ஜி. லாஸ்யா நந்திதா

இந்திய அரசியல்வாதி

ஜி. லாஸ்யா நந்திதா ( G. Lasya Nanditha; 1986/1987 - 23 பிப்ரவரி 2024) தெலங்காணா மாநிலம் சிக்கந்தராபாத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் காவடிகுடாவைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினராக இருந்தார் (2016).[1]

ஜி.லாஸ்யா நந்திதா
தெலங்காணா சட்டப் பேரவையின் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
03 டிசம்பர் 2023 – 23 பெப்ரவரி 2024
முன்னையவர்ஜி. சாயன்னா
தொகுதிசிக்கந்திராபாத் கண்டோண்ட்மென்ட் சட்டப் பேரவைத் தொகுதி (பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டது)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1986/1987
இறப்பு (அகவை 37)
பதஞ்செரு, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி

நந்திதா, ஜி. சாயன்னா மற்றும் ஜி. கீதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்.[2] இவருக்கு நம்ருதா மற்றும் நிவேதிதா என்ற இரு சகோதரிகள் இக்கின்றனர்.[1] இவர் இடைநிலைக்கல்வியை முடித்துள்ளார்.[3]

தொழில் தொகு

நந்திதா 2023 இல் நடந்த தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் பாரத் இராட்டிர சமிதியின் வேட்பாளராக பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] [5] [6] [7] பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் என். கணேஷ் என்பவரைக் காட்டிலும் 17,169 வாக்குகள் வித்தியாசம் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[8] இவரது தந்தை, ஜி. சாயன்னா, செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், ஆனால் அவர் பிப்ரவரி 2023 இல் இறந்தார் [9]

இறப்பு தொகு

23 பிப்ரவரி 2024 அன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் நந்திதா தனது 37வது வயதில் இறந்தார் [10] இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை பிரிப்பான் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். விபத்தின் போது நந்திதா தனது ஓட்டுநர் ஆகாஷுடன் பயணம் செய்தார். விபத்து நடந்த உடனேயே இவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.[11] [12]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Deekshith, Maddy (2023-02-19). "BRS Cantonment MLA Sayanna passes away". www.deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
  2. telugu, NT News (2023-08-29). "సాయన్న బిడ్డగా ఆశీర్వదించండి." www.ntnews.com (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  3. telugu, NT News (2023-08-25). "Lasya Nanditha | నాయకుడు ఆకాశంలోంచి ఊడిపడడు.. ప్రజల్లోంచి వస్తాడు.. కేసీఆర్‌ అలాంటి నాయకుడే : సాయన్న కూతురు లాస్య నందిత". www.ntnews.com (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  4. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-03.
  5. "Secunderabad Cantt. Assembly Election Results 2023 Highlights: BRS's Lasya Nanditha Sayanna defeats BJP's Sriganesh. N with 17169 votes". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  6. "Lasya Nanditha Sayanna Election Results 2023: News, Votes, Results of Telangana Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  7. "Telangana Assembly Election Results 2023: Full list of BRS winning candidates". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  8. ABN (2023-08-21). "Lasya Nanditha: ఎవరీ లాస్య నందిత.. కేసీఆర్ టికెట్ ఇచ్చిన ఈమె రాజకీయాలకు కొత్త కాదు కానీ." Andhrajyothy Telugu News (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
  9. "Telangana: 5-time Secunderabad Cantt MLA G Sayanna passes away". The Indian Express (in ஆங்கிலம்). 2023-02-19. பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
  10. "BRS MLA Lasya Nanditha dies in road accident in Telangana; CM, KCR condole death". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-23.
  11. "Telangana MLA Lasya Nandita Dies in Horrific Road Accident".
  12. "Telangana Road Accident: BRS MLA Lasya Nanditha Dies In Horrific Car Crash, Cops Say 'Driver May Have....'". News18 (in ஆங்கிலம்). 2024-02-23. பார்க்கப்பட்ட நாள் 2024-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._லாஸ்யா_நந்திதா&oldid=3896422" இலிருந்து மீள்விக்கப்பட்டது