பிருத்வி அரங்கம்

கபூர் குடும்பத்திற்கு சொந்தமான நாடக அரங்கம்

பிரித்வி அரங்கம் ( Prithvi Theatre ) என்பது மும்பையின் ஜூகூவின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள ஒரு அரங்காகும். பாலிவுட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் இயக்குநர் குடும்பங்களில் ஒன்றான பிருத்விராஜ் கபூரின், கபூர் குடும்பம், 1944 இல் 'பிரித்வி தியேட்டர்ஸ்' என்ற நாடக நிறுவனத்தை நிறுவியது. நிறுவனம் பதினாறு ஆண்டுகள் தங்கள் நாடகத்தை பல்வேறு ஊர்களில் நிகழ்த்தியது.[1] இந்த அரங்கம் சசி கபூர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் ஆகியோரால் கட்டமைக்கப்பட்டது. சசியின் தந்தை பிருத்விராஜின் நினைவாக, அவர் தனது நாடக நிறுவனத்திற்கு "ஒரு அரங்கம்" வேண்டும் என்று முடிவுசெய்து கட்டிடக் கலைஞர் வேத் செகன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1978 இல் திறக்கப்பட்டது. 1984 இல் ஜெனிபர் இறக்கும் வரை அரங்கதை நிர்வகித்தார். சசி கபூர் அரங்கத்தின் நிர்வாக அறங்காவலராக இருந்தார். மேலும் தினசரி நடவடிக்கைகளை குணால் கபூர் என்பவரைக் கொண்ட ஒரு குழுவுடன் கவனித்து வந்தார்.

பின்னணி

தொகு
 
மும்பை பிருத்வி அரங்கத்தில் ஒரு நாடகம் நடத்தப்படுகிறது.

1978 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி மும்பையில் பிருத்வி அரங்கம் திறக்கப்பட்டது. ஜி.பி.தேஷ்பாண்டே எழுதிய "உத்வஸ்த தர்மசாலா" என்ற நாடகம், நசிருதீன் ஷா, ஓம் பூரி மற்றும் பெஞ்சமின் கிலானி ஆகியோரால் மேடையேற்றப்பட்டது. இது பிருத்வியின் முதல் நாடகம் ஆகும். இதைத் தொடர்ந்து இந்திய நாடக அரங்க சங்கத்தின் சார்பில் நடிகரும் இயக்குனருமான எம்.எஸ்.சத்யு இயக்கியந அரசியல் ையாண்டி நாடகம்ான "பக்ரி",என்ற நாடகம் நிகழ்த்தபட்டது.

1983 ஆம் ஆண்டு திரையரங்கின் ஐந்தாவது ஆண்டு விழா, பிருத்வியின் சிறந்த காட்சிகளைக் காண்பிக்கும் விழாவாகக் கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்வு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வெற்றிகரமாகக் கருதப்பட்டது. இப்போது அரங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிருத்வி கஃபே கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் நன்கு அறியப்பட்ட சந்திப்பு இடமாக மாறிவிட்டது.[2][3]

பிருத்திவி அரங்கத்தின் வழிகாட்டியான ஜெனிபர் கபூர், 7 செப்டம்பர் 1984 இல் இறந்தார். இவர் இறந்த நாளில்கூட அரங்கத்தை மூடாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உண்மையான நாடக பாரம்பரியத்தின்படி 'காட்சி நடந்தது'.[4]

1990 களில், ஜெனிபரின் மகள் சஞ்சனா கபூர் தனது சகோதரர் குணால் கபூருக்கு அரங்கம் மற்றும் அதன் பல்வேறு செயல்பாடுகளில் உதவத் தொடங்கினார். படிப்படியாக, அவர் 'பிரித்வி பிளேயர்ஸ்' மற்றும் 'லிட்டில் ப்ரித்வி பிளேயர்ஸ்' (குழந்தைகளுக்கான அரங்கம்) போன்ற செயல்பாடுகள் மற்றும் பட்டறைகளையும் சேர்த்தார்.

நிகழ்ச்சிகள்

தொகு

பிருத்வி திரையரங்கில் திங்கட்கிழமைகள் தவிர ஒவ்வொரு நாளும் காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கான கோடைகாலப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் நாடகங்கள், பிப்ரவரி 28 அன்று நினைவுக் கச்சேரி, நவம்பரில் வருடாந்திர நாடக விழா மற்றும் மொழி, கவிதை, சர்வதேச திரைப்பட வெளியீடு மற்றும் ஆவணப்படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் பல கூட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.[5]

கௌரவம்

தொகு
 
இந்தியாவின் 1995 இல் வெளியிடப்பட்ட இந்தியாவின் அஞ்சல் தலையில் பிருத்வி அரங்கம் மற்றும் பிருத்விராஜ் கபூர்

இந்திய அரசாங்கம் 1995 ஆம் ஆண்டு 'பிரித்வி அரங்கத்தின்' 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. 2006 ஆம் ஆண்டில், கலா தேஷ் கி சேவா மே (தேசத்தின் சேவையில் கலை) என்று பெயரிடப்பட்ட அதன் வருடாந்திர விழா பிருத்விராஜ் கபூரின் பிறந்த நூற்றாண்டு விழாவாக கொண்டாடியது.[6][7]

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருத்வி_அரங்கம்&oldid=4162621" இலிருந்து மீள்விக்கப்பட்டது