ஜிசா கொலை வழக்கு

ஜிசா கொலை வழக்கு (Jisha murder case) 2016 ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலத்தை பரவலாக அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வன்கலவி மற்றும் கொலைக் குற்றமாகும், இது மே 2016 அன்று கேரள சட்டமன்ற தேர்தலின் போது மிகவும் பரவலாக அறியப்பட்ட குற்றமாக மாறியது.

சம்பவத்தின் பின்னணி

தொகு

எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் 29 வயதான சட்ட மாணவி ஜிசா , எர்ணாகுளத்தில் பெரும்பாவூரில் உள்ள கால்வாய் அருகே உள்ள அவரது வீட்டில் 28 ஏப்ரல் 2016 அன்று கொலை செய்யப்பட்டார். 28 ஏப்ரல் 8.30 அன்று அவரது வீட்டில் இறந்து கிடந்ததை அவரது தாயார் ராஜேஸ்வரி கண்டார். ஜிசா ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார் . அவர் தனது தாயுடன் வசித்து வந்தார், அவர்து தாயார் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். குடும்பத்திலிருந்து பிரிந்த அவரது தந்தை பப்பு,[1] தனியாக வாழ்ந்து வந்தார், 9 நவம்பர் 2017 அன்று இயற்கை மரணமடைந்தார்.[2] இவரது தாய் அதிர்ச்சிக்குள்ளானதாலும் மற்றும் அக்கம்பக்கத்தினர் அல்லது உறவினர்களுடனான சுமூகமான உறவுகள் இல்லாததால், விசாரணையின் ஆரம்ப கட்டங்களில் காவல் துறையினர் குழப்பமடைந்தனர். இது மற்ற காரணிகளுடன் ஆரம்பத்தில் வழக்கின் முன்னேற்றத்தை பாதித்தது..[3][4]

கொலை

தொகு

அவரது உடல் சிதைக்கப்பட்டு இருந்ததனையும் வெட்டுக்காயங்கள் இருந்ததினையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.வன்முறை, துன்புறுத்தல் மற்றும் மது ஊற்றியதையும் தடயவியல் நிபுணர்கள் கண்டறிந்தனர். குற்றவாளி கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி அவளது உள்ளுறுப்புகளை வெளியே எடுத்துள்ளான் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஜிசா 30 முறைக்கு மேல் குத்தப்பட்டார். அவளது மார்பில் ஒரு முறை குத்தப்பட்டுள்ளது. ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயமே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. தடயவியல் அதிகாரிகளின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட இரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் தாயனை பொருத்தத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கற்பழிப்பு முயற்சியை எதிர்த்தபோது ஜிசா கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். புலனாய்வாளர்கள் கொலை குறித்த ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

வழக்கின் தாக்கம்

தொகு

கேரள சட்டமன்ற தேர்தல் சமயத்தின் போது இந்த குற்றம் நடந்தது, எனவே அரசியல் கட்சிகளிடமிருந்து இந்த வழக்கின் மீது வேகமும் கவனமும் பெற்றது.பெரும்பாவூரில் ஒரு பெண் கொடூரமாக அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டது, ஜஸ்டிஸ் ஃபார் ஜிசா எனும் கொத்துக் குறி சமூக ஊடகங்களில் பம்மாலானது. ஜிசா வுக்கு நீதி கோரி திரையுலகமும் ஒன்று சேர்ந்தது. [5] ஜிசா வின் குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவியளிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது மற்றும் அவரது பெற்றோருக்கு ஒரு வீடு வழங்கப்படும். மேலும் பல கலைஞர்கள் மற்றும் மனிதாபிமானிகள் இந்த வழக்குக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தனர். [6]

கொலைகாரன் கைது

தொகு

காவல்துறையினரின் தொடர்ச்சியான தேடுதல் மற்றும் மக்கள் ஈடுபாட்டின் மூலம், ஜிசா கொலை வழக்கு ஒரு திருப்புமுனை மூலம் வந்தது. அசாமில் இருந்து வந்த ஒருவர் தனக்குத் தெரிந்த ஒரு தொழிலாளி குறித்த சந்தேகங்களை கேரள காவல்துறைக்குத் தெரிவித்தார். மேலும் 24 வயதான அமீர்-உல்-இஸ்லாம் குற்றவாளி என்பதை அறிந்து, தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் [7] கைது செய்யப்பட்டார். பெரும்பாவூரில் நடந்த கொடூரமான கொலையை அவர் ஒப்புக்கொண்டார். இந்த குற்றம் முந்தைய வெறுப்பு மற்றும் பழிவாங்கலால் தூண்டப்பட்டது மற்றும் குடிபோதையில் செய்யப்பட்டது என்று காவல்துறையினர் கண்டறிந்தனர்.

சான்றுகள்

தொகு
  1. "Jisha's father found dead at home". OnManorama. http://english.manoramaonline.com/news/kerala/2017/11/09/jisha-father-found-dead-at-home-perumbavoor.html. 
  2. "കൊല്ലപ്പെട്ട ജിഷയുടെ പിതാവ് പാപ്പുവിനെ വീട്ടിൽ മരിച്ചനിലയിൽ കണ്ടെത്തി". ManoramaOnline. http://www.manoramaonline.com/news/latest-news/2017/11/09/jisha-s-father-pappu-passed-away.html. 
  3. "Jisha's Rape and Murder was Pre-planned, Say Police". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2016-05-07. http://www.newindianexpress.com/states/kerala/Jishas-Rape-and-Murder-was-Pre-planned-Say-Police/2016/05/07/article3419593.ece. பார்த்த நாள்: 2016-07-26. 
  4. "As Jisha's killer was caught, her neighbourhood remained unmoved". The News Minute. 2016-06-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26.
  5. "Mollywood unites demanding justice for Jisha". Sify. Archived from the original on 2016-05-05. பார்க்கப்பட்ட நாள் 2016-05-08.
  6. "Govt announces Rs 10 lakh for jish's family". 2016-05-09. http://english.mathrubhumi.com/news/kerala/govt-announces-rs-10-lakh-to-jisha-s-family-english-news-1.1037776. 
  7. "Jisha murder case: Neighbour identifies Ameerul Islam". English.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசா_கொலை_வழக்கு&oldid=3539023" இலிருந்து மீள்விக்கப்பட்டது