Practical பரணிடப்பட்டது 2008-09-20 at the வந்தவழி இயந்திரம்
- Sir George Cayley பரணிடப்பட்டது 2019-02-08 at the வந்தவழி இயந்திரம்
- Sir George Cayley: 'Father of Aerial Navigation' (1773–1857) Notes and Records of the Royal Society of London, Vol. 17, No. 1 (May, 1962), pp. 36–56
- Ackroyd, J.A.D. "Sir George Cayley, the father of Aeronautics". Notes and Records of the Royal Society of London 56 (2002) Part 1 (2), pp167–181, Part 2 (3), pp333–348