ஜெயம் (1999 திரைப்படம்)

ஜெயம் (Jayam) 1999 ஆம் ஆண்டு மன்சூர் அலி கான் மற்றும் சங்கீதா நடிப்பில், அறிமுக இயக்குனர்கள் ரவி மற்றும் ராஜா இயக்கத்தில், பிரதீப் ரவி இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]

ஜெயம்
இயக்கம்ரவி-ராஜா
தயாரிப்புரவி-ராஜா
கதைரவி-ராஜா
இசைபிரதீப் ரவி
நடிப்பு
ஒளிப்பதிவுதயாள் ஓஷோ
படத்தொகுப்புஎன். ஹரிபாபு
கலையகம்மகாலட்சுமி சினி சர்க்யூட்
வெளியீடுஅக்டோபர் 15, 1999 (1999-10-15)
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

ஒரு கிராமத்தில் வசிப்பவர்களில் சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதைக் கண்டறியும் வழக்கு காவலர்கள் ஆனந்த் (மன்சூர் அலி கான்) மற்றும் விஜய் (இஷாக் ஹுசைனி) வசம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தக் கிராமத்தின் நாட்டாமையின் (சண்முகசுந்தரம்) மகள் துர்கா (சங்கீதா). அந்தக் கிராமத்தில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளைப் பற்றி செய்தி சேகரிக்க வரும் நிருபர் அமுதா (விசித்ரா). துர்காவுடன் பழகி நட்பாகிறாள் அமுதா. அந்த கிராமத்திலுள்ள மிராசு நாட்டாமையின் எதிரி. அந்த கிராமத்தின் நாட்டாமையாக வர விரும்புகிறார் மிராசு.

அந்த கிராமத்தைச் சேர்ந்த டேவிட் (ராகுல்) மற்றும் மும்தாஜ் (பாவனா) இருவரும் காதலர்கள். காட்டில் இருவரும் கொல்லப்பட்டு கிடப்பதைக் கிராமத்தினர் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். மிராசு அந்தக் கொலைகளைச் செய்தது துர்கா என்று குற்றம் சாட்டுகிறான். அமுதா தன் தோழி துர்காவிற்கு ஆதரவாக இருக்கிறாள். உண்மையான குற்றவாளியைக் கண்டறிவதாகக் கூறுகிறாள். அன்றிரவு காட்டுக்குள் செல்லஅமுதாவை மர்ம உருவம் ஒன்று கொல்கிறது. ஆனந்த் மற்றும் விஜய் அந்த உருவத்தைப் பிடிக்க முயல்கையில் அது விஜயைக் கொல்கிறது. இறுதியாக கோயிலில் சக்தி வாய்ந்த பூஜை செய்து அம்மனை வேண்ட, தெய்வ சக்தி துர்காவின் மூலம் அந்த மர்ம உருவத்தைக் கொன்றொழிக்கிறது.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் பிரதீப் ரவி. பாடலாசிரியர்கள் வைரமுத்து, புலமைப்பித்தன், பரதன் மற்றும் பிரதீப் ரவி.[5]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஆயிரம் கண் உடையவளே சுஜாதா மோகன் 5:01
2 சிக்கு சிக்கு அம்ருதா 4:56
3 பிறந்தோம் பி. உன்னிகிருஷ்ணன், அம்ருதா 6:04
4 சரித்திரம் ராஜ்குமார் 3:18
5 நிலவுக்கு ஹரிணி 4:40

மேற்கோள்கள் தொகு

  1. "ஜெயம்". http://www.gomolo.com/jayam-movie/12272. 
  2. "ஜெயம்". http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=2210. 
  3. "ஜெயம்". http://www.jointscene.com/movies/Kollywood/Jayam_(1999)/5305. 
  4. "இஷாக் ஹுசைனி". http://www.thehindu.com/lf/2003/10/07/stories/2003100700900200.htm. 
  5. "பாடல்கள்". https://www.saavn.com/s/album/tamil/Jayam-1998/Dmy3dAeVino_. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயம்_(1999_திரைப்படம்)&oldid=3660992" இருந்து மீள்விக்கப்பட்டது