ராபர்ட் சார்லஸ் "ஜாக்" ரஸ்ஸல், (Robert Charles "Jack" Russell, பிறப்பு 15 ஆகஸ்ட் 1963) இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் கலைஞராக பரவலாக அறியப்படுகிறார். துடுப்பாட்டத்தில் இவர் இழப்புக் கவனிப்பாளராகவும், மட்டையாளராகவும் விளையாடினார். கால்பந்துப் போட்டியிலும் கோல் கவனிப்பா:ளராகவும் இருந்துள்ளார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

ரஸ்ஸல் இங்கிலாந்தின் க்ளூசெஸ்டர்ஷையரில் ஸ்ட்ரட் என்ற இடத்தில் பிறந்தார். ஸ்ட்ரூட் கிரிக்கெட் கிளப்பிலும், ஆர்ச்வே பள்ளியிலும் தனது தந்தை ஜானிடமிருந்து முதல் தர கிரிக்கெட் வீரராக மாற அவருக்கு தேவையான ஊக்கத்தினைப் பெற்றார்.[2] ஹெட்டிங்லேவில் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் இவர் ரிக் மெக்கஸ்கர் , கிரெய்க்கின் பந்துவீச்சில் பிடிபடுதலில் ஆட்டமிழந்ததை தனது பதினான்காவது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன், அவர் தொலைக்காட்சியில் பார்த்தார். இவ்வளாவு கீழிறங்கிய பந்தினைப் பிடித்தது அற்புதம் .நானும் இது போன்றே துடுப்பாட்டம் விளயாட வேண்டும் என நினைத்தேன் எனக் கூறினார். இதுவே இவரை இழப்புக் கவனிப்பாளராக விளையாட ஊக்கம் அளித்தது.

தனது சகோதரின் மரணமும் இவரை துடுப்பாட்டம் பக்கம் திசை திருப்ப ஊக்கமாக இருந்ததாகக் கூறினார்.[2] ஆர்ச்வே பள்ளியின் விளையாட்டு ஆசிரியர், ரிக்கி ரட்டர், ரஸ்ஸலை க்ளோசெஸ்டர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் சங்கத்திற்காக விளையாட அறிவுறுத்தினார்.பின்னர் பிரிஸ்டல் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்றார், 1981 ஆம் ஆண்டில் க்ளூசெஸ்டர்ஷையர் துடுப்பாட்ட சங்கத்தில் இவர் நிரந்தர வீரராக ஆனார்.

கவுண்டி மற்றும் டெஸ்ட் வாழ்க்கை தொகு

பதின்வயதின் பிற்பகுதி வரை அவர் சர்வதேச விக்கெட் கீப்பராக மாறுவார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் அவர் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இளையோர் மட்டத்தில் பரவலாக அறியப்பட்டார்.தனது 14 ஆம் வயதில் ம ணிக்கு 75 கி மீ வேகத்தில் பந்துவீசினார்.

ரஸ்ஸல் பல சர்ச்சைக்குரிய தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். ரஸ்ஸல் ஒரு திறமையான இழ்ப்புக் கவனிப்பாளராக இருந்தார்.[3] 1990 ஆம் ஆண்டில், அவர் விஸ்டனின் ஆண்டின் ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார்.

கலை தொகு

பள்ளியில் கலைப் பிரிவினை படிக்கவில்லை என்றாலும், அவருக்கு கலை மீது ஆர்வம் இருந்தது, சிறு வயதிலேயே டியோராமா ரயில்வே வடிவழகு மூலம் இது வெளிப்படுத்தப்பட்டது. வொர்செஸ்டர்ஷையரில் ஒரு மழைக்கால ஆரம்பகால கவுண்டி துடுப்பாட்ட விளையாட்டின் போது, மழை நிற்கும் வரை காத்திருந்தபோது, அவர் ஊருக்குள் நுழைந்து ஒரு வண்ணப் பென்சில்கள் மற்றும் சில படம் வரைவரதற்கான பொருட்களை வாங்கினார்.[4]

ரஸ்ஸல் தற்போது சிப்பிங் சோட்பரியில் தனது சொந்த படக் காட்சிகளைக் கொண்டுள்ளார், மேலும் லண்டனில் அதனைக் காட்சிப்படுத்துகிறார், க்ளூசெஸ்டர்ஷையரில் தனது வீட்டுப் பகுதியின் காட்சிகள் மற்றும் , கட்டிடக்கலை, உன்னதமான இராணுவ போர்க்களங்கள் மற்றும் வனவிலங்குகள் போன்றவற்றினைக் காட்சிப்படுத்துகிறார். மேலும் நகைச்சுவை நடிகர் எரிக் சைக்ஸ் (ஒரு சக இழப்புக் கவனிப்பாளர்), சர் நார்மன் விஸ்டம், சர் பாபி சார்ல்டன், எரிக் கிளாப்டன், ஹென்றி அல்லிங்காம் மற்றும் எடின்பர்க் டியூக் எச்.ஆர்.எச் இளவரசர் பிலிப் ஆகியோரையும் வரைந்துள்ளார்.[4] அவரது பணிகள் உணர்வுப்பதிவுவாதமமற்றும் புள்ளிப்படிமவியம் ஆகியவற்றின் தாக்கங்களைக் காட்டுகிறது என்று அவர் கூறுகிறார்.[5]

ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை தொகு

2007 ஆம் ஆண்டில், ரஸ்ஸல் கால்பந்து அணியான ஃபாரஸ்ட் கிரீன் ரோவர்ஸின் கோல்-காப்பாளர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், பின்னர் கான்பரன்ஸ் நேஷனலில் விளையாடினார்.[6] அவர் 2008 இல் க்ளூசெஸ்டர்ஷையரில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கினார்.[7][8]

சான்றுகள் தொகு

  1. Jack Russell (2008). The Jack Russell Gallery பரணிடப்பட்டது 30 சூன் 2008 at the வந்தவழி இயந்திரம். Retrieved on 21 June 2008.
  2. 2.0 2.1 Russell, Jack & Hayter, Peter – Jack Russell – Unleashed Pub. HarperCollinsWillow, 20 May 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-218768-X
  3. Cricinfo.com.Jack Russell: Praise for 'one of the greatest' (28 October 1998). Retrieved on 29 April 2009.
  4. 4.0 4.1 Robert Philip (19 December 2007). "Jack Russell's new life is a picture of fulfilment". London: The Telegraph. https://www.telegraph.co.uk/sport/cricket/2328912/Jack-Russells-new-life-is-a-picture-of-fulfilment.html. பார்த்த நாள்: 2009-09-26. 
  5. Jack Russell Website
  6. Oliver, Pete (2007). Rovers draw on Russell expertise. BBC Sport. Retrieved on 21 June 2008.
  7. Hopps, David (2008). Gloucestershire turn to Jack Russell as they await return of top dog Bracewell. Guardian Sport. Retrieved on 21 June 2008.
  8. Kidd, Patrick (2008). Eccentricity on Gloucestershire's menu as Jack Russell returns. The Times. Retrieved on 21 June 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேக்_ரசல்&oldid=3843488" இலிருந்து மீள்விக்கப்பட்டது