ஜெ. வைத்தியநாதன்
ஜெ. வைத்தியநாதன் (பிறப்பு: 1965) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் ஆவார்.[1]
இசைப் பயிற்சி
தொகுவைத்தியநாதன் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, பிரபல கருநாடக இசைப் பாடகர் டி. கே. ஜெயராமன் ஆவார்.[2] வைத்தியநாதன் மிருதங்க இசையை பாலக்காடு ராஜாமணி, திண்டுக்கல் இராமமூர்த்தி, ஸ்ரீநிவாசன், தஞ்சாவூர் ராம்தாஸ், டி. கே. மூர்த்தி ஆகியோரிடம் கற்றார்.[1]
இசைப் பணி
தொகுஅகில இந்திய வானொலியில் உயர்தரக் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டவர். டி. கே. பட்டம்மாள், எம். எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, கே. வி. நாராயணசுவாமி, எம். பாலமுரளிகிருஷ்ணா, டி. என். கிருஷ்ணன் ஆகிய புகழ்மிக்க கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார்.[1]
அருணா சாயிராம், சுதா ரகுநாதன் உள்ளிட்ட இக்காலத்து இசைக் கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்து வருகிறார்.
விருதுகள்
தொகு- கலைமாமணி விருது, வழங்கியது: தமிழ் நாடு அரசு
- இசைப் பேரொளி விருது (2010), வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை[2]
- சங்கீத நாடக அகாதமி விருது (2016), வழங்கியது: இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ 2.0 2.1 "Recognition for percussion". தி இந்து. 30 நவம்பர் 2010. https://www.thehindu.com/features/friday-review/music/Recognition-for-percussion/article15721965.ece. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.