க. கோபாலன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கஸ்தூரி கோபாலன் (K. Gopalan) (8 நவம்பர் 1890 - 9 டிசம்பர் 1974) ஓர் இந்திய வெளியீட்டாளர் ஆவார். இவர் கஸ்தூரி & சன்ஸ் என்ற வெளியீட்டு நிறுவனத்தை நிறுவினார். இது தி இந்து என்ற பத்திரிக்கையை வெளியிடுகிறது.
கஸ்தூரி கோபாலன் | |
---|---|
பிறப்பு | கோயம்புத்தூர், சென்னை மாகாணம் | 8 நவம்பர் 1890
இறப்பு | 9 திசம்பர் 1974 சென்னை, பிரித்தானிய இந்தியா | (அகவை 84)
பணி | வெளியீட்டாளர் |
வாழ்க்கைத் துணை | இரங்கநாயகி |
பிள்ளைகள் | கோ. நரசிம்மன், கோ. கஸ்தூரி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகோபாலன், கோயம்புத்தூரில் 1890 நவம்பர் 8 ஆம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார் என்ற வழக்கறிஞருக்கு இளைய மகனாகப் பிறந்தார். கஸ்தூரி ரங்க ஐயங்கார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற வைணவ பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். கஸ்தூரி சீனிவாசன் இவரது மூத்த சகோதரர்
தொழில்
தொகுசீனிவாசன், ஏ. இரங்கசாமி ஐயங்காரும் சீ. இரங்கசாமி ஐயங்காரும் தி இந்து பத்திரிக்கையை வெளியிடுவதில் ஈடுபட்டிருந்தாலும், கோபாலன் கஸ்தூரி அண்ட் சன்ஸ் விவகாரங்களை நிர்வகித்தார். இது செய்தித்தாள், ஸ்போர்ட் அன்ட் பாஸ்டைம், பிரண்ட்லைன், துடுப்பாட்ட ஆண்டு புத்தகம் போன்ற பத்திரிகைகளையும் வெளியிட்டது.
இறப்பு
தொகுஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வெளியீட்டாளராக பணியாற்றிய கோபாலன் 1974 திசம்பரில் தனது 84 வயதில் இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகோபாலன் இரங்கநாயகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் தி இந்து குழுமத்தில் பணியாற்றினர்.