ஜேக் சுவாகர்
டொனால்ட் ஜேக்கப் "ஜேக்" ஹேகர் ஜூனியர் ( Donald Jacob "Jake" Hager Jr.பிறப்பு மார்ச் 24, 1982) ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைஞர் ஆவார், தற்போது ஆல் எலைட் மல்யுத்தத்தில் கையெழுத்திட்டு விளையாடி வருகிறார். இவர் ஜாக் ஸ்வாகர் என்ற மேடைப் பெயரில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் மல்யுத்தப் போட்டிகளில் இவர் விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். கலப்பு தற்காப்புக் கலைஞராக, இவர் தற்போது பெலட்டர் எம்.எம்.ஏ உடன் கையெழுத்திட்டு அங்கு மல்யுத்தப் போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். அங்கு இவர் மிகுகன வாகையாளர் பிரிவில் போட்டியிடுகிறார். ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக, இவர் தற்போது லூச்சா அண்டர்கிரவுண்டில் ஜேக் ஸ்ட்ராங் என்ற மேடைப் பெயரில் பங்கேற்று வருகிறார், அங்கு இவர் தற்போதைய லூச்சா அண்டர்கிரவுண்ட் வாகையாளர் பட்டத்தினை வென்றார்.
ஹேகர் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு பிரிவில் கல்வி பயின்றார். அங்கு இவர் கால்பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் பங்கேற்றார். இவர் தனது இரண்டாம் ஆண்டில் முழுநேர மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றார் 2006 ஆம் ஆண்டில் ஹாகர் மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அங்கு இவர் "ஜாக் ஸ்வாகர்" எனும் மேடைப்பெயரில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றார். இதில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் மிகுகன வாகையாளர் பட்டம் மற்றும் ஈ சி டபிள்யூ வாகையாளர் பட்டங்களை தலா ஒரு முறை வென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் அந்த நிறுவனத்தினை விட்டு வெளியேறி எம் எம் ஏ கலவை தற்காப்பு பிரிவில் மல்யுத்தப் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார்.2017 ஆம் ஆண்டில், ஹேகர் பெலேட்டர் எம்.எம்.ஏ உடன் ஒப்பந்தம் செய்தார். பெலட்டர் 214 இல் ஜே.டபிள்யூ கிசருக்கு எதிராக ஜனவரி 26, 2019 அன்று இவர் தனது முதல் தொழில்முறை மல்யுத்தப் போட்டியில் பங்குபெற்றார். அந்தப் போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஹேகர் தனது ஐந்து வயதில் மல்யுத்தத்தைத் தொடங்கினார். இவர் உயர்நிலைப் பள்ளியில் டேனி ஹாட்ஜின் பேரனுடன் [1] மல்யுத்தம் செய்தார் , மேலும் ஓக்லஹோமாவின் பெர்ரியில் இவர்கள் இருவரும் மிக அருகாமையில் வாழ்ந்து வந்ததால் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.இவர் கால்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டு, தனது கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் மல்யுத்தத்தில் முழுமையாக கவனம் செலுத்தினார்.[1][2][3] அந்த நேரத்தில் உலக மல்யுத்த பொழுதுபோக்கு திறமை உறவுகளின் தலைவராக இருந்த ஜிம் ரோஸுக்கு இவர் அறிமுகப்படுத்தப்பட்டார்,
2006 ஆம் ஆண்டில், ஹேகர் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் பட்டம் பெற்றார் .[4] பட்டப்படிப்பைத் தொடர்ந்து, இவர் டெக்சாஸின் டல்லாஸில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய தேர்வானார். ஆனால் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு அதில் பங்கேற்றார்.[1]
ஈ சி டபிள்யூ வாகையாளர்
தொகு2008 ஆம் ஆண்டில் தனது முதல் போட்டியினை ஈ சி டபிள்யூ வில் விளையாடினார். செப்டம்பர் 9 இல் ஜேக் சுவாகர் எனும் பெயரில் உள்ளூர் நபர் ஒருவரை எதிர்த்து விளையாடினார். எக்ஸ்ட்ரீம் ரூல்ஸ் நிகழ்ச்சியில் ட்ரீமர் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.[5]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Mooneyham, Mike (May 2, 2010). "World champ Swagger climbing WWE ladder". The Post and Courier. பார்க்கப்பட்ட நாள் May 24, 2010.
- ↑ "Jack Swagger Profile". Online World of Wrestling. பார்க்கப்பட்ட நாள் January 28, 2008.
- ↑ Baines, Tim (May 16, 2009). "Plenty of Swagger in former champ". Slam! Sports. Canadian Online Explorer. Archived from the original on பிப்ரவரி 2, 2014. பார்க்கப்பட்ட நாள் May 16, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Stewart, Brent (January 24, 2009). "Critically lauded film, 'The Wrestler,' brings sports entertainment to renewed popularity". TheSouthern.com. பார்க்கப்பட்ட நாள் January 26, 2009.
- ↑ Bishop, Matt (November 25, 2008). "ECW: Extreme Rules are back!". Slam! Sports. Canadian Online Explorer. Archived from the original on ஜூலை 14, 2012. பார்க்கப்பட்ட நாள் May 24, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)