ஜெனிபர் கெண்டல்

ஆங்கில நடிகை (1934–1984)

ஜெனிபர் கெண்டல் ( Jennifer Kendal; 28 பிப்ரவரி 1934 - 7 செப்டம்பர் 1984) [1] ஓர் ஆங்கில நடிகையும் மற்றும் பிருத்வி அரங்கத்தின் நிறுவனரும் ஆவார். 36 சௌரிங்கி லேன் (1981) திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகைக்கான பாஃப்டா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். பாம்பே டாக்கி (1970), ஜூனூன் (1978), ஹீட் அண்ட் டஸ்ட் (1983), மற்றும் காரே பைரே (1984) ஆகியவை இவரது பிற திரைப்படத் தோற்றங்களில் அடங்கும்.

ஜெனிபர் கெண்டல் கபூர்
பிறப்புஜெனிபர் கெண்டல்
(1934-02-28)28 பெப்ரவரி 1934
சௌத்போர்ட், லங்காக்சயர், இந்ங்கிலாந்து
இறப்பு7 செப்டம்பர் 1984(1984-09-07) (அகவை 50)
இலண்டன், இங்கிலாந்து
பணிநடிப்பு
பெற்றோர்ஜெப்ரி கெண்டல்
லாரா லித்தல்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்குணால் கபூர்
கரண் கபூர்
சஞ்சனா கபூர்
உறவினர்கள்பெலிசிட்டி கெண்டல் (சகோதரி)

குழந்தைப் பருவம்

தொகு

ஜெனிபர் கெண்டல் இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் ஜெஃப்ரி கெண்டல் மற்றும் லாரா லிடெல் ஆகியோருக்குப் பிறந்தார். ஆனால் தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை இந்தியாவில் கழித்தார். இவருக்கு பெலிசிட்டி கெண்டல் என்ற ஒரு தங்கை உண்ள்ளார். ஜெனிபர் "சேக்சுபியரேனா" என்ற பயண நாடக நிறுவனத்தை நடத்தி வந்தார். இது இந்தியா முழுவதும் பயணம் செய்தது. பின்னர் இதுசேக்சுபியர் வாலா (1965) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட போது அதில் கெண்டல் தோன்றி நடித்திருந்தார். மேலும் இவரது பெற்றோர் மற்றும் ஐவரது சகோதரி ஆகியோருடன் இவரது கணவர் சசி கபூரும் நடித்திருந்தனர்.[2]

தொழில் வாழ்க்கை

தொகு

1956 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் சசி கபூரும் கெண்டலும் முதல்முறையாக சந்தித்தனர். அங்கு சசி கபூர் பிரித்வி தியேட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தார். ஜெனிபர் சேக்சுபியரேனாவின் ஒரு பகுதியாக தி டெம்பஸ்ட் என்ற நாடகத்தில் மிராண்டாவாக நடித்தார். விரைவில், சசி கபூரும் நிறுவனத்துடன் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார்.[3] இவர்கள் ஜூலை 1958 இல் திருமணம் செய்துகொண்டனர். ஜெனிபரும் சசி கபூரும் மும்பையில் உள்ள பிரித்வி அரங்கின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினர்.[4] 1978 இல் நகரின் ஜூகூ பகுதியில் இவர்களது திரையரங்கு திறக்கப்பட்டது. ஜெனிபர் மற்றும் கபூர் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். குறிப்பாக மெர்ச்சன்ட் ஐவரி புரொடக்ஷன்ஸ் தயாரித்த படங்கள். இவர்களின் முதல் கூட்டு நடிப்பு பாம்பே டாக்கி (1970) இல் வெளிவந்தது.

சொந்த வாழ்க்கை

தொகு

இத் தம்மதியினருக்கு குணால் கபூர் மற்றும் கரண் கபூர் என்ற இரு மகன்களும் மற்றும் சஞ்சனா கபூர் என்ற ஒரு மகளும் என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அனைவரும் முன்னாள் பாலிவுட் நடிகர்கள்.[5]

பிருத்திவி அரங்கத்தின் வழிகாட்டியான ஜெனிபர் 1982 முதல் முனையப் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் [6] 1984 செப்டம்பர் 7 அன்று இறந்தார். இவர் இறந்த நாளில்கூட அரங்கத்தை மூடாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உண்மையான நாடக பாரம்பரியத்தின்படி 'காட்சி நடந்தது'.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jennifer Kendal". British Film Institute. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 28 February 2021.
  2. "The wandering players".
  3. Jennifer Biography
  4. "Prithvi, pioneer in theatre". தி இந்து. 7 November 2003 இம் மூலத்தில் இருந்து 1 January 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040101014620/http://www.hindu.com/fr/2003/11/07/stories/2003110701340600.htm. 
  5. Meet the Kapoors,Network 18.
  6. Piers Morgan's Life Stories, 19 October 2012
  7. Prithvi theatre festival starts today இந்தியன் எக்சுபிரசு, 1 November 1998.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_கெண்டல்&oldid=3946661" இலிருந்து மீள்விக்கப்பட்டது