ஜீன் கெல்லி

யூஜின் குர்ரன் கெல்லி (Eugene Curran Kelly ஆகஸ்ட் 23, 1912 - பிப்ரவரி 2, 1996) ஒரு அமெரிக்க-ஐரிஷ் நடனக் கலைஞர், திரைப்பட நடிகர்,மேடை மற்றும் தொலைக்காட்சியின் நடிகர், பாடகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் நடன இயக்குநர் ஆவார் . இவரின் நடனத் திறமை மற்றும் அழகு மற்றும் சிறந்த கதாபாத்திரம் நடித்தது போன்றவற்றின் மூலமாக பரவலாக அறியப்பட்டார்.

ஆன் தி டவுன் (1949), அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951), ஆங்கர்ஸ் அவீ (1945) போன்ற பல படங்களில் நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டார்.ஆங்கர்ஸ் அவீ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . 152 ஆம் ஆண்டில் சிங் இன் தெ ரைன் உட்பட பல இசயினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்தார். ஜூடி கார்லண்டுடன் இனைந்து நடித்த ஃபார் மீ அண்ட் மை கேள் திரைப்படத்தில் இருந்து பல திரைபடங்களில் நடன இஅயக்குநராகவும், இணை இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். டு பாரி வாஸ் எ லேடி (1943), தவுசண்ட்ஸ் சியர் (1943), தி பைரேட் (1948), மற்றும் இட்ஸ் ஆல்வேஸ் ஃபேர் வெதர் (1955) போன்றவை இதில் குறிப்பிடத்தகுந்தன. பின்னர் அவர் இசை சார்பற்ற இன்ஹெரிட் தி விண்ட் (1960) மற்றும் வாட் எ வே டு கோ! (1964) ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். கெல்லி ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்களில் இவர் நடித்துள்ளார். அதில் 1969 ஆண்டில் வெளியான ஹலோ, டோலி! முக்கியமான திரைப்படம் ஆகும்.[1][2][3] இது சிறந்த படத்திற்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[4]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கெல்லி பிட்ஸ்பர்க்கின் கிழக்கு லிபர்ட்டி பகுதியில் பிறந்தார். இவர் கிராமபோன் விற்பனையாளரான ஜேம்ஸ் பேட்ரிக் ஜோசப் கெல்லி மற்றும் அவரது மனைவி ஹாரியட் கேத்தரின் குர்ரான் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.[5] இவரது தந்தை கனடாவின் ஒன்டாரியோவின் பீட்டர்பரோவில் ஒரு ஐரிஷ் கனேடிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய்வழி தாத்தா அயர்லாந்தின் டெர்ரியிலிருந்து குடியேறியவர் ஆவார். அவரது தாய்வழி பாட்டி ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர்.[6] இவருக்கு எட்டு வயதாக இருந்தபோது, கெல்லியின் தாய் இவரையும் இவரது சகோதரர் ஜேம்ஸையும் நடன வகுப்புகளில் சேர்த்தார். எங்களுக்கு நடன வகுப்புகளுக்குச் செல்வது பிடிக்கவில்லை. மேலும் எங்களது அண்டை வீட்டில் இருந்த சிறுவர்கள் எங்களை பெண் தன்மை கொண்ட சிறுவர்கள் என அழைத்ததால் சில முறை சண்டை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.அதன் பிறகு தான் 15 ஆம் வயது வரை நடனமாடவில்லை எனவும் இவர் தெரிவித்தார்.[7] இவர் பிட்ஸ்பர்க்கின் மார்னிங்சைட் பகுதியில் உள்ள செயின்ட் ரபேல் தொடக்கப்பள்ளியில் [8] பயின்றார். மற்றும் 16 வயதில் பீபோடி உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் பென்சில்வேனியா மாநிலக் கல்லூரியில் ஒரு பத்திரிகத் துறையில் சேர்ந்தார். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக இவர் வேலைக்குச் செல்லவேண்டி இருந்தது. உள்ளூர் நடன போட்டியில் தனது சகோதரர் பிரெட்டுடன் இணைந்து வெற்றி பெற்றார். பினர் இவர்கள் இரவு வுடுதிகளிலும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

சான்றுகள்

தொகு
  1. "100 Greatest Film Musicals". பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
  2. "The Best Movie Musicals of All Time". Archived from the original on 2016-02-21. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
  3. "The Top 100 Greatest Movie Musicals of All Time". Archived from the original on 2016-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
  4. "The 42nd Academy Awards (1970) Nominees and Winners". oscars.org. பார்க்கப்பட்ட நாள் April 8, 2016.
  5. "Heritage Gazette Vol.12 no.1: Entertainment and Recreation (May 2007)". content.yudu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
  6. Gene Kelly: A Biography. Regnery. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
  7. The Films of Gene Kelly – Song and Dance Man. Carol Publishing Group.
  8. "St Raphael Elementary School". straphaelelementaryschool.net. Archived from the original on 2014-10-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்_கெல்லி&oldid=4160764" இலிருந்து மீள்விக்கப்பட்டது