ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன்

ஜி.ஐ. ஜோ2 வஞ்சம் (G.I. Joe: Retaliation) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கா நாட்டு அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜான் எம் சூ-வு இயக்க, டுவெயின் ஜான்சன், சானிங் டேட்டம், ரே பார்க், லுக் ப்ரேசி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

ஜி.ஐ. ஜோ2 வஞ்சம்
திற்றிகால் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஜான் எம் சூ-வு
தயாரிப்புலாரென்சோ டி பொனவெண்ட்சுரா
ப்ரியன் கோல்ட்னேர்
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130 மில்லியன்
மொத்த வருவாய்$375,740,705

கதை சுருக்கம்

தொகு

உலகை தன் கைக்குள் கொண்டு வர நினைக்கும், கோப்ரா படையின் சூத்திரதாரி ஸார்ட்டன் (அர்னால்ட் வாஸ்லூ), அமெரிக்க ஜனாதிபதியை (ஜோனத்தன் ப்ரைஸ்) சிறைபிடித்து, அவர் இடத்தில் தன் உருவம் மாற்றி உட்காருகிறான். தொடர் குண்டு வெடிப்பில் ஜோக்கள் பலியாக, தப்பிப் பிழைத்தவர்கள் மார்வின் (எ) ‌ரோட் ப்ளாக்(ட்வெய்ன் ஜான்சன்), பிளிண்ட் (டி ஜே காட்ரோனா) மற்றும் லேடி ஜேயி (அட்ரியன் பலிக்கி).

கோப்ரா படையின் கையில் சிக்கிய பாகிஸ்தான் ஏவுகணையை மீட்கும் அவர்கள் மேல், அதை கடத்தியதாக குற்றம் சாட்டி, குற்றவாளிகள் ஆக்குகிறார் ஸார்ட்டன். கோப்ரா படையில் சிக்கிய ஸ்டராம் ஷேடோவை (லீ ப்யுங்க் ஹுன்) காப்பாற்றி, தங்களுடன் சேர்த்துக் கொள்கிறார்கள் தப்பிய ஜோக்கள். வீட்டையே துப்பாக்கி கடையாக வைத்திருக்கும் முன்னாள் அமெரிக்க ஜெனரல் ஜோசப் கோல்டன் (ப்ரூஸ் வில்லிஸ்), தன் சகாக்களுடன் அவர்களுக்கு உதவ முன் வருகிறார். அமெரிக்க ஜனாதிபதியை காப்பாற்றி, உலகை கோப்ரா படையிடமிருந்து மீட்கும் ஜோக்களின் ஜாலங்கள் மீதி படம்!

நடிகர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி.ஐ._ஜோ:_ரிட்டாலியேசன்&oldid=2918349" இலிருந்து மீள்விக்கப்பட்டது