ஜி. நிஜாமுதீன்
ஜி.நிஜாமுதீன் (G. Nizamudeen) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டத்தின், நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக தி.மு.க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
வழக்கறிஞராகவும், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் மாநிலச்செயலாளராக இருக்கின்றார்.[2]. உலக தமிழர் பேரமைப்பின் துணைத்தலைராகவும், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும், ஜல்லிக்கட்டு, காவிரி போன்ற தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் செயல்படக்கூடியவராகவும் அறியப்பட்டவர். [3].
காரைக்காலில் அமைந்துள்ள மார்க் என்ற தனியார் துறைமுகத்திலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கபடுவதைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்காக கைது செய்யப்பட்டவர். [4].
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
1996 | நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) | இந்திய தேசிய லீக் | 43.68 | 46,533 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ ஜமாத் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டுகோள் -ஜி. நிஜாமுதீன் வேண்டுகோள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "-உலக தமிழர் பேரமைப்பின் துணைத்தலைராக வழக்கறிஞர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் தேர்வு". Archived from the original on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-06-05.
- ↑ மார்க் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்