ஜெர்டான் பக்கி
ஜெர்டான் பக்கி | |
---|---|
ஓசை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கேப்ரிமுல்கசு
|
இனம்: | கே. ஆட்ரிபென்னிசு
|
இருசொற் பெயரீடு | |
கேப்ரிமுல்கசு ஆட்ரிபென்னிசு ஜெர்டான், 1845 | |
ஜெர்டான் பக்கி (Jerdon's Nightjar) என்பது பக்கிகள் இனத்தை சார்ந்த ஒரு நடுத்தரமான அளவுடைய பறவையாகும். இது தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.
பெயர்கள்
தொகுதமிழில் :ஜெர்டான் பக்கி ஆங்கிலப்பெயர் :Jerdon's Nightjar அறிவியல் பெயர் :கேப்ரிமுல்கசு ஆட்ரிபென்னிசு
உடலமைப்பு
தொகுஇதனுடைய உடல் நீளம் சுமார் 28 செ. மீ. வரை மஞ்சள் பழுப்பான உடலில் பல நிறக்கறைகளும் கோடுகளும் கொண்டது.[2]
காணப்படும் பகுதிகள்
தொகுபசுமை மாறாக் காடுகளையும், புதர்க் காடுகளையும் சார்ந்து மலைகளில் 2000மீ உயரம் வரையிலும் ஆங்காங்கே காணலாம். பழுத்து உதிர்ந்து கிடக்கும் இலைகளிடையே எளிதில் பார்வைக்குப் புலப்படாத படியான சுற்றுச் சூழலோடு இயைந்ததாகப் பகலெல்லாம் படுத்திருக்கும். ஒரே இடத்தில் கூட்டமாகப் பத்துப் பன்னிரண்டு பறவைகள் கூடக் குழுவாக இருக்கக் காணலாம். மரக்கிளைகளில் குறுக்காகவும் நெடுக்காகவும் படுத்தபடி சயுங், சயுங் என உரக்கச் சம்மட்டியால் அடிக்கும்போது எழும் ஒலி போல குரல் கொடுக்கும்,
உணவு
தொகுபுழு பூச்சிகள், இரவில் பறக்கும் இறக்கையுள்ள பூச்சிகள் ஆகியவற்றைப் பிடித்துத் தின்னும்.[3]
இனப்பெருக்கம்
தொகுமார்ச் முதல் ஜூலை வரை சிறு செடிகள் முளைத்துள்ள சிற்றோடைக் கரையில் தரையில் காய்ந்த இலைதழைகளைக் குவித்து 2 முட்டைகள் இடும்.
பாதுகாப்பு
தொகுஜெர்டான் பக்கி 2004ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இது பெரிய வரம்பைக் கொண்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை நிலையானதாக கருதப்படுகிறது.[1]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Caprimulgus atripennis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "Jerdon%27s_nightjaநீண்டவால் பக்கி". பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:80