கோ. கருணாகர மேனன்

இந்திய அரசியல்வாதி

திவான் பகதூர் கோழிச்சேரி கருணாகர மேனன் (Cozhisseri Karunakara Menon) (1863-1922) ஓர் இந்திய பத்திரிகையாளரும் முந்தைய சென்னை மாகாணத்தின் அரசியல்வாதியும் ஆவார். தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஜி. சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு தி இந்துவின் இரண்டாவது ஆசிரியராகவும், "த இன்டியன் பேட்ரியாட்" என்ற பத்திரிக்கையின் நிறுவனராகவும் இருந்தார்.

கோழிச்சேரி கருணாகர மேனன்
பிறப்பு1863
பரப்பனங்காடி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம்
இறப்பு1922
பரப்பனங்காடி, [[கேரளம்}கேரளா]]
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
பணிபத்திரிக்கையாளர், அரசியல்வாதி
அரசியல் கட்சிசுதந்திர வீரர்
வாழ்க்கைத்
துணை
பாருக்குட்டி அம்மா

கருணாகர மேனன் மலபார் மாவட்டத்தின் பரப்பனங்காடியில் பிறந்தார். பின்னர், சென்னையில் உயர் கல்வியைப் பெற்றார். இவர் 1898 வரை தி இந்துவின் துணை ஆசிரியராகவும், 1898 முதல் 1905 வரை முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1905 ஆம் ஆண்டில், இவர் "த இன்டியன் பேட்ரியாட்" என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். இது பின்னர், 1924இல் மூடப்பட்டது. இவர் ஒரு முக்கிய பொது மனிதராக இருந்தார். மேலும் தனது கால அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றார்.

மேனன், 1922ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் பரப்பனங்காடியில் உள்ள 'கோழிச்சேரி' என்ற தனது இல்லத்தில் இறந்தார். வி. கிருஷ்ணசாமி ஐயர், மு. வீரராகாவாச்சாரியார், ஜி. சுப்பிரமணிய ஐயர், சென்னை ஆளுநர் சர் ஆர்தர் லாலே ஆகியோரால் இவர் மிகவும் மதிக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கருணாகர மேனன் சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தில் உள்ள பரப்பநங்காடியைச் சேர்ந்த நாயர் குடும்பத்தில் (கோழிச்சேரி தரவாடு) பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். பின்னர், தி இந்துவில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.[1]

பொது வாழ்க்கை

தொகு

பட்டப்படிப்பின்போது, 1890ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த டி.முத்துசாமி ஐயரின் மலபார் திருமண சட்டத்தை எதிர்த்தபோது இவர் பொது வாழ்க்கையில் இறங்கினார்.[1] [2] [3] இந்தச் சட்டத்துக்கு மேனனின் எதிர்ப்பு முத்துசாமி ஐயரை மிகவும் கவர்ந்தது. இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு வளர்ந்தது. இந்த நேரத்தில், மேனன் திருவிதாங்கூரின் திவானாக இருந்த டி. மாதவ ராவுடன் நட்பை வளர்த்துக் கொண்டார்.

தி இந்துவில்

தொகு

தி இந்து பத்திரிகையின் ஆசிரியரான ஜி. சுப்பிரமணிய ஐயர் வெல்பி குழு முன் சாட்சியங்களை வழங்க ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றபோது, மேனன் அவர் இல்லாத நேரத்தில் செய்தித்தாளை நடராஜன் என்பவரின் உதவியுடன் நிர்வகித்தார்.[1] பின்னர் இவர் இன்டியன் சோசியல் ரிபார்ம்ஸ் என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.[4]

அக்டோபர் 1898இல் மு. வீரராகாவாச்சாரியார் தி இந்துவில் பொறுப்பேற்றபோது, கருணாகர மேனனை ஆசிரியராக நியமித்தார்.[5] மேனன் தி இந்துவில் 1905 வரை பணியாற்றினார்.[4][6]

தனிப் பத்திரிக்கை

தொகு

"த இன்டியன் பேட்ரியாட்" ஒரு கடினமான பாதையில் சென்றது. இந்திய தேசிய காங்கிரஸை வெளிப்படையாக ஆதரித்த அக்கால சில செய்தித்தாள்களில் இதுவும் ஒன்றாகும்.[7] இது அலிபூர் வெடிகுண்டு வழக்கைத் தொடர்ந்தவர்களை கடுமையாக எதிர்த்ததுடன், சட்டம் ஒழுங்கின் பக்கம் நிற்பதாகக் கூறியது.[4]

இதற்கு பதிலளித்த ஆங்கிலேயர்கள் கருணாகர மேனனின் உதவிக்காக "திவான் பகதூர்" என்று கௌரவித்தனர்.[7]

மேனன் தீவிரவாதிகளையும் பிரித்தானிய நிறுவனங்களையும் எதிர்த்தார். மேலும், யாருக்கும் ஆதரவு இல்லாமலும் இருந்தார். பின்னர், செலவினங்களைச் சமாளிக்க தனது செய்தித்தாளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[8] [9]

இவர், ஹோம் ரூல் இயக்கத்தை ஆதரித்தார்.[10] பிராமணரல்லாத இயக்கத்தின் அரசியல் ஆசைகளை இவர் எதிர்த்தபோதும், அவர்களின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இவர் ஆதரவளித்தார். [7]

இறப்பு

தொகு

பக்கவாதம் தொடர்பான சிக்கல்களால் மேனன் 1922 இல் பரப்பனங்கடியில் உள்ள தனது இல்லமான கோழிச்சேரி வீட்டில் இறந்தார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Some Madras Leaders, Pg 88
  2. Some Madras Leaders, Pg 87
  3. A short essay by Karunakara Menon on the Malabar Marriage Bill
  4. 4.0 4.1 4.2 Some Madras Leaders, Pg 89
  5. S. Muthiah. "Willing to strike and not reluctant to wound". 
  6. Muthiah, S. (1989). Tales of Old and New Madras: The Dalliance of Miss Mansell and 34 Other Stories of 350 Years. Affiliated East-West Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185336253.
  7. 7.0 7.1 7.2 Some Madras Leaders, Pg 90
  8. Muthiah, S. (1989). Tales of Old and New Madras: The Dalliance of Miss Mansell and 34 Other Stories of 350 Years. Affiliated East-West Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185336253.Muthiah, S. (1989). Tales of Old and New Madras: The Dalliance of Miss Mansell and 34 Other Stories of 350 Years. Affiliated East-West Press. p. 53. ISBN 8185336253.
  9. Some Madras Leaders, Pg 91
  10. Some Madras Leaders, Pg 93
  11. Ralhan, O. P. Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT. LTD. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8174888659.

குறிப்புகள்

தொகு
  • Some Madras Leaders. 1922. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.

படைப்புகள்

தொகு
  • Menon, C. Karunakara (1890). Observations on the Malabar Marriage Bill. National Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._கருணாகர_மேனன்&oldid=3194971" இலிருந்து மீள்விக்கப்பட்டது