ஜெங் ஜி (உயிர்வேதியியலார்)

ஜெங் ஜி (Zheng Ji)(Chinese: 郑集) (6 மே 1900 - 29 ஜூலை 2010) என்பார் சீன ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் முன்னோடி உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் அதீத நூற்றாண்டாளர் (110 வயது) ஆவார். இவர் உலகின் மிகப் பழமையான பேராசிரியராகவும், சீனாவில் நவீன ஊட்டச்சத்து அறிவியலை நிறுவியவராகவும் புகழ் பெற்றவராவார்.

ஜெங் ஜி
ஜெங் ஜி 1935ல்
பிறப்பு(1900-05-06)6 மே 1900
நன்சி மாவட்டம், யிபின், சிசூயான்,
குயின்ங் சீனா
இறப்பு(2010-07-29)29 சூலை 2010
(aged 110 ஆண்டுகள், 84 நாட்கள்)
நாஞ்சிங், சியான்சு,
சீனா
பணிஊட்டச்சத்துவியலார் & உயிர்வேதியிலாளர்

தொழில்

தொகு

1924 ஆம் ஆண்டில் தென்கிழக்கு தேசிய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தேர்வில் ஜெங் ஜி தேர்ச்சி பெற்றார் (முதலில் நாஞ்சிங் மேம்பட்ட இயல்பான பள்ளி, 1928 இல் தேசிய மத்திய பல்கலைக்கழகத்திற்கும் பின்னர் நாஞ்சிங் பல்கலைக்கழகத்திற்கும்) உயிரியல் துறையில் 1929இல் தேர்ச்சி பெற்றார். 1930ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கா சென்று ஓகைய்யோ மாநிலத்தில் உயிர் வேதியியல் படித்தார். இவர் யேல் மற்றும் இந்தியானா பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 1936இல் அவர் தனது முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

சீனாவுக்குத் திரும்பியதும், சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். இவர் மத்திய மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகவும் கிழக்கு சீன இராணுவ மருத்துவப் பள்ளியில் உயிர் வேதியியல் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராககவும் ஒரே நேரத்தில் பணியாற்றினார். எண் 4 ராணுவ மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் உயிரியல் பேராசிரியர் மற்றும் நாஞ்சிங் மருத்துவப் பள்ளியில் உயிர்வேதியியல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

1945ஆம் ஆண்டில், மத்திய மருத்துவப் பள்ளியில், பட்டதாரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு உயிர் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். பட்டதாரி மாணவர்களுக்கு உயிர் வேதியியலைக் கற்பிக்கும் சீனாவின் முதல் முறையான அமைப்பு இதுவாகும். இந்நிறுவனம் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஏராளமான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது. தனது 70 வயதைத் கடந்த நிலையில் இவர் முதுமையின் உயிர் வேதியியல் குறித்துப் படிக்கத் தொடங்கினார். வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வு பற்றிய ஒரு கோட்பாட்டை முன்வைத்து, சீனாவில் வயதான உயிர் வேதியியலின் அடிப்படையை உருவாக்கினார்.

இவர் சீன ஊட்டச்சத்து சங்கம் மற்றும் உயிர் வேதியியல் சங்கத்தை நிறுவுவதில் பங்கேற்றார். இவர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் கடந்த காலத் தலைவராகவும், சீன ஊட்டச்சத்து சங்கத்தின் முதல் குழுத் தலைவராகவும் இருந்தார்.

மே 2010இல் ஜெங் ஜி 110 வயதை எட்டினார். அந்த நேரத்தில் உலகின் மிக வயதான பேராசிரியர் இவர் என்று கூறப்பட்டது.[1] இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி மற்றும் உயிரியல் துறையில் கழித்தார். இவர் 29 ஜூலை 2010 அன்று இறந்தார். [2]

மேலும் காண்க

தொகு
  • நூற்றாண்டுகளின் பட்டியல் (விஞ்ஞானிகள் மற்றும் கணிதவியலாளர்கள்)

மேற்கோள்கள்

தொகு