சீ. இரங்கராஜன்
இந்தியப் பத்திரிக்கையாளர்
சீனிவாசன் இரங்கராஜன் (Srinivasan Rangarajan) (10 ஏப்ரல் 1936 – 8 பிப்ரவரி 2007) ஓர் இந்திய பத்திரிகையாளரும், தொழில்முனைவோரும், துடுப்பாட்ட வீரரும், திரைப்படத் தயாரிப்பாளரும், சமூகவாதியுமாவார். இவர், இந்திய பத்திரிகையாளரும் தொழிலதிபருமான கஸ்தூரி சீனிவாசனின் இளைய மகனும், [[கஸ்துரி இரங்க ஐயங்காரின் பேரனுமாவார்.
சீ. இரங்கராஜன் | |
---|---|
பிறப்பு | சீனிவாச இரங்கராஜன் 10 ஏப்ரல் 1936 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 8, 2007 | (அகவை 70)
பணி | பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇரங்கராஜன் சென்னையில் ஏப்ரல் 10, 1936 அன்று தி இந்துவின் ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான கஸ்தூரி சீனிவாசனுக்கு பிறந்தார். சென்னையில் படித்த இவர் 1958இல் தி இந்துவின் இயக்குநரானார்.
திரைப்பட தயாரிப்பாளராக
தொகு- கௌரவம் (1973)
- வசந்தத்தில் ஓர் நாள் (1981)
- கண்மணியே பேசு (1985)
- லட்சுமி வந்தாச்சு (1986)
- ஒரே ஒரு கிராமத்திலே (1987)