ஜெய்த்பூர் இராச்சியம்

ஜெய்த்பூர் இராச்சியம் (Jaitpur State) என்பது இந்தியாவின் உத்திர பிரதேசத்திலுள்ள பந்தேல்கண்ட் பிராந்தியத்தின் ஒரு சமஸ்தானமாக இருந்த பகுதியாகும். இது உத்தரபிரதேசத்தின் இன்றைய மகோபா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்பூரை மையமாகக் கொண்டிருந்த இது மாநிலத்தின் தலைநகராக இருந்தது.[1] இப்பகுதியில் இரண்டு கோட்டைகள் இருந்தன.

இந்த இராச்சியத்தின் கடைசி ராஜாவான கேத் சிங் எவ்வித இடையூறுகளுமின்றி ஆட்சி புரிந்து இறந்த பின்னர் 1807ல் ஜெய்த்பூர் இராச்சியம் இந்தியாவின் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

வரலாறு.

தொகு

ஜெய்த்பூர் இராச்சியம் 1731 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பந்தேலா ராஜபுத்திர தலைவர் சத்ரசல் என்பவரின் மகன் ஜகத் ராயால் பன்னா மாநிலத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. 1765இல் அஜைகர் மாநிலம் ஜெய்த்பூரிலிருந்து பிரிக்கப்பட்டது. மத்திய இந்தியா ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து 1807இல் ஜெய்த்பூர் ஆங்கிலேயப் பாதுகாப்புப் பகுதியாக மாறியது.

மராட்டிய வெற்றி

தொகு

மே 5 ஆம் தேதி, 1746 மராட்டிய தளபதிகள் மல்ஹார் ராவ் ஹோல்கர் மற்றும் ஜெயப்பா சிந்தியா ஆகியோர் ஜெய்த்பூரை முற்றுகையிட்டு அதை கைப்பற்றி லட்சுமன் சங்கர் என்பவரை நியமித்தனர். பின்னர் பேஷ்வா மற்றும் ஜகத்ராஜ் பந்தேலா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.[2]

1849 ஆம் ஆண்டில் ஜெய்த்பூர் இராச்சியத்தின் கடைசி அரசரான கேத் சிங், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி புரிந்து இறந்தபோது, அந்த சமஸ்தானம் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டது.[3]

ஆட்சியாளர்கள்

தொகு

ஜெய்த்பூர் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் 'ராஜா' என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டனர்.[4]

ஜெய்த்பூர் இராச்சிய இராஜாக்கள்

தொகு
  • 1731-1758 ஜகத் ராஜா
  • 1758-1765 கீரத் சிங்
  • 1765 - .... கஜராஜா
  • 812-கேஸரி ராஜா
  • 1812-1842 பரிசத் சிங்
  • 1842-1849 கேத் சிங் (இறப்பு. 1849)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Wikimapia
  2. Sagar, Poonam (1993). Maratha Policy Towards Northern India (in ஆங்கிலம்). Meenakshi Prakashan.
  3. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  4. Princely States of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்த்பூர்_இராச்சியம்&oldid=4127566" இலிருந்து மீள்விக்கப்பட்டது