ஜெரோம் இலாலண்டே

பிரெஞ்சு வானியலாளர்

ஜோசப் ஜெரோம் இலெபிராங்கோயிசு தெ இலாலண்டே (Joseph Jérôme Lefrançois de Lalande) (பிரெஞ்சு மொழி: [lalɑ̃d]; 11, ஜூலை, 1732 – 4, ஏப்பிரல், 1807) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கொத்தானாரும் எழுத்தாளரும் ஆவார்.

ஜெரோம் இலாலண்டே
Jérôme Lalande
ஜெரோம் இலாலண்டே
பிறப்பு(1732-07-11)11 சூலை 1732
பவுர்கு-என்-பிரெசே
இறப்பு4 ஏப்ரல் 1807(1807-04-04) (அகவை 74)
பாரீசு
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியல்
பணியிடங்கள்பாரீசு வான்காணகம்
ஆய்வு நெறியாளர்ஜோசப்- நிகோலசு தெலிசுலே
பியேர் சார்லசு லெ மோன்னியேர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ழீன் பாப்திசுதே ஜோசப் தெலாம்பர்
கையொப்பம்

வாழ்க்கை

தொகு

இலாலண்டே தற்போது ஐன் ஆட்சிப் பிரிவில் உள்ள பவுர்கு – என் – பிரெசேவில் பிறந்தார். இவரது தந்தையார் பிராங்கோயிசு ஆவார். இவரது தாயார் மரீ – அன்னி கேபிரியேல் மோஞ்சினெத் ஆவார்.[1] இவரது பெற்றோர் இவரைச் சட்டம் படிக்க பாரீசுக்கு அனுப்பினர். அவர் அங்கே தங்கியிருந்த கிளூனி விடுதியில் தெலிசுலேவின் வான்காணகம் அமையவே வானியலில் ஈர்க்கப்பட்டார். எனவே இவர்பியேர் சார்லசு இலெ மோன்னியேரின் அன்புக்குரிய மாணவரானார். இவர் சட்டப் படிப்பு முடித்ததும், பவுர்கில் சட்டப் பயிற்சி பெறத் திரும்ப இருந்தார். அப்போது நன்னம்பிக்கைமுனையில் இலாகைல்லேவுடன் நிலாவின் இடமாறு தோற்றப் பிழையை நோக்கிட, இவர் பெர்லினுக்குச் செல்ல, மோன்னியேர் இசைவு பெற்றுத் தந்துள்ளார்.

 
1751 இல் இலாலண்டே புவியில் இருந்து நிலாவின் தொலைவை அளக்க பயன்படுத்திய, ஜொனாதன் சிசனால் உருவாக்கப்பட்ட, பாகையளவி (வட்டக் காற்பகுதி).
 
Voyage d'un françois en Italie, fait dans les années 1765 et 1766. Tome premier, 1769


இருபத்தோர் அகவைக்குள் பெற்ற இந்த அரும்பணியின் வெற்றிகரமான செயல்பாடு பெர்லின் கல்விக்கழகத்தில் சேரவும் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் இணை வானியலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவும் இவருக்கு வாய்ப்பளித்துள்ளது. இவர் உடனே கோள்களுக்கான கோட்பாட்டை மேம்படுத்த தொடங்கி, 1759 இல் ஏலி வால்வெள்ளியின் வரலாற்றுடன் ஏட்மண்டு ஏலி பட்டியல்களின் திருத்திய பதிப்பை வெளியிட்டார். அந்த ஆண்டே ஏலி வால்வெள்ளி வருவதைப் பற்றி அலெக்சிசு கிளாரவுட் கணக்கிட உதவி செய்தார். இலாலண்டேவுக்காக, 1762 இல் தெலிசுலே பிரெஞ்சு வானியல் கட்டிலில் இருந்து பதவி விலகினார். அங்கு அடுத்த 46 ஆண்டுகள் வரை இலாலண்டே பணியாற்றினார். இவரது இல்லம் வானியல் கருத்தரங்காக மாறியது. இவரது மாணவர்களாக ழீன் பாப்டிசுட்டே ஜோசப் தெலாம்பர், கியூசெப்பி பியாசி, பியேர் மேக்கைன், இவரது ஒன்றுவிட்ட உறவினராகிய மைக்கேல் இலாலண்டே ஆகியோர் அமைந்தனர். இவர் 1769 இல் வெளியிட்ட வெள்ளியின் கடப்பு சார்ந்த வெளியீடுகள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தன. என்றாலும் இவரது சிக்கலான நடத்தை மக்களிடையே புகழ்பெறுவதை மட்டுப்டுத்தியது.

இவர் 1766 இல் பாரீசில் எல்வெட்டியசுடன் இணைந்து அறிவியலுக்கான உறைவிடத்தை உருவாக்கினர். இது 1772 இல் கிரேண்ட் தெ பிரான்சின் மதிப்பை ஈட்டியது.[2]இவர் 1776 இல் இதன் பெயரை இலெசு நியூத் சோயூர்சு எனப் பெயர் மாற்றினார். இதன் முதல் வணங்கத் தகுந்த அசிரியர் பெஞ்சமின் பிராங்ளின் வகிக்கும்படி செய்தார்.[3]

இவர் 1766 இல் பாரீசில் எல்வெட்டியசுடன் இணைந்து அறிவியலுக்கான உறைவிடத்தை உருவாக்கினர். இது 1772 இல் கிரேண்ட் தெ பிரான்சின் மதிப்பை ஈட்டியது.[4]இவர் 1776 இல் இதன் பெயரை இலெசு நியூத் சோயூர்சு எனப் பெயர் மாற்றினார். இதன் முதல் வணங்கத் தகுந்த அசிரியர் பெஞ்சமின் பிராங்ளின் வகிக்கும்படி செய்தார்.[5]

அவரது ஆய்வுகளின் அறிதிறன் நெறி, கடுமுயற்சியால் விளைந்தது என்றாலும்னதைவிட, இவரது வாழ்க்கை நகர்வுகள் மிகவும் பெயர்பெற்றன. இவர் விரிவுரையாளராகவும் எழுத்தாளரகவும் வானியலை மக்களிடம் கொண்டு செலுத்தினார் கோள்களிடையான பரிமாற்றச் சிற்றலைவுகளுக்கான திருத்தங்கள் செய்த இவரது கோள் அட்டவணை 18 அம் நூற்றாண்டு இறுதிவரை இருந்த மிகச் சிறந்த அட்டவணையாகும். இவர் 1801 இல் வானியல் மேம்பாட்டுக்காக அளிக்கும் இலாலண்டே பரிசைப் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தில் உருவாக்கினார்.

வரலாற்றில் முதன்முதலாகப் பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மேற்கான தொலைவை கண்டறிந்த இளம் வனியலாளராகிய பியேர் அந்தோயினே வேரன் இலாலண்டேவின் மாணவராவார். [6]

இவர் ஒரு இறைமறுப்பாளர். [7][8][9]

நெப்டியூனின் கண்டுபிடிப்பை நோக்கி

தொகு

அமெரிக்க நாவாய் வான்காணகத்தைச் சேர்ந்த சியர்சு சி. வாக்கர் 1847 பிப்ரவரியில், அதற்கு ஓராண்டுக்கு முன் கண்டறியப்பட்ட நெப்டியூன் கோளின் முன்கண்டுபிடிப்பு ஆவணங்களும் அளக்கைகளும் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இவர் 1795 இல் இலாலண்டேவின் பணியாளர்களின் நெப்டியூன் கோள் திசை சார்ந்த நோக்கிடுகளைப் பார்வையிட்டு, அப்போது நெப்டியூனை வானில் பார்த்தனரா, அவர்களது நோக்கீடுகளில் நெப்டியூன் பதிவாகியுள்ளதா எனத் தேடினார். அந்த நோக்கீடுகளில் இருந்து மே 8 இலும் மே10 இலும் ஒரு விண்மீன் நோக்கப்ப்பட்டு ஒரு கேள்விக்குரிய முக்காற்புள்ளியிட்டுப் பதிவாகியமையைக் கண்டுள்ளார். இந்தக் குறிப்பு நோக்கீட்டுப் பிழைக்காக கூட இருக்கலாம். என்றாலும் இவற்ரின் முதல் படிமங்களை ஆய்வு செய்து பதிவான வான்பொருள் நெப்டியூன் தானென நிறுவப்பட்டது. இரண்டு இரவுகளுக்கிடையே இருந்த நோக்கீட்டு இருப்பு வேறுபாடு வானில் நெப்டியூன் இடம்பெயர்ந்தமையால் ஏற்பட்டிருக்கிறது.[10] நெப்டியூனின் இருப்பு 1795 இல் கண்டறியப்பட்டமை, அதன் வட்டணையைத் துல்லியமாகக் கணக்கிட உதவியுள்ளது.[11]

விருதுகளும் தகைமைகளும்

தொகு
 
cimetière du Père-Lachaise கல்லறைத்தூண்.
  • இவர் 1765 இல் சுவீடிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் 1781 இல் அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டுத் தகைமை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .[12]
  • இவரது பெயர் ஈஃபில் கோபுரத்தில் உள்ள 72 பேர்களின் பெய்ர்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
  • நிலவின் இலாலண்டே குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • பவுர்கென் பெசேவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளி இவரது பெயரால் வழங்குகிறது. இந்தப் பள்ளியின் ஆசிரியரும் மாணவரும் போர்க்காலத்தில் ஆற்றிய பணிகளுக்காக Médaille de la Résistance எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்சுப் பள்ளிகளிலேயே இது ஒரு தனி நிகழ்வாகும்.

சிறப்புப் பணிகள்

தொகு
  •  
    Voyage d'un françois en Italie, fait dans les années 1765 et 1766. Tome premier, 1769
    எனும் பிரெஞ்சு மொழி வானியல் தனிவரைவு நூல் (2தொகுதிகள், 1764 விரிவாக்கிய பதிப்பு, 4 தொகுதிகள், 1771–1781; மூன்றாம் பதிப்பு, 3 தொகுதிகள், 1792)
  • Histoire Céleste Française (1801) எனும் பிரெஞ்சு மொழி நூல். இதில் 47,390 விண்மீன்களின் இருப்புகள் தரப்பட்டுள்ளன.
  • Bibliographie astronomique (1803) எனும் பிரெஞ்சு மொழி நூல். இது 1780 முதல் 1802 வரையிலாண வானியல் வரலாறு விவரிக்கப்படுகிறது
  • Astronomie des dames (1785) எனும் பிரெஞ்சு மொழி நூல்
  • Abrégé de navigation (1793) எனும் பிரெஞ்சு மொழி நூல்
  • Voyage d'un françois en Italie (1769) எனும் பிரெஞ்சு மொழி ஆவணம். இது 1765 முதல் 1766 வரை இவர் மேற்கொண்ட பயணப்பதிவு ஆவணம்.
  • Journal d'un voyage en Angleterre (1763) [http://www.watkinsr.id.au/lalande.html இங்கிலாந்துப் பயண நாட்குறிப்புகள் (ஆங்கில மொழிபெயர்ப்பு 2002, 2014. இதில் இலாலண்டேவின் இரண்டு வாழ்க்கைப்பணிகளும் நாட்குறிப்புக் கட்டமைப்பு குறித்த உசாவலும் உள்ளன

இவர் பிரெஞ்சு அறிவியல் கல்வ்க்கழகத்துக்கு நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பியுள்ளர். மேலும், Connoissance de temps எனும் பிரெஞ்சு இதழின் பதிப்புப்பணியை 1759 முதல்1774 வரையிலும் மறுபடியும் 1794 முதல் 1807 வரையிலுமான ஆகிய இருகட்டங்களில் மேற்கொண்டுள்ளார். இவர் ழீன் எதியன்னே மந்துக்ளாவின் கணிதவியல் வரலாறு (1802) நூலின் இரண்டாம் பதிப்பினை, இறுதிப்படுத்த, இரண்டு தொகுதிகளை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jérôme Lalande
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  2. Dictionnaire universel de la Franc-maçonnerie; p. 501 (Larousse ed. 2011)
  3. Une loge maçonnique d'avant 1789: la R. L. Les neuf sœurs (Louis Amiable - ed. Baillière, 1897)
  4. Dictionnaire universel de la Franc-maçonnerie; p. 501 (Larousse ed. 2011)
  5. Une loge maçonnique d'avant 1789: la R. L. Les neuf sœurs (Louis Amiable - ed. Baillière, 1897)
  6. Seymour Chapin, The Men from Across La Manche: French Voyages, 1660-1790
  7. https://books.google.com/books?id=PboFDAAAQBAJ&pg=PA85&lpg=PA85&dq=J%C3%A9r%C3%B4me+Lalande+atheist&source=bl&ots=_2Zg980DlQ&sig=U-Yyk8uh-df1dyDykckEa0bn0lM&hl=en&sa=X&ved=0ahUKEwiNp7u91oPPAhXEKCYKHRgVD_gQ6AEIQTAG#v=onepage&q=J%C3%A9r%C3%B4me%20Lalande%20atheist&f=false
  8. http://www.nawcc-index.net/Articles/Lalande.pdf
  9. http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Lalande.html
  10. Fred William Price (2000). The planet observer's handbook. Cambridge University Press. p. 352. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.
  11. "USNO - Our Command History". U.S. Navy. Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.
  12. "Book of Members, 1780–2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.

மேலும் படிக்க

தொகு
  • Mémoires de l'Institut, VIII (1807) (JBJ Delambre)
  • J-B Delambre: Histoire de l'astronomie au XVIIIe siècle, p. 547
  • Magazin encyclopédique, II, 288 (1810) (Mme de Salm);
  • JS Bailly, Histoire de l'astronomie moderne, t. III, (ed. 1785)
  • J Mädler: Geschichte der Himmelskunde II, 141
  • R Wolf, Geschichte der Astronomie
  • JJ Lalande, Bibliographie astronomique p. 428
  • JC Poggendorff, Biographisch-lit. Handwörterbuch
  • Maximilien Marie: Histoire des sciences mathématiques et physiques IX, 35.
  • கணித மரபியல் திட்டத்தில் ஜெரோம் இலாலண்டே

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரோம்_இலாலண்டே&oldid=3814481" இலிருந்து மீள்விக்கப்பட்டது