ஜி. சுப்பிரமணிய ஐயர்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்
ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் (Ganapathy Dikshitar Subramania Iyer, 19 சனவரி 1855 – 18 ஏப்ரல் 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவராவார். இவர் 1878 செப்டம்பர் 20 அன்று தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளராகவும், மேலாண்மை இயக்குநராகவும், பதிப்பாளராகவும் இருந்தவர்.[1] சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் | |
---|---|
பிறப்பு | தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா | சனவரி 19, 1855
இறப்பு | ஏப்ரல் 18, 1916 சென்னை மாகாணம், இந்தியா | (அகவை 61)
பணி | விரிவுரையாளர், இதழிலியலாளர், தொழில் முனைவோர் |
பெற்றோர் | கணபதி தீட்சிதர் |
சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND". S. Muthiah. The Hindu. 13 செப்டம்பர் 2003. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help)