ஜெர்மானிய போர்க்கப்பல் பிஸ்மார்க்

இரண்டாம் உலகப் போரை சேர்ந்த செருமானிய பிஸ்மார்க் தர போர்க்கப்பல்

பிஸ்மார்க் எனும் போர் கப்பல் நாஸி ஜெர்மானியர்களின் கிரிக்ஸ்{{இது ஜெர்மானிய மொழியில் உள்ளது. இது நாஸி ஜெர்மானியர்களின் கடல் படையாக 1935 இலிருந்து 1945 வரை இருந்தது.}} கடற்படைக்காக கட்டப்பட்ட இரண்டு பிஸ்மார்க கப்பல்களில் முதலாவதாகும். இது வேந்தர் ஓட்டோ வான் பிஸ்மார்க் என்பாரின் நினைவாக இப்பெயரிட்டு அழைக்கப் பட்டது. இது ஜூலை 1936இல் ஹாம்பர்க்கில் உள்ள ப்ளோம்&வாஸ் கப்பல் கட்டும்துறையில் வைக்கப் பட்டு பெப்ருவரி 1939இல் ஆரம்பிக்கப் பட்டது. 1940 ஆகஸ்டில் முடிக்கப் பட்டது. பின் ஜெர்மானிய போர் கப்பல்களின் அணிக்குள்ளாக செல்ல நியமிக்கப் பட்டது. பிஸ்மார்க் மற்றும் அதன் சகோதரி கப்பல் ட்ரிபிட்ஸும்தான் ஜெர்மானியில் கட்டப் பட்ட கப்பல்களில் மிகப் பெரிய போர்கப்பல்கள் ஆகும். இன்னும் சொல்லப் போனால் ஐரோப்பிய ஆட்சியிலே இவைகள் தான் கட்டப் பட்ட மிகப் பெரிய கப்பல்களாகும்.

Bismarck in 1940
கப்பல் (நாட்சி ஜெர்மனி)
பெயர்: Bismarck
நினைவாகப் பெயரிடப்பட்டது: ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்
கட்டியோர்: Blohm & Voss, Hamburg
துவக்கம்: 1 July 1936
வெளியீடு: 14 February 1939
பணியமர்த்தம்: 24 August 1940
சிறப்புக்களும்
விருதுகளும்:
3 times mentioned in the Wehrmachtbericht
விதி:
  • Scuttled following incapacitating battle damage, 27 May 1941 in the North Atlantic
  • 48°10′N 16°12′W / 48.167°N 16.200°W / 48.167; -16.200
பதக்கங்கள்:
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:Bismarck-வகை battleship
பெயர்வு:
நீளம்:
  • 241.6 m (792 அடி 8 அங்) waterline
  • 251 m (823 அடி 6 அங்) overall
  • வளை:36 m (118 அடி 1 அங்)
    பயண ஆழம்:9.3 m (30 அடி 6 அங்) standard[a]
    உந்தல்:
  • 12 Wagner superheated boilers;
  • 3 geared turbines;
  • 3 three-blade screws
  • 148,116 shp (110,450 kW)
  • விரைவு:30.01 knots (55.58 km/h; 34.53 mph) during trials[1][b]
    வரம்பு:8,870 nmi (16,430 km; 10,210 mi) at 19 knots (35 km/h; 22 mph)
    பணிக்குழு:
  • 103 officers
  • 1,962 enlisted men
  • உணரிகளும்
    வழிமுறை முறைமைகளும்:
    FuMO 23
    போர்க்கருவிகள்:
  • 8 × 38 cm (15 அங்) SK C/34 (4 × 2)
  • 12 × 15 cm (5.9 அங்) SK C/28 (6 × 2)
  • 16 × 10.5 cm (4.1 அங்) SK C/33 (8 × 2)
  • 16 × 3.7 cm (1.5 அங்) SK C/30 (8 × 2)
  • 12 × 2 cm (0.79 அங்) FlaK 30 (12 × 1)
  • கவசம்:
  • Belt: 320 mm (12.6 அங்)
  • Turrets: 360 mm (14 அங்)
  • Main deck: 100 முதல் 120 mm (3.9 முதல் 4.7 அங்)
  • காவும் வானூர்திகள்:4 × Arado Ar 196 floatplanes
    வானூர்தி வசதிகள்:1 double-ended catapult

    காப்டன் எர்னெஸ்ட் லின்ட்மன் என்பவர் தலைமையில் இது செயல் பட்ட எட்டு மாத காலங்களில் இந்த போர் கப்பல் ஒரே ஒரு முறை தான் தாக்குதல் நடத்தியது. 1941 மே மாதத்தில் எட்டு நாட்கள் இந்த தாக்குதல் நடைபெற்றது. இதற்கு ரெயினுபங் என்று ஜெர்மானிய மொழியில் பெயரிடப் பட்டது. இந்த கப்பல் மற்றொரு கனமான போர்க்கப்பலான பிரின்ஸ் யூகன் என்ற கப்பலோடு இணைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் வட அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்று கொண்டிருந்த நேச நாட்டுப் போர்க்கப்பலோடு சண்டை இடும்படியாகச் சென்றது. இது ஸ்காண்டிநேவியன் அல்லாத சில பகுதிகளில் காணப் பட்டது. பிரித்தானிய கப்பல் படை அந்த இடங்களுக்குச் சென்று அவற்றை தடை செய்தது. டென்மார்க் ஜலசந்தியின் போர்தளத்தில் நேச நாடுகளின் சின்னமான இங்கிலாந்து இராணியின் ஹூட் போர்கப்பல் பிரின்ஸ் யூகனைத் தாக்கியது இந்த நிகழ்வு ஒருவேளை தவறுதலாக இருக்கலாம் அதே வேளையில இங்கிலாந்து இராணியின் அடுத்த கப்பல் வேல்ஸ் நாட்டு இளவரசர் என்பது பிஸ்மார்க்கைத் தாக்கியது. இந்த போரில் யூகனும் பிஸ்மார்க்கும் முதலில் ஹூடையும் பிறகு வேல்ஸ் இளவரசரையும் சேதப் படுத்தியது. இதனால் வேல்ஸ் இளவரசன் கப்பல் பின்வாங்கியது. பிஸ்மார்க்கும் மூன்று முறை எதிரி கப்பல்களை மூன்றுமுறை தாக்கியதால் கடும் சேதமடைந்தது. எனவே தனது தாக்குதல் பணியை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டியதாகிவிட்டது.

    ஹூட் கப்பலை நாசமாக்கியதால் இங்கிலாந்தின் அரச கப்பல் படையானது டஜன் கணக்கான போர்க்கப்பல்களுடன் இதை எதிர்க்க தயாரானது. பிஸ்மார்க் எதிரிகளால் சூழப்பட்ட பிரான்ஸை நோக்கி தனது சேதங்களை சரி செய்யும் நோக்கோடு கிளம்பியது. இவ்வாறு செல்லும் போது பிஸ்மார்க்கானது வழக்கில் இல்லாத 16 வாள்மீன் தேவதை எனும் இருதளவான் கலம் நீர்மூழ்கி கண்ணி வெடி குண்டுகளால் தாக்கப் பட்டது. இந்த கண்ணி வெடிகள் மதிப்பிற்குரிய இராணி கப்பல் படையைச் சேர்ந்த ராயல் ஆர்க் எனும் போர் விமானம் மூலம் போடப் பட்டது. அதன் திருப்பு பற்சக்கரத்தில் விழுந்த ஒரு குண்டானது அதை சரி செய்ய முடியாத ஒரு நிலைக்கு கொண்டு சென்றது. தனது கடைசி போரில் இது இரண்டு பிரித்தானிய போர் கப்பல் மற்றும் இரண்டு போர் கப்பல் வகையைச் சார்ந்த இரு வேறு கப்பல்களுடன் போரிட நேர்ந்தது. ஏற்கனவே சேதமடைந்திருந்த இக்கப்பல் இக்கடைசிப் போரின் நிமித்தம் மிகக் கடுமையாகச் சேதமடைந்தது. மேலும் இதன் மாலுமிகளால் துளையிடப் பட்டு இது கடலுக்குள் ஆழ்த்தப் பட்டது அவ்வாறு அமிழ்ந்து போகும் போது இது அநேகம் உயிர்களை பலியிட நேர்ந்தது. இந்த சேதமடைந்த கப்பல் 1989இல் ராபர்ட் பலர்ட் என்பவரால் கண்டறியப் பட்டது. அதன் பிறகு அநேகர் இதை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்

    கப்பலின் கட்டுமானமும் அதன் தனி சிறப்புகளும்

    தொகு

    பிஸ்மார்க் கப்பல் கட்டுவதற்கான உத்தரவு "எர்ஸாட்ஸ் ஹனோவர்" (ஜெர்மானிய மொழி - ஹனோவருக்குப் பதிலாக) என்ற பெயரில் வழங்கப் பட்டது. இவைகள் 1880 - 1905 வரை கட்டப்பட்ட ஜெர்மானிய போர்க் கப்பல்களுக்குப் பதிலாகக் கட்டப் பட்டதாகும். 1880 -1905 வரை கட்டப் பட்ட கப்பல்கள் pre-dreadnaught என்று அழைக்கப் பட்டன இந்த வார்த்தை வழக்கொழிந்த ஆங்கில வார்த்தையிலிருந்து பெறப் பட்டது. இந்த வார்த்தை பயமில்லாத மனிதன் என்று அர்த்தம் கொளவதாகும். இவ்வகை கப்பல்கள் ஜெர்மானிய பேரரசுக்கு உரியதாகும். இது ஜெர்மானிய பேரரசின் கப்பல் படை என்று அழைக்கப் பட்டது. இவைகள் 1871 லிருந்து 1919 வரை செயல்பட்டு வந்தது. இந்த அரச கப்பல் படைக்காகத்தான் பிஸ்மார்க் கப்பல் கட்டும் படி உத்தரவு வழங்கப் பட்டது. ஆங்கில எழுத்து "எஃப்" என்கிற தலைப்பில் இந்த ஒப்பந்தம் வழங்கப் பட்டது. இந்த ஒப்பந்தம் ஹம்பர்க்கில் உள்ள ப்ளோம்&வாஸ் எனும் கப்பல் கட்டும் துறைக்கு வழங்கப் பட்டது. இங்கு ஜூலை 1 1936இல் மீனின் துடுப்பு போல உள்ள அமைப்பு கப்பலின் இரு பக்கமும் மத்திய கோடை ஒட்டி வைக்கப்பட்டது. இந்த பணி ஹெல்கன்IX என்ற இடத்தில் வைத்து நடைபெற்றது.1939 , பெப்ருவரி 14 அன்று இந்தக் கப்பல் நிறைவுற்று தன் பணியைத் தொடங்கும் படி கடலுக்குள் செலுத்தப் பட்டது. அந்த சிறப்பு கொண்டாட்டத்தின் போது இந்த கப்பலின் பெயருக்கு உரியவரான அரசர் ஓட்டோ பிஸ்மார்க் என்பாரின் பெயர்த்தி டாரதி வான் லோயன்ஃபெல்ட் என்பவர் கப்பலுக்கு பெயர் சூட்டினார். பெயர் சூட்டு விழாவில் அடால்ஃப் ஹிட்லரும் பேசினார். இதன் பிறகு கப்பலுக்கு பொருத்த வேண்டிய பாகங்கள் பொருத்தப் பட்டது. பிஸ்மார்க் முதன் முதலாக 24 ஆகஸ்து 1940இல் கடற்படை கப்பல்களோடு சேர்ந்து தனது முதல் சோதனை ஓட்டத்தைத் துவங்கியது. இந்த சோதனை ஓட்டம் பால்டிக் கடலில் நடைபெற்றது. கப்பலின் தலைவர் ஸீர் ஸி எர்னஸ்ட் லின்ட்மன் தலைமை பொறுப்பு ஏற்று கப்பலை வழி நடத்தினார்.

    இக்கப்பல் கட்டி முடிக்கப் பட்டவுடன் இதன் நிறை 41,700 டன்கள் ஆகும். அவற்றில் ஏற்றப் படும் பொருட்களின் நிறையோடு 50,300 டன் இருந்தது. இதன் முழு நீளம் 251 மீட்டர், இதன் மிக அகலமான புள்ளி 36மீ மேலும் கப்பலின் அடிபாகமும் நீரும் சந்திக்கும் பகுதியின் அதிக பட்ச நீளம் 9.9 மீட்டர் ஆகும். இக்கப்பல் ஜெர்மானியர்களின் போர்கப்பல் எல்லாவற்றிலும் பெரியதாகும். இங்கிலாந்தின் அரச கப்பல் வான்கார்டை விட ஐரோப்பாவில் உள்ள மற்ற கப்பல்கள் எல்லாவற்றிலும் இது பெரியதாகும். இக்கப்பல் ப்ளோம்&வாஸ் மூன்று வலிமைமிக்க நீராவி விசையாழிகள் மற்றும் ப்ன்னிரெண்டு எண்ணெய் கொதிகலன் மூலம் ஆற்றல் பெற்றது. இவைகள் மூலம் இக்கப்பல் 110,450

    அடிக்குறிப்பு

    தொகு
    குறிப்பு
    1. Bismarck's draft at full load was 9.9 மீட்டர்கள் (32 அடி 6 அங்).[1]
    2. One work claims a speed of 31.1 knots (57.6 km/h; 35.8 mph).[2]
    மேற்கோள்
    1. 1.0 1.1 Gröner, ப. 33.
    2. Jackson, ப. 24.