ஜேனட் உலுகுமான்

ஜேனட் ஜி. உலுகுமான் (Janet G. Luhmann) (பிறப்பு: 1946) ஒரு அமெரிக்க இயற்பியலாளரும் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் ஆய்வகத்தின் மூத்த ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1] இவர் சூரியக் கோள்கள் காந்த மண்டலங்கள், சூரிய மண்டல இயற்பியல் ஆகியவற்றில் பரந்த அளவிலான தலைப்புகளில் அவர் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இரட்டை விண்வெளி விண்கலம் சுட்டீரியோ பணியில் மொத்தல் கருவி தொகுப்பின் முதன்மை ஆய்வாளர் ஆவார்.[2] IMPACT என்பது துகள்கள், சூரியப்புறணி உமிழ்வின் (சிஎம்இ) இன் கள அளவீடுகளைக் குறிக்கிறது. இது சூரிய ஆற்றல் உயர் ஆற்றல் துகள்களின் (SEP) பண்பகள் களத் திசையன் காந்தப்புலம் ஆகியவற்றாலான சூரியக் காற்று மின்ம, மின்னன்களின் முப்பருமானப் பரவல் படிமம் சார்ந்த ஏழு கருவிகளைக் கொண்டுள்ளது.[3]

ஜேனட் ஜி. உலுகுமான்
Janet G. Luhmann
தேசியம்அமெரிக்கர்
துறைபுவி இயற்பியல்
எல்லிய இயற்பியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி
நாசா
கல்வி கற்ற இடங்கள்இளம் அரிவியல் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்
மூதறிவியல், மேரிலாந்து பல்கலைக்கழகம்
முனைவர், மேரிலாந்து பல்கலைக்கழகம்
இணையதளம்
Research profile

இளமையும் கல்வியும் தொகு

கார்னகி - மெல்லன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அரிவியல் பட்டமும் , மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் வானியலில் மூதரிவியல், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் துகள்கள், புலங்கள் துறையில் தொழில்நுட்ப ஊழியர்களில் ஒருவராக 1974 ஆம் ஆண்டில் தனது தொழில்முறை ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புவி இயற்பியலாளர் பதவியை ஏற்றார். 1994 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பெர்க்கேலி பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் மூத்த உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.

ஆராய்ச்சித் தொழில் தொகு

கோள்களுடனான சூரியக் காற்றின் ஊடாட்டங்கள்கள் மற்றும் சூரியனுக்கும் சூரிய எல்லியக் கோள நிலைமைகளுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய விண்கல நோக்கீடுகளையும் படிமங்களையும் பயன்படுத்துவதில் இவரது பணி கவனம் செலுத்துகிறது.[4] அவர் சுமார் 500 பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் , இவை சுமார் 29,000 சான்றுகளையும் 88 எச் - சுட்டிகளையும் பெற்றுள்ளமை இவரை இந்தத் துறையில் மிக முதன்மையான அறிவியலாளர்களில் ஒருவராக காட்டுகிறது.[5]

அவர் இரட்டை விண்வெளி விண்கல சுட்டீரியோ பயணத்தில் துகள்கள், சூரியப்புறணிப் பொருண்மை உமிழ்வு பெயர்வு நிலையங்களின் கள அளவீடுகளுக்கான மொத்தல் கருவித் தொகுப்பின் முதன்மை ஆய்வாளர் ஆவார்.[6] மொத்தல் சூரியக் காற்று மின்ம, காந்தப்புல அளவீடுகளை வழங்குகிறது. இதற்கு முன்பு இவர் செவ்வாய்க் கோளின் மேவன் பயணத்தின் துணை முதன்மை ஆய்வாளராக இருந்தார்.[7] அவர் செவ்வாய் எக்ஸ்பிரசு, வெள்ளிசிஎக்ஸ்பிரசு ஆகிய இரண்டிலும் ஆஸ்பெரா பிளாஸ்மா ஸ்பெக்ட்ரோமீட்டர் குழுவில் இணை ஆய்வாளராகவும் பயோனீர் வெள்ளிச் சுற்றுகலன், முனைய ஆய்வுத் திட்டம் , காசினியின் இயனி, நொதுமல் பொருண்மை கதிர்நிரல்மானி குழு, செவ்வாய் கோள் போபோசுப் பணி ஆகியவற்றில் அறிவியல் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தேசிய அறிவியல் அறக்கட்டளை நிதியுதவியுடன் விண்வெளி வானிலைப் படிம அமைப்பு மையத்திற்கான சூரிய மண்டல அறிவியல் நடவடிக்கைக்கு இவர் தலைமை தாங்கினார்.[8]

தகைமைகளும் விருதுகளும் தொகு

தேசிய அறிவியல் கல்விக்கழகத்ததால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் , தனது துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க சூரிய , விண்வெளி இயற்பியல் குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.[9]

இவர் சூரிய மற்றும் விண்வெளி இயற்பியல் குறித்த தேசிய குடிமக்கள் பதிவேட்டு குழுவின் தலைவர் ஆவார்.[10]

2021: ழீன் டொமினிக் காசினி பதக்கம்,ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் தகைமை உறுப்பினர் ஆகியன வழங்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டில் அவருக்கு அரசு வானியல் கழகத்தின் தகைமை ஆய்வுறுப்பினர் நல்கை வழங்கப்பட்டது.[11]

2012 ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சிக் குழு (COSPAR) விண்வெளி அறிவியல் விருதை இவருக்கு வழங்கியது.[12]

மேலும் 2012 ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் யூகின் பார்க்கர் சொற்பொழிவை ஆற்றினார் , இது சூரிய, எல்லியக்கோள அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த ஒரு விண்வெளி அறிஞருக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளில் இரண்டு வழங்கப்படுகிறது.[13]

2007: புவி காந்தவியல், வளிமண்டல மின்சாரம், காற்றியக்கவியல், விண்வெளி இயற்பியல் மற்றும் தொடர்புடைய அறிவியல் புலங்களின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப தலைமைக்காக அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் ஜான் ஆடம் பிளெமிங் பதக்கம் வழங்கப்பட்டது.[10]

1998 - 2001: புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழின் தலைமை ஆசிரியர்.[14]

1997: அவர் அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.[15]

1994 - 1996: அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் விண்வெளி இயற்பியல், வானியல் பிரிவின் தலைவராக அமர்த்தப்பட்டார்.[16]

மேலும் காண்க தொகு

  • வானியல் கருவித் திட்டங்களில் தலைமைப் பதவிகளில் உள்ள பெண்களின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. "Janet Luhmann » Planetary Members". Space Sciences Lab. 2018-08-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  2. Luhmann, J. G.; Curtis, D. W.; Schroeder, P.; McCauley, J.; Lin, R. P.; Larson, D. E.; Bale, S. D.; Sauvaud, J.-A. et al. (April 2008). "STEREO IMPACT Investigation Goals, Measurements, and Data Products Overview". Space Science Reviews 136 (1–4): 117–184. doi:10.1007/s11214-007-9170-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-6308. Bibcode: 2008SSRv..136..117L. 
  3. "STEREO/IMPACT - About IMPACT".
  4. Luhmann, Janet G.; Pollack, James B.; Colin, Lawrence (1994). "The Pioneer Mission to Venus". Scientific American 270 (4): 90–97. doi:10.1038/scientificamerican0494-90. Bibcode: 1994SciAm.270d..90L. https://archive.org/details/sim_scientific-american_1994-04_270_4/page/90. 
  5. "Janet G Luhmann - Google Scholar Citations". scholar.google.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  6. "STEREO/IMPACT". sprg.ssl.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  7. Garner, Rob (2016-06-02). "MAVEN Team". NASA. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  8. "Center for Integrated Solar Weather Modeling". sprg.ssl.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  9. Climate, Board on Atmospheric Sciences and; Resources, Commission on Geosciences, Environment and; Studies, Division on Earth and Life; Council, National Research (1998-11-05). The Atmospheric Sciences: Entering the Twenty-First Century. National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780309517652. https://books.google.com/books?id=U7NuAgAAQBAJ&q=Committee+on+Solar+and+Space+Physics+luhmann. 
  10. 10.0 10.1 "Janet G. Luhmann". Honors Program. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09."Janet G. Luhmann". Honors Program. Retrieved 2019-10-09.
  11. "RAS Awards 2015RAS AWARDS". Astronomy & Geophysics 56 (1): 1.10–1.11. 2015-02-01. doi:10.1093/astrogeo/atv022. பன்னாட்டுத் தர தொடர் எண்:1366-8781. https://academic.oup.com/astrogeo/article/56/1/1.10/262379. 
  12. "Space Science Award | COSPAR". Archived from the original on 2014-09-24.
  13. "Eugene Parker Lecture | AGU". www.agu.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  14. "Journal of Geophysical Research: Space Physics". AGU Journals. doi:10.1002/(ISSN)2169-9402. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  15. "Fellows Alphabetical List". Honors Program. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
  16. "Portrait of Janet Luhmann Luhmann Janet A1". www.aip.org. 2014-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேனட்_உலுகுமான்&oldid=3811278" இலிருந்து மீள்விக்கப்பட்டது