ஜி. டி. என். கலைக் கல்லூரி
ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி தகுதி பெற்ற இருபாலர் கலைக் கல்லூரி ஆகும்.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1964 சூலை 2 |
முதல்வர் | முனைவர்.பெ.பாலகுருசாமி |
அமைவிடம் | திண்டுக்கல், கரூர் சாலை , , 624005 , 10°23′44″N 77°59′44″E / 10.3955255°N 77.9954179°E |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்ஏஏசி பி தகுதி |
இணையதளம் | http://www.gtnarts.org |
வரலாறு
தொகுஇக்கல்லூரிக்கான அடிக்கல்லானது 1964 சனவரி 20 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான எம். பக்தவத்சலத்தால் நாட்டப்பட்டது. இதன் பிறகு கல்லூரியானது 1964 சூலை 2 அன்று திறக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட முதல் ஆண்டில், கல்லூரியானது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. 1965 ஏப்ரலில், மதுரை பல்கலைக்கழகம் (இப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) உருவான பிறகு இந்த கல்லூரி மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது.
இருப்பிடம்
தொகுஇக்கல்லூரி கரூர் சாலையில் அமைந்துள்ளது. ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் ௧ல்லூரிக்கு அருகில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி கல்லூரியாக உள்ளது.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "G.T.N. Arts College". www.gtnarts.org/. Retrieved 2019-02-26.