ஜெர்மைன் கிரீர்

ஜெர்மைன் கிரீர் (Germaine Greer) (பிறப்பு 29 சனவரி 1939) ஓர் ஆத்திரேலிய எழுத்தாளர், கல்வியாளர், இதழியலாளர் ஆவார். சமகால ஆங்கில இலக்கிய அறிஞரும் ஆவார்.இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகுந்த சொல்வண்ணம் படைத்த பெண்ணியவாதியாகக் கருதப்படுகிறார்.[1][2][3]

ஜெர்மைன் கிரீர்
2006ஆம் ஆண்டு "அம்பர் மவுத் " ஹல் இலக்கியத் திருவிழாவில்
2006ஆம் ஆண்டு "அம்பர் மவுத் " ஹல் இலக்கியத் திருவிழாவில்
பிறப்பு29 சனவரி 1939 (1939-01-29) (அகவை 85)
மெல்பேர்ண், ஆத்திரேலியா
தொழில்கல்வி எழுத்தாளர்
தேசியம்ஆத்திரேலியர்
கல்விமெல்பேர்ண் பல்கலைக்கழகம் (கலையில் இளங்கலைப்பட்டம்)
சிட்னி பல்கலைக்கழகம் (முதுகலைப்பட்டம்)
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (முனைவர் பட்டம்)
காலம்1970–நடப்பு
கருப்பொருள்கலை வரலாறு, ஆங்கில இலக்கியம், பெண்ணியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பெண் திருநங்கைகள் (The Female Eunuch)

அவரது புத்தகம் பெண் திருநங்கைகள் (The Female Eunuch) 1970ஆம் ஆண்டில் வெளியாகி பன்னாட்டு கூடியவிற்பனையானதை அடுத்து புகழ்பெற்றார். அவரது கருத்துக்களைப் பாராட்டியும் குறைகண்டும் பல விவாதங்கள் எழுந்தன. அவருடைய பிற படைப்புகள்: பாலுணர்வும் எதிர்காலமும்:மனித கருவளத்தின் அரசியல் (Sex and Destiny: The Politics of Human Fertility) (1984); மாற்றம்: பெண்,முதுமை மற்றும் மாதவிடாய் நிறுத்தம் (The Change: Women, Ageing and the Menopause) (1991) மற்றும் செகப்பிரியரின் மனைவி (Shakespeare's Wife) (2007). வார்விக் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியம் மற்றும் ஒப்புமை கல்வித்துறையின் சிறப்பு பேராசிரியராக உள்ளார்.ஜெர்மைன் கிரீர் ஆண்களுடன் சமத்துவம் என்பதற்கெதிராக பெண்கள் விடுதலையையே தமது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Jardine, Lisa. Growing up with Greer, The Guardian, 7 March 1999.
  2. Bone, Pamela. "Western sisters failing the fight" பரணிடப்பட்டது 2008-07-28 at the வந்தவழி இயந்திரம், The Australian, 8 March 2007.
  3. "Germaine Greer," Encyclopaedia Britannica, 2007.
  4. "1970களின் இயக்கம் பெண்களின் விடுதலை-ஆங்கிலத்தில் 'Women's Liberation' என்று அறியப்பட்டிருந்தது. பலரும் சுருக்கமாக 'Women's Lib'எனவும் ஆர்வலர்கள் லிப்பர்கள் எனவும் கேலியாக அழைக்கப்பட்டனர். ஆகவே லிப்பர்கள் என்ற சொல் தவிர்க்கப்பட்டு பெண்ணியவாதிகள் என்று அழைக்கப்பட்டபோது மகிழ்ந்தோம்.ஆயினும் நாமனைவரும் கவனிக்கத் தவறியது,"விடுதலை"யின் தீவிரம் குறைந்து சமத்துவத்திற்கு நீர்த்தமையாகும்.விடுதலைப் போராட்டங்கள் சமத்துவத்திற்காக அல்லாது,இருவருக்கும் உள்ள வேறுபாட்டினை ஏற்று அந்த வேறுபாட்டிற்குரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து தன்வரையறைக்கும் சுயநிர்ணயத்திற்கும் வழிகோலுவதாகும்.அடிமைப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்ட விடுதலை போன்றதே பெண்களுக்குக் கேட்கப்படும் விடுதலையும். பெண்கள் விடுதலை ஆண்களின் திறன்களில் பெண்களுக்கான திறனை மதிப்பிட ஏற்பட்டதல்ல;அறுபதுகளின் பிற்பட்ட மற்றும் எழுபதுகளின் துவக்ககால பெண்விடுதலை போராட்டக்காரர்கள் அடிமைப்பட்ட ஆணின் வாழ்க்கையைப் பெற ஒப்ப மாட்டார்கள். புகைபிடிக்கும் ஆண்களின் அறையில் பெண்களும் செல்ல வேண்டும் என சமத்துவவாதிகள் விரும்பினர். ஆனால் உலகெங்கும் உள்ள விடுதலையாளர்கள் தங்கள் கொள்கைகளைத் தாங்களே வரையறுத்து தங்கள் முன்னுரிமைகளை தாங்களே தீர்மானித்து தங்கள் வாழ்வை தாங்களே வாழ்வதன் மூலம் பெண்களின் வாழ்வை எவ்வாறு மேம்படுத்தலாம் என எண்ணுகிறார்கள்." "The Female Eunuch அத்தகைய சமத்துவத்தை வலியுறுத்தும் பெண்ணிய நூல் அல்ல"
  5. Greer, Germaine, (1999), the whole woman, Transworld Publishers Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 038560016X, pp.1-2

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மைன்_கிரீர்&oldid=3368585" இலிருந்து மீள்விக்கப்பட்டது