ஞா. கிருஷ்ணபிள்ளை
ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ("Gnanamuttu Krishnapillai") (வெள்ளிமலை) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஜி. கிருஷ்ணபிள்ளை G. Krishnapillai | |
---|---|
மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2012 | |
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
கிருஷ்ணபிள்ளை 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 20,675 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1] 2004, 2010 தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை. 2012 மாகானசபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[2] சில நாட்களின் பின்னர் கிருஷ்ணபிள்ளை உட்படக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் சேர வற்புறுத்தப்பட்டார்கள். ஆனாலும், எவரும் சேரவில்லை.[3] கிருஷ்ணபிள்ளை 2012 செப்டம்பர் 28 இல் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Election 2001 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
- ↑ "Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
- ↑ ஜெயராஜ், டி. பி. எஸ். (14 செப்டம்பர் 2012). "Military Intelligence Operatives 'Pressure' TNA Eastern Councillors Into Supporting UPFA Administration". dbsjeyaraj.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Eastern Province Chief Minister assumes duties". சண்டே டைம்சு. 30 செப்டம்பர் 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html.