ஜி. கே. எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
சென்னைக்கு அருகில் உள்ள கல்லூரி
ஜி. கே. எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (GKM College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகரான புது பெருங்களத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். 1996 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ சான்றைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு இந்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இங்கு வழங்கப்படும் பாடங்கள் புது தில்லி, தேசிய அங்கீகார வாரியத்தால் (NBA) அங்கீகாரம் பெற்றவை.
வகை | சுயநிதி |
---|---|
உருவாக்கம் | 1996 |
தலைவர் | முனைவர் ஜி. காத்தமுத்து |
முதல்வர் | முனைவர் சி செல்லப்பன் |
பட்ட மாணவர்கள் | பி.இ, பி.டெக்.,எம்.இ |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | எம்.இ., |
அமைவிடம் | ஆலப்பாக்கம் (சென்னைக்கு அருகில்) , , 12°53′44″N 80°07′19″E / 12.895581°N 80.121824°E |
வளாகம் | அரை நகர்ப்புறம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.gkmcet.net.in |
வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு:
இளநிலை
- பி.இ. உயிர்மருத்துவப் பொறியியல்
- குடிமைப் பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- கப்பல் பொறியியல்
- பி.இ. வானூர்தி பொறியியல்
- பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
- பி.இ. ஊர்திப் பொறியியல்
முதுநிலை
- எம்.இ. உயிர்மருத்துவப் பொறியியல்
- எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ. - கணினி உதவி வடிவமைப்பு
- எம்.இ. - தொடர்பியல் அமைப்புகள்
- எம்.இ. - உட்பொதிக்கப்பட்ட கணினி தொழில்நுட்பங்கள்
- எம்.இ. - கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி
- எம்.இ. - கட்டுமான பொறியியல் மற்றும் மேலாண்மை
- எம்.இ. - கணினி நெட்வொர்க்குகள்
- எம்.இ. - எண்ணியல் சமிங்ஞை செயலாக்கம்
- எம்.இ. - பொறியியல் வடிவமைப்பு
- எம்.டெக் - நானோ தொழில்நுட்பம்
- எம்.இ. - மின் அமைப்பு பொறியியல்
- எம்.இ. - மென்பொருள் பொறியியல்
- எம்.எஸ்சி - தகவல் தொழில்நுட்பம்
- எம்பிஏ - முதுநிலை வணிக மேலாண்மை
- எம்.சி.ஏ - முதுநிலை கணினி பயன்பாடு