ஜிஜோ பொன்னூஸ்
ஜிஜோ பொன்னூஸ் (Jijo Punnoose) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். மலையாளத் திரைப்படத்துறையில் படையோட்டம் (1982), மைடியர் குட்டிச்சாத்தான் (1984) ஆகிய இரண்டு முக்கிய படங்களை இயக்கியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். ஜிஜோ இயக்கிய படையோட்டம் இந்தியாவில் முதன்முதலில் உள்நாட்டில் எடுக்கப்பட்ட 70 மிமீ திரைப்படமாகும், மேலும் மைடியர் குட்டிச்சாத்தான் இந்தியாவின் முதல் 3டி திரைப்படமாகும் .[1] இவர் நவோதயா ஸ்டுடியோவைச் சேர்ந்த நவோதயா அப்பச்சனின் மகன்.
ஜிஜோ பொன்னூஸ் | |
---|---|
பிறப்பு | ஆலப்புழா, கேரளம் |
பணி | நடிகர் இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1962 – தற்போது |
ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்
தொகுஜிஜோ, கேரளத்தின் ஆலப்புழாவில் சிரோ மலபார் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நவோதயா அப்பச்சனின் மூத்த மகனாகப் பிறந்தார். இவர் கேரளத்தின் முதல் திரைப்பட படப்பிடிப்பு வளாகமான உதயா ஸ்டுடியோவை சொந்தமாக்கக் கொண்ட பெருமைக்குரிய மாலியம்புரக்கல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அது மலையாளத் திரையுலகின் மூதாதையர் இல்லமாகக் கருதப்படுகிறது. இவரது பெரியப்பா எம். எம். சாக்கோ குட்டநாட்டில் முதல் படகு சேவையை தொடங்கியவர்.
இவர் உதயா ஸ்டுடியோவை நிறுவிய பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் குஞ்சாக்கோவின் மருமகன் ஆவார். ஜிஜோ இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான குஞ்சாக்கோ போபனின் உறவினர்.
தொழில்
தொகுபடையோட்டம் நவோதயா அப்பச்சனால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். அதன் கதை தி கொன்ட ஓபி மான்டே கிறிஸ்டோ என்ற புதினத்தின் பாதிப்பால் உருவானது. இந்தியாவில் சுதேசி முறையில் எடுக்கப்பட்ட முதல் 70 மிமீ படம் இதுவாகும். 1984 இல், இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கினார்.[2][3][4]
திரைப்படவியல்
தொகுஆண்டு | தலைப்பு | நடிகர் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1962 | பார்யா | ஆம் | ||
1965 | இனபிரவுகள் | ஆம் | ||
1966 | திலோத்தமா | ஆம் | ||
1970 | பியர்ள் வியூ | ஆம் | ||
1980 | தீக்கடல் | உதவி இயக்குநர் | ||
1982 | படையோட்டம் | ஆம் | ||
1984 | மைடியர் குட்டிச்சாத்தான் | ஆம் | ||
1991 | பைபிள் கி கஹானியா | படைப்பு இயக்குநர்; தொலைக்காட்சி தொடர் | ||
2023 | பரோஸ்: கார்டியன் ஆப் டி'காமன்ஸ் டிரஷ்சர் [5] | திரைக்கதை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jijo Punnoose: The man who was a film institute unto himself". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
- ↑ "'My Dear Kuttichathan': Actor Sonia recalls memories from the shoot of India's first 3D film". thenewsminute. 29 September 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
- ↑ "Casting a Magic spell". தி இந்து. 15 May 2003. http://www.thehindu.com/thehindu/mp/2003/05/15/stories/2003051500260100.htm. பார்த்த நாள்: 14 November 2018.
- ↑ "Children's Day: 10 memorable Bollywood films". Mint. 14 November 2016. https://www.livemint.com/Consumer/djhr8pnc7PcV5dguS98WXJ/Ten-memorable-Bollywood-childrens-films.html. பார்த்த நாள்: 17 November 2018.
- ↑ "Mohanlal's directorial debut 'Barroz' to start filming from March 15th". TheCompleteActor.com. 1 March 2021. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.