மு. வீரராகாவாச்சாரியார்

இந்திய ஊடகவியலாளர், சுதந்திர ஆர்வலர்

முதும்பை வீரராகவாச்சாரியர் (M. Veeraraghavachariar) (1857-1906) ஓர் இந்திய பத்திரிகையாளரும், சுதந்திர போராட்ட வீரரும், முந்தைய சென்னை மாகாணத்தில் ஆசிரியரும் ஆவார். தி இந்து செய்தித்தாளின் நிறுவனர்களில் ஒருவரான இவர் 1878 முதல் 1905 வரை அதன் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

வீரராகவாச்சாரியார், செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வடக்கப்பட்டு என்ற கிராமத்தில் ஒரு வைணவ ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார்.[1] சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து பட்டம் பெற்றார். பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இந்த சமயத்தில், இவர் சக ஆசிரியரான ஜி. சுப்பிரமணிய ஐயருடன் நெருங்கிய நட்பு கொண்டார்.

தி இந்து நிறுவனம்

தொகு

1878ஆம் ஆண்டில், 21 வயதான வீரரகவாச்சாரியாரும் இவரது நான்கு நண்பர்களான ஜி. சுப்பிரமணிய ஐயர், டி. டி. ரங்காச்சாரியார், பி. வி. ரங்காச்சாரியார், டி. கேசவராவ் பந்துலு, நயாபதி சுப்பா ராவ் பந்துலு ஆகியோர் சேர்ந்து பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க "தி டிரிப்ளிகேன் சிக்ஸ்" என்ற ஆங்கில மொழி செய்தித்தாளை நிறுவினார்.[1] வீரராகவாச்சாரியார், சுப்பிரமணிய ஐயர் இருவரும் கல்லூரியில் விரிவுரையாளர்களாக இருந்தனர், மீதமுள்ள அனைவரும் மாணவர்கள் ஆவர்.

தி இந்து

தொகு

இது நிறுவப்பட்ட உடனேயே, நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலானாவர்கள் வழக்கறிஞர்களாகப் பழகுவதற்காக பிரிந்தனர்.[2] பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரும், நிர்வாக இயக்குநர் வீரராகவாச்சாரியரும் மட்டுமே எஞ்சியிருந்தனர். சுப்பிரமணிய ஐயர் தைரியமான நிலைப்பாட்டை எடுத்து பிரித்தானியர்களையும் இந்து மரபுவழியையும் கேள்வி எழுப்பினார். வீரராகவாச்சாரியர், மாறாக, ஒரு மிதமான கொள்கையை கடைபிடித்து சுப்பிரமணிய ஐயரின் போர்க்குணமிக்க கருத்துக்களை எதிர்த்தார். சித்தாந்தங்களின் வேறுபாடு இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. தி இந்து பத்திரிகையின் சில தலையங்கங்களில் ஐயரின் நண்பர் எர்ட்லி நார்டன் மீது வீரராகவாச்சாரியர் கடுமையாக விமர்சனத்தை வைத்தபோது இந்த பிளவு மேலும் அதிகரித்தது. இந்து சமுதாயத்தைப் பற்றிய சுப்பிரமணிய ஐயரின் புரட்சிகர கருத்துக்கள் செய்தித்தாளுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தன. விரைவில், அது அதன் உரிமையாளர்களை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளத் தொடங்கியது.

1898 ஆம் ஆண்டில், ஜி. சுப்பிரமணிய ஐயர் தி இந்துவை விட்டு வெளியேறி, சுதேசமித்ரனின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார். தனியாக, வீரராகவாச்சாரியர் கோ. கருணாகர மேனனை தலைமை ஆசிரியராக நியமித்து 1901இல் செய்தித்தாளை ஒரு கூட்டு-பங்கு நிறுவனமாக மாற்ற முயன்றார். பெரும் கடனிலிருந்து செய்தித்தாளை மீட்கும் திட்டம் தோல்வியடைந்தது. நெருக்கடியை எதிர்கொண்ட வீரராகவாச்சாரியர் 1904-05 இல் செய்தித்தாளை விற்றார். இந்தப் பத்திரிக்கையை எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார் ஏப்ரல் 1905இல் வாங்கினார்.

இறப்பு

தொகு

வீரராகவாச்சாரியர் 1906இல் தனது 47 வயதில் இறந்தார்.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Muthiah, Pg 94
  2. Muthiah, Pg 95

குறிப்புகள்

தொகு
  • Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._வீரராகாவாச்சாரியார்&oldid=4160888" இலிருந்து மீள்விக்கப்பட்டது