ஜிபேசு குமார்
ஜிபேசு குமார் (Jibesh Kumar) (பிறப்பு 25 சூலை 1973) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜலே தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிபேசு குமார் தற்போது பீகார் அரசாங்கத்தில் தொழிலாளர் வளத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றி வருகிறார். [1] [2]
ஜிபேசு குமார் | |
---|---|
தொழிலாளர் வளத்துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 பிப்ரவரி 2021 | |
தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 பிப்ரவரி 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 சூலை 1973 பீகார் இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுசிதா மிஸ்ரா |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 1 மகள் |
பெற்றோர் | அமரர் ராம் கிரிபால் மிஸ்ரா |
முன்னாள் கல்லூரி | லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் |
அரசியல் பின்னணி
தொகுஜிபேசு குமார் 1981 முதல் 1998 வரை அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். இவர் 1998 முதல் 2002 வரை முதன்மை உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் இவர் 2002 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினராகப் பணியாற்றினார்.
பீகார் சட்டமன்றத்திற்கு 2015 ஆம் ஆண்டில் ஜலே தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் 2020 இல் அவர் அதே இடமான ஜாலே தொகுதியில் 21,796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பாரதீய ஜனதா கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4]
மேற்கோள்கள்
தொகு
- ↑ "BJP sitting MLA Jibesh Kumar wins with 87,321 votes". First Post. 10 Nov 2020.
- ↑ "Bihar State information technology minister Jibesh Kumar said renewed efforts would be made to attract investments in the IT sector in the state". ANI News. 26 March 2021.
- ↑ "Jale Election Result 2020 Declared: BJP sitting MLA Jibesh Kumar wins with 87,321 votes; ex-AMU student president Maskoor Usmani loses, secures 65,395 votes". First Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
- ↑ "Nine debutant ministers in Bihar cabinet". Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.