ஜெயகர் கடல்குதிரை

ஜெயகர் கடல்குதிரை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சிங்னாதிபார்ம்சு
குடும்பம்:
சிங்னாதிடே
பேரினம்:
கிப்போகாம்பசு
இனம்:
கி. காசுகாசியா
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு காசுகாசியா
(பெளலென்ஜர், 1900)

ஜெயகர் கடல் குதிரை (Jayakar's seahorse)(கிப்போகாம்பசு ஜெயகாரி) என்பது சிங்னாதிடே குடும்பத்தைச் சேர்ந்த கடலோர மீன் சிற்றினமாகும்.

வாழிடம் தொகு

ஜெயகர் கடல் குதிரை இந்தியப் பெருங்கடலின் மேற்கு பகுதி, செங்கடம் மற்றும் அரேபிய கடல்களிலிருந்து பாக்கித்தானின் மத்திய கடற்கரை வரை காணப்படுகிறது.[1] இது கடற்பாசி படுக்கைகள் (காலோபிலா சிற். போன்றவை), பாசிகள், மென்மையான அடி மூலக்கூறுகள், கடற்பாசிகள் மற்றும் பாறை வாழ்விடங்களில் வாழ்கிறது.

விளக்கம் தொகு

ஜெயகர் கடல் குதிரை 14 சென்டிமீட்டர்கள் (5.5 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[3] இது 20 மீட்டர்கள் (66 அடி) ஆழமுள்ள நீர்ப்பகுதியில் வாழக்கூடியது. இது பொதுவாக 2–3 மீட்டர்கள் (6.6–9.8 அடி) அளவில் காணப்படுகிறது.[3] இது மற்ற கடல் குதிரைகளைப் போலவே சிறிய ஓட்டுமீன்களை உண்ணும். இந்த சிற்றினம் உள்பொரி முட்டையிடும் வகையினைச் சார்ந்தது. ஆண் கடற்குதிரைகள் குஞ்சு பொரிக்கும் பையில் முட்டைகளைச் சுமந்துகொண்டு அடைகாக்கின்றது.[1] பாலியல் முதிர்ச்சி 11 சென்டிமீட்டர்கள் (4.3 அங்) நீளம் இருக்கும்போது அடைகிறது.[3]

ஜெயகர் கடல் குதிரை விலங்கியல் பெயர் மற்றும் பொதுவான பெயர் இந்திய மருத்துவர், மொழியியலாளர் மற்றும் மீனியலாளர் மருத்துவர் ஆத்மாராம் சதாசிவ் "மஸ்கட்டி" ஜெயகர் (1844-1911) நினைவாக இடப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Kuo, T.-C.; Pollom, R. (2017). "Hippocampus jayakari". IUCN Red List of Threatened Species 2017: e.T10074A54145490. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T10074A54145490.en. https://www.iucnredlist.org/species/10074/54145490. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. 3.0 3.1 3.2 Lourie, S.A., A.C.J. Vincent and H.J. Hall, 1999. Seahorses: an identification guide to the world's species and their conservation. Project Seahorse, London. p.214
  4. "Biographical Etymology of Marine Organism Names. IJ". Hans G. Hansson. பார்க்கப்பட்ட நாள் 19 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயகர்_கடல்குதிரை&oldid=3745850" இலிருந்து மீள்விக்கப்பட்டது