ஜார்ஜ் சி. மெக்விட்டி

ஜார்ஜ் குன்லிப் மெக்விட்டி(George Cunliffe McVittie) FRSE FRSE OBE FRSE OBE (1904 - 1988) ஒரு பிரித்தானியக் கணிதவியலாளரும் அண்டவியலாளரும் ஆவார்.[1] கதிரலை வானியலுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அவர் மிகவும் பெயர்பெற்றார்.[2]

ஜார்ஜ் மெக்விட்டி உருவப்படம்

வாழ்க்கை. தொகு

மெக்விட்டி 1904 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி துருக்கியில் உள்ள சுமிர்னாவில் பிறந்தார் , அங்கு அவரது தந்தை பிராங்க் எசு. மெக்விட்டீ ஒரு வணிகர். அவரது தாயார் எமிலி கரோலின் வெபர் கிரேக்கத்தில் வசித்து வந்தார் , ஆனால் பிரித்தானியக் கால்வழியைச் சேர்ந்தவர்.[3] ஜார்ஜ் பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலிலும் வளர்ந்தார்.

1923 முதல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கணிதமும் இயற்பியலும் பயின்றார். பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் கிறித்து கல்லூரிக்குச் சென்றார் , அங்கு அவர் பேராசிரியர் ஆர்த்தர் எடிங்டனின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.[4][5] 1930 முதல் 1934 வரை இலீட்சு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் , 1933 முதல் 1933 வரை எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளாகவும் , 1936 முதல் 1958 வரை இலண்டன் கிங்சு கல்லூரி பல்கலைக்கழகத்திலசூயர் விரிவுரையாளராகவும் இருந்தார். 1933 இல் அரசு வானியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] இரண்டாம் உலகப் போரின் போது அவர் வானிலையியலில் பணியாற்றினார் , இது வானிலை ஆய்வு வெளியீடுகளுக்கும் வழிவகுத்தது.

1943 ஆம் ஆண்டில் அவர் எடின்பர்கு அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினராசுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டேவிடு கிப், ஐவர் எதரிங்டன், இராபர்ட் சுலாப், அலெக்சாந்தர் ஐத்கன் ஆகியோர் இவரை முன்மொழிந்தனர்.[8] 1948 முதல் இலண்டன் அரசி மேரி கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

பின்னர் 1952 முதல் 1972 வரை அமெரிக்காவில் அர்பானா - சாம்பெயின் இல் உள்ள இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார் , அங்கு அவர் ஒரு சிறிய வானியல் துறையை உருவாக்கினார். இது நாட்டின் முன்னணி வானியல் துறைகளில் ஒன்றாகும். 1962 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் அவருக்கு குகென்கெய்ம் ஆய்வுநல்கைகள் வழங்கப்பட்டன.[9] அவரது நிர்வாகத் திறனால் இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் செயலாளராக ஆனார்.[10]

1972 முதல் 1988 வரை கேன்டர்பரியில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியராக பணியாற்றினார் , அங்கு 1985 இல் தகைமை முனைவர் பட்டம் பெற்றார்.

அவர் 1988 மார்ச் 8 அன்று கேன்டர்பரியில் காலமானார்.

புகழ்மரபு தொகு

2417 மெக்விட்டி என்ற சிறுகோள் அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. மிச்சிகனில் உள்ள திரெய்தன் பிளைன்சில் உள்ள ஜார்ஜ் சி. மெக்விட்டி தொடக்கப்பள்ளியும் அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

குடும்பம். தொகு

1934 ஆம் ஆண்டில் மெக்விட்டி ஜான் சுட்டிராங் ,FRSE(1868 - 45). இன் மகளான மில்ட்ரெடு பாண்டு சுட்டிராங்கை மணந்தார் (1906 - 85)

வெளியீடுகள் தொகு

  • அண்டவியல் கோட்பாடு (1937) (2வது பதிப்பு 1949)
  • பொது சார்பியலும் அண்டவியலும் (1956) (2வது பதிப்பு 1965)
  • அண்டவியலில் உண்மையும் கோட்பாடும் (1961)[11]

பிற இணைப்புகள் தொகு

MAH Maccallum:Gorge Cunliffe McVittie (1904 - 1988மரசு வானியல் கழகத்தின் காலாண்டு இதழ் தொகுதி 30 1989 pp 119 - 122[12]

மேற்கோள்கள் தொகு

  1. "Independent Obituary". www-history.mcs.st-andrews.ac.uk.
  2. "George C. McVittie Papers, 1928, 1935, 1938-75 | University of Illinois Archives".
  3. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002. https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp2.pdf. 
  4. "George McVittie - The Mathematics Genealogy Project". www.genealogy.math.ndsu.nodak.edu.
  5. "George McVittie (1904-1988)". www-history.mcs.st-andrews.ac.uk.
  6. "Fellows of the RSE". www-history.mcs.st-andrews.ac.uk.
  7. "RAS Obituary". www-history.mcs.st-andrews.ac.uk.
  8. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002. https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp2.pdf. பார்த்த நாள்: 12 August 2017. 
  9. "George Cunliffe McVittie". Guggenheim Memorial Foundation. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018.
  10. "George McVittie". www.aip.org. 19 March 2015.
  11. "G C McVittie papers". www-history.mcs.st-andrews.ac.uk.
  12. MacCallum, M. A. H. (1989). "1989QJRAS..30..119M Page 119". Quarterly Journal of the Royal Astronomical Society 30: 119. Bibcode: 1989QJRAS..30..119M. https://articles.adsabs.harvard.edu/full/1989QJRAS..30..119M. பார்த்த நாள்: 2022-03-28. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_சி._மெக்விட்டி&oldid=3775176" இலிருந்து மீள்விக்கப்பட்டது