எ. இரங்கசுவாமி ஐயங்கார்

இந்திய அரசியல்வாதி

எ. இரங்கசாமி ஐயங்கார் (A. Rangaswami Iyengar) (ஜூலை 1877 - பிப்ரவரி 4, 1934) ஓர் இந்திய பத்திரிகையாளரும், வழக்கறிஞரும், அரசியல்வாதியுமாவார். இவர் மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும், 1928 முதல் 1934 இல் தான் இறக்கும் வரை தி இந்துவின் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் மருமகனாவார்.

எ. இரங்கசாமி ஐயங்கார்
கரிக்கோலால் வரையப்பட்ட எ. இரங்கசாமி ஐயங்காரின் ஓவியம்
பிறப்புஜூலை 1877
எருகத்தூர், சென்னை மாகாணம்
இறப்பு4 பிப்ரவரி 1934 (வயது 56)
சென்னை, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பணிவழக்கறிஞர், இதழிலியலாளர், அரசியல்வாதி
பணியகம்தி இந்து
அறியப்படுவதுஇதழிலியல், பிரித்தானிய அரசியலமைப்பு நிபுணத்துவம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இரங்கசாமி ஐயங்கார் 1877 ஜூலையில் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள எருகத்தூர் கிராமத்தில் நரசிம்ம அய்யங்காருக்கு பிறந்தார். சென்னையில் சட்டம் பயின்றார். படிப்பு முடிந்ததும் மதராசு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.[1]

தொழில் தொகு

1905 ஆம் ஆண்டில் கஸ்தூரி ரங்க ஐயங்கார் தி இந்துவை வாங்கியபோது, இவரை உதவி ஆசிரியராக நியமித்தார். இவர் 1905 முதல் 1915 வரை பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.[2] நிறுவனத்தின் மற்றொரு வெளியீடான சுதேசமித்ரனின் விவகாரங்களை நிர்வகிக்க உதவி ஆசிரியர் பணியிலிருந்து விலகினார் . பின்னர், சுயாட்சிக் கட்சியில் சேர்ந்து 1925 முதல் 1927 வரை அதன் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

இரங்கசாமி, 1923 மற்றும் 1926 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை மத்திய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ். இரங்கசாமி ஐயங்கார் 1926 இல் இறந்தபோது, இவர், தி இந்துவுக்குத் திரும்பி 1928 முதல் 1934 வரை அதன் முதன்மை ஆசிரியராக பணியாற்றினார் முதன்மை ஆசிரியராக இருந்த காலத்தில், இவர் 1931 இல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.

இறப்பு தொகு

இவர், 1934 இல் இறந்தார். இவருக்குப் பிறகு தி இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக கஸ்தூரி சீனிவாசன் இருந்தார்.

இதையும் காண்க தொகு

படைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Copley, Antony R. H. (1986). C. Rajagopalachari, Gandhi's southern commander. Indo-British Historical Society. பக். 240. 
  2. Copley, Antony R. H. (1986). C. Rajagopalachari, Gandhi's southern commander. Indo-British Historical Society. பக். 240. Copley, Antony R. H. (1986). C. Rajagopalachari, Gandhi's southern commander. Indo-British Historical Society. p. 240.

வெளி இணைப்புகள் தொகு

  • "Portrait of A. Rangaswami Iyengar at the National Portrait Gallery". National Portrait Gallery.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._இரங்கசுவாமி_ஐயங்கார்&oldid=3285686" இலிருந்து மீள்விக்கப்பட்டது