ஜார்ஜ் ஸ்டின்னி

ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர் (George Stinney) (அக்டோபர் 21, 1929 - ஜூன் 16, 1944) என்ற சிறுவன்தான் 20ஆம் நூற்றாண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிய வயது சிறுவன் ஆகும். அவனின் 14ஆம் வயதில் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இவன் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின சிறுவன் ஆகும்.[1]

ஜார்ஜ் ஸ்டின்னி
ஸ்டின்னியின் தோற்றம்
பிறப்பு(1929-10-21)21 அக்டோபர் 1929
Alcolu, South Carolina
இறப்பு16 சூன் 1944(1944-06-16) (அகவை 14)
கொலம்பியாதென் கரோலினா, அமெரிக்கா
தீர்ப்பு(கள்)முதல் நிலை கொலை
தண்டனைமின்சார நற்காலி மூலம்
தற்போதைய நிலைஇறந்தவர்
ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர்

அமெரிக்க நாட்டின் தென் கரோலினா மாகாணத்தில் வாழ்ந்துவந்த சிறுவன் தான் ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர் என்பவன். இவன் அமெரிக்க வெள்ளை இன குழந்தைகள் இருவரை (பின்னீகர்(11), மேரி எம்மா தாமஸ்(8) கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டான். 1944 மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டான். ஜார்ஜ் கைது செய்யப்பட்டான்இதற்கு உடல் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு நீதிபதி ஜூரி என்பவர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கு 3 மணி நேரமே நடந்தது, அதற்கு நீதிபதி 10 நிமிடத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார். அதன்பின் ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியருக்கு மின்சார நார்காலி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.[2]

ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர் உண்மையிலேயே குற்றவாளியா என்று யாரும் கேள்வி கேட்க தயாராக இல்லை. வரலாற்றில் நடந்த மோசமான தண்டனையாக இது கருதப்படுகிறது. அவன் இறப்பை இது ஒரு மோசமான நீதித்துறையின் வழிகாட்டல் என்று கூறுகிறார்கள். அதன் பின்னர் அவனின் குடும்ப உறுப்பினர்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.[3]

வழக்கின் பின்னணி

தொகு

1944-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர், இரண்டு அமெரிக்க வெள்ளை இனக் குழந்தைகளைக் கொலைக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டான். இரண்டு வெள்ளை இனக் குழந்தைகள் புகைவண்டி பாதையருகில் விளையாடிக்கொண்டிருந்தனர்.[4] அவர்களிடம் ஜார்ஜின் தங்கை கேதரீனா பேசன் பூ ஒன்று கேட்டுள்ளார்; அவர்கள் கொடுக்கவில்லை அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை; ஆனால் அடுத்தநாள் பக்கத்திலிருந்த சேற்று நீர் நிறைந்த ஒரு பள்ளத்தில் இரு வெள்ளை இன குழந்தைகளௌடைய உடல்களும் கிடைத்தது.[5]

சோதனை

தொகு

ஜார்ஜ் ஸ்டின்னி குற்றம் சாட்டப்பட்டபின் அவனுடய தந்தை வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஊரைவிட்டு துரத்தப்பட்டார்கள். 81 நாள் விசாரணையின் போது கூட அந்த சிறுவனுக்கு எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை. அவனுக்காக சாட்சிகள் யாரையும் அழைக்கவும் இல்லை. இந்த வழக்கு 3 மணி நேரமே நடந்தது. அதற்கான கருத்தை 10 நிமிடங்களில் நடுவர் தெரிவித்தார்.[5]

இந்த வழக்கு நடுவரின் முன் ஒரு நாள் மட்டுமே நடந்தது. இவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் இதுவரை கிரிமினல் வழக்குகளுக்காக வாதாடியதில்லை. தண்டனை வழங்கிய போது சிறுவன் குற்றத்தை மறுத்தான்; ஆயினும் யாரும் அவனின் சொல்லை கேட்கவில்லை. முழுக்க முழுக்க இனவெறியை காரணம் காட்டியே இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டது.[4]

தூக்குத் தண்டனை

தொகு

1944ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி கொலம்பியாவில் உள்ள மத்திய சீர்திருத்த கல்லூரியில் மாலை 7.30 மணிக்கு தண்டனை நிறவேற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது தனது கையில் ஒரு விவிலியத்தை அவன் வைத்திருந்தான். அவன் 5 அடி 2 அங்குலம் மற்ரும் 40 கிலோ எடை கொண்டவனாக இருந்ததால் மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கட்ட கடினமாக இருந்தது. அதன் பின் முகத்தை துணி கொண்டு மூடினார்கள். பின்னர் 2400 வோல்ட் மின்சாரம் அவன் அமர்ந்துள்ள நாற்காலியில் மேல் பாய்ச்சப்பட்டது. அவன் மின்சாரம் பாய்ந்த நான்காவது நிமிடம் இறந்து போனான்.

ஜார்ஜ் ஸ்டின்னியில் மரண தண்டனையின் மூலம் இன பாகுபாடு புகுத்தப்பட்டு ஒரு அப்பாவி கொலைசெய்யப்பட்டுள்ளான்.[6][7]

சமீபத்திய சான்றுகள்

தொகு

ஜார்ஜ் ஸ்டின்னியில் மரண தண்டனை நடந்து 70 ஆண்டுகள் கழித்து அலாஸ்கா மாநிலத்தின் மான்ட்கோமரி நகரில் அமைந்துள்ள சமநீதிக்கான முயற்சிகள் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரியான் ஸ்டீவன்சன், ஜார்ஜுக்காக இறங்கள் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த சிறுவன் குற்றவாளி கிடையாது என்று நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் அதோடு இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் தெரிவிக்க்ககூடாது என்று தெரிவித்துள்ளார்.[5]

புத்தகம் விவரணம்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "When Killing a Juvenile Was Routine." Week in Review. New York Times. March 5, 2005.
  2. Daily Mail Nov. 6, 2013
  3. Maxwell, Zerlina (September 28, 2011). "Was the youngest person to be executed in the U.S. for the murder of two white girls innocent?". The Grio, NBC News. http://thegrio.com/2011/09/28/was-the-youngest-person-ever-executed-innocent.html. பார்த்த நாள்: June 24, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 "George Stinney, Youngest Executed." பரணிடப்பட்டது 2004-07-11 at the வந்தவழி இயந்திரம் Day to Day. SoundPortraits.org. Passaic, NJ. June 30, 2004.
  5. 5.0 5.1 5.2 Jones, Mark R. South Carolina Killers: Crimes of Passion. The History Press, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59629-395-0. (Chapter Five: "Too Young to Die. The Execution of George Stinney, Jr. (1944).) pp. 38-42.
  6. Edwards, David (October 3, 2011). "New evidence could clear 14-year-old executed by South Carolina". The Raw Story இம் மூலத்தில் இருந்து மே 30, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160530003313/http://www.rawstory.com/2011/10/new-evidence-could-clear-14-year-old-executed-by-south-carolina/. பார்த்த நாள்: June 24, 2012. 
  7. James, Joy. States of Confinement: Policing, Detention and Prisons. Macmillan, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-21777-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ஸ்டின்னி&oldid=3908911" இலிருந்து மீள்விக்கப்பட்டது