ஜியோகெலோன்
ஜியோகெலோன் | |
---|---|
ஜி. எலிகன்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஜியோசெலோன் பிட்ஜிஞ்சர், 1835
|
சிற்றினங்கள் | |
ஜியோகெலோன் எலிகன்சு |
ஜியோகெலோன் (Geochelone) என்பது ஆமைகளின் பேரினமாகும். பொதுவான ஆமைகள் அல்லது நில ஆமைகள் என்றும் அழைக்கப்படும் ஜியோகெலோன் ஆமைகள் தெற்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இவை முதன்மையாகத் தாவரங்களை உண்கின்றன.
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது இரண்டு சிற்றினங்கள் உள்ளது.
படம் | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
இந்திய நட்சத்திர ஆமை | ஜியோகெலோன் எலிகன்சு | இந்தியா, பாக்கித்தான் மற்றும் இலங்கை. | |
பர்மிய நட்சத்திர ஆமை | ஜியோகெலோன் பிளாட்டினோட்டா | மியான்மர் |
பல ஆமை சிற்றினங்கள் சமீபத்தில் இந்தப் பேரினத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. முன்னர் வரையறுக்கப்பட்ட இந்த பேரினம் ஐந்து கிளைகளுடன் பலதொகுதி மரபு உயிரினத் தோற்றம் உடையதாக இருந்தது.[1] இத்தொகுதியிலிருந்து நீக்கப்பட்ட ஆமைகளில் அல்டாப்ராசெலிசு (சீசெல்சு மற்றும் மடகாசுகர்), ஆசுட்ரோசெலிசு[2] (மடகாசுகர்), செலோனாய்டிசு (தென் அமெரிக்கா மற்றும் கலாபகசுத் தீவுகள் ), இசுடிக்மோசெலிசு[2] மற்றும் சென்ட்ரோசெலிசு (ஆப்பிரிக்கா) மற்றும் அழிந்துபோன மெகாலோசெலிசு (தெற்கு ஆசியா) ஆகியவை அடங்கும் . இந்த சிற்றினங்களின் வடிவங்கள் மற்றும் இடஞ்சார்ந்த தகுதியினை நினைவில் கொள்ளும் திறனுக்காகத் தனித்துவமானது. பாலூட்டிகளைப் போலவே, இந்த ஆமைகளும் தனது வழித்தடத்தினை நீண்ட கால நினைவகத்தில் நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் திசைகளையும் பாதைகளையும் நினைவில் கொள்கின்றன.[3]
புதைபடிவங்கள்
தொகு- † ஜியோகெலோன் புருசார்டி தெனெரிப் பெரும் ஆமை
- † ஜியோகெலோன் வல்கனிகா கிரான் கனேரியா பெரும் ஆமை
- † ஜியோகெலோன் ரோபசுடா மால்டா பெரும் ஆமை
இந்திய நட்சத்திர ஆமையின் ஓட்டின் வடிவம் ஒரு கோம்போக்கை ஒத்திருக்கிறது, இதனால் ஆமை தலைகீழாகக் கவிழும்போது மிக எளிதாகத் திரும்ப அனுமதிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Le, M.; Raxworthy, C. J.; McCord, W. P.; Mertz, L. (2006-05-05). "A molecular phylogeny of tortoises (Testudines: Testudinidae) based on mitochondrial and nuclear genes". Molecular Phylogenetics and Evolution 40 (2): 517–531. doi:10.1016/j.ympev.2006.03.003. பப்மெட்:16678445. http://www.iucn-tftsg.org/wp-content/uploads/file/Articles/Le_etal_2006.pdf.
- ↑ 2.0 2.1 {{Cite journal|last=Fritz|first=U.|last2=Bininda-Emonds, O. R. P.|date=2007-07-03|title=When genes meet nomenclature: Tortoise phylogeny and the shifting generic concepts of Testudo and Geochelone|journal=[[Zoology (journal)|publisher=Elsevier|volume=110|issue=4|pages=298–307|doi=10.1016/j.zool.2007.02.003|pmid=17611092}}
- ↑ Wilkinson, A., Chan, H. M., & Hall, G. (2007). Spatial learning and memory in the tortoise (Geochelone carbonaria). Journal of Comparative Psychology, 121(4), 412.
- Geochelone Report in Integrated Taxonomic Information System. Retrieved January 12, 2008.
வெளி இணைப்புகள்
தொகு- Chaco tortoise media at ARKive
- Care tips