ஜா. சலேத்

தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்

ஜா. சலேத் (J. Saleth) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி,[1] திண்டுக்கல் நொச்சியோடைபட்டி அனுகிரகா சமூகவியல் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் மிக்கவராவார். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் பயணிக்கும் இவா் மகாகவி என்ற இதழின் துணை ஆசிரியர் பொறுப்பிலும் உள்ளார். ஜோ. சலோ, யாழ் ஆதன் உள்ளிட்ட புனைப் பெயரிலும் இவர் எழுதுகிறார்.

ஜா. சலேத்
ஜா. சலேத்
பிறப்பு(1982-07-20)20 சூலை 1982
திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
தொழில்பேராசிரியர், கவிஞர்
தேசியம்இந்தியர்
குடியுரிமை இந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்அலை மீதேறி
மானுடம் ஈர்த்த மாதர்கள்
கண்ணெதிரே போதி மரங்கள்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியச் செல்வர் விருது, கவிச்சுடரொளி
துணைவர்கள்மெர்சி ரோஸ்லின் டயானா
பிள்ளைகள்ச.மெ. ஆண்ஸ்டின் ஜோ
பெற்றோர்ஜான் போசுகோ, லூர்துமேரி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் ஜான் போசுகோ, லூர்துமேரி தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். மாமா அருமைநாதன் ஆசிரியர் சாந்தா தம்பதியினரால் வளர்க்கப்பட்டார். பள்ளிப் படிப்பை கூத்தலூர் புனித செபசுதியார் நடுநிலைப் பள்ளி மற்றும் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மற்றும் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகியவற்றிலும் பயின்றார். ஐக்கூ, சென்ரியூ, ஐபுன், லிமரிக்கு, கசல் ஆகிய அயலகக் கவிதை வடிவங்களை ஆய்வு செய்து திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

எழுத்தாளர்

தொகு

பத்தாம் வகுப்பு படிக்கிற போது செம்மண் பாதையில் என்னும் ஒரு சிற்றிதழில் வெளியான ஒரு கவிதையோடு இவருடைய எழுத்துப்பணி தொடங்கியது. இதுவரை 37 நூல்களை எழுதியுள்ளார். வளரும் இளமை நன்னெறி பாடத்திட்ட ஆசிரியர் குழு உறுப்பினராகவும், மதுரை இயேசு சபை தொடர்பாணைக்குழு உறுப்பினராகவும், வைகறை பதிப்பகப் பயிற்சிகள் ஒருங்கிணைப்பாளராகவும், திண்டுக்கல் இதயா கூடார செயல் தலைவராகவும், யுகன் மின்வெளி காட்சி இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவங்களை கொண்டுள்ளார். தமிழ் இலக்கிய ஆய்வுகள், ஆளுமை மாதிரிகளை முன்னிறுத்தும் படைப்புகள், அயலகக் கவிதை வடிவங்கள் குறித்த ஆய்வுநூல்கள், கவிதை நூல்கள், தன்னம்பிக்கை கட்டுரை நூல்கள் உள்ளிட்ட நூல்களை தொடர்ந்து எழுதிவருகிறார்.

ஆய்வாளர்

தொகு

அந்தமானியில் நடைபெற்ற தமிழ் ஐக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியது உள்பட தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில் 16 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இரண்டு பன்னாட்டுக் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து வழி நடத்தியுமுள்ளார்.

பயிற்சியாளர்

தொகு

அக ஒருங்கிணைப்புப் பயிற்சி, ஆவணப்படுத்துதல் பயிற்சி,[2] ஆளுமை பயிற்சி, ஊடகக்கல்விப் பயிற்சி, எழுத்தாளர் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி உள்ளிட்ட எண்ணற்ற பயிற்சிகளை பாசம் என்கிற பெயரில் இயங்கும் பயிற்சியாளர் குழுவுடன் இணைந்து பல்வேறுபட்ட குழுக்களுக்கு தொடர்ந்து நடத்தி வருகிறார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • விலங்கொடிய
  • சிந்தைக்கு எட்டிய சிகரங்கள்
  • வடுக்கள்
  • அலை மீதேறி[3]
  • மனசு விழியாகி
  • திருநிறை திருப்பத்தூர்
  • பத்திரிகைகளின் அரசியல்
  • இளையோர் திறன் உயர
  • ஆளுமை மாதிரிகள்
  • நம்பிக்கை விதைகள்
  • பாலியல் புரிதல்கள்
  • செவி கொடு செயல்படு
  • கவிதை தமிழில் கஸல்
  • சொல்வதெல்லாம் உண்மை போல
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்களான நிகழ்வுகள்
  • ஊடகக் கல்வி பாடல்கள்
  • முல்லைப் பெரியாறு
  • இதயம் இயங்கும் வரை
  • திருத்தந்தை 266
  • சிறகை விரிப்போம்
  • ஏன் இப்படி அதுவே ஏணிப்படி
  • மானுடம் ஈர்த்த மாதர்கள்[4]
  • இரக்கத்தின் இரட்சகரே
  • முள்மரம் கொல்க
  • வாசிப்புப் பழக்கம்
  • கண்ணெதிரே போதி மரங்கள்[5]
  • பயம் நீங்கி சுயம் பெற
  • செயலே சிறந்த சொல்
  • கவிதை தமிழின் நோக்கும் போக்கும்
  • இலக்கே உனது கிழக்கு
  • உனக்கு நீயே விளக்கு
  • மௌனத்தால் ஒரு யுத்தம்
  • முதல் நாள் மழை
  • யுகனும் நானும்
  • இந்திய எதிர்ப்புப் போரும் புலிகளும்
  • ஆதன்
  • சரித்திர தேர்ச்சி கொள் [6]

விருதுகள்

தொகு
  • சுவாமி விவேகானந்தர் விருது, பாரதி யுவகேந்திரா, 2005.
  • இலக்கியச் செல்வர் விருது,[7] கத்தோலிக்க கிறித்தவ கலை இலக்கியமன்றம், மதுரை, 2016.[8]
  • தொல்காப்பியர் விருது, முத்தமிழ்ப் பாசறை பொன்னமராவதி, 2017
  • சிறந்த எழுத்தாளருக்கான அண்ணா விருது, காஞ்சி முத்தமிழ் சங்கம், 2019
  • நம்பிக்கை நாயகன் விருது, நந்தவனம் பவுண்டேசன், திருச்சிராப்பள்ளி, 2023
  • கவிச் சுடரொளி விருது, தமிழ் ஐக்கூ இரண்டாவது உலக மாநாடு,[9] அந்தமான், 2023
  • கிறித்தவ எழுத்தாளர் விருது, நம்மாழ்வு வார இதழ், 2023

மேற்கோள்கள்

தொகு
  1. மலர், மாலை (2016-10-17). "பொன்னமராவதி பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
  2. "பொன்னமராவதியில் ஆவணப்படம் வெளியீடு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/oct/05/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2784790.html. பார்த்த நாள்: 10 June 2023. 
  3. "அலை மீதேறி – Alai Meetheri – ஜோ. சலோ – பாவை பப்ளிகேஷன்ஸ் – Paavai Publications" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
  4. "அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2015/apr/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-1093016.html. பார்த்த நாள்: 10 June 2023. 
  5. "பொன்னமராவதியில் நூல் வெளியீட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2913197.html. பார்த்த நாள்: 10 June 2023. 
  6. "சரித்திர தேர்ச்சி கொள்". தினமணி. https://www.dinamani.com/specials/nool-aragam/2024/Mar/18/master-history. பார்த்த நாள்: 18 March 2024. 
  7. "பள்ளித் தமிழாசிரியருக்கு இலக்கியச் செல்வர் விருது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2016/aug/02/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87-2551079.html. பார்த்த நாள்: 10 June 2023. 
  8. மலர், மாலை (2016-08-01). "பொன்னமராவதி பள்ளி ஆசிரியருக்கு விருது". Maalaimalar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
  9. J.Thaveethuraj (2023-05-28). "தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் கவியரங்கம், கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு !". Angusam News - Online News Portal about Tamilnadu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.

புற இணைப்புகள்

தொகு

https://www.youtube.com/watch?v=2JB9rdatbBc

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜா._சலேத்&oldid=3912096" இலிருந்து மீள்விக்கப்பட்டது