வீனஸ் எக்ஸ்பிரஸ்
வீனஸ் எக்ஸ்பிரஸ் (Venus Express, VEX) என்பது ஐரோப்பாவின் ஈசா விண்வெளி நிறுவனம் வெள்ளிக் கோளை ஆராய்வதற்காக முதன் முதலில் அனுப்பிய விண்கலம் ஆகும். 2005 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள் ஏவப்பட்ட இவ்விண்கலம் வெள்ளியின் சுற்றுப் பாதையை ஏப்ரல் 2006 இல் அடைந்தது. வெள்ளிக் கோள் பற்றிய தகவல்களை இது தொடர்ச்சியாக பூமிக்கு அனுப்பி வருகிறது. மொத்தம் ஏழு உபகரணங்களைக் கொண்டு சென்ற இவ்விண்கலத்தின் முக்கிய நோக்கம், வெள்ளியின் வளிமண்டலத்தை நீண்ட காலம் கண்காணிப்பதாகும். இத்திட்டத்திற்கு ஈசா நிறுவனம் டிசம்பர் 31, 2012 வரை நிதியுதவி வழங்கும்.
இயக்குபவர் | ஈசா |
---|---|
திட்ட வகை | விண்சுற்றுக் கலன் |
செயற்கைக்கோள் | வெள்ளி |
ஏவப்பட்ட நாள் | 9 நவம்பர் 2005 03:33:34 UTC |
ஏவுகலம் | சோயூஸ்-FG/பிரெகாட் |
திட்டக் காலம் | 153 நாட்கள்; சுற்றுப்பாதையில் 1,000 நாட்கள் 19 ஆண்டுகள், 1 மாதம், 13 நாட்கள் elapsed |
தே.வி.அ.த.மை எண் | 2005-045A |
இணைய தளம் | www.esa.int/SPECIALS/Venus_Express |
நிறை | 1,270 கிகி |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
அரைப் பேரச்சு | 39,468.195 கிமீ |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | 0.8403 |
சாய்வு | 89.99 பாகை |
சுற்றுக்காலம் | 24 மணி |
காலக்கோடுகளும் முக்கிய கண்டுபிடிப்புகளும்
தொகு- 9 நவம்பர் 2005: கசக்ஸ்தானின் பாய்க்கனூர் ஏவுதலத்தில் இருந்து 03:33:34 UTC மணிக்கு ஏவப்பட்டது.
- 11 ஏப்ரல் 2006: வெள்ளியின் சுற்றுவட்டத்தில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. (சுற்றுக்காலம்: 9 நாட்கள்)
- 13 ஏப்ரல் 2006: வீனஸ் எக்ஸ்பிரஸ் எடுத்த வெள்ளியின் முதலாவது படங்கள் வெளியிடப்பட்டன.
- 20 ஏப்ரல் 2006: சுற்றுவட்ட உயரம் குறைக்கப்பட்டது. சுற்றுக்காலம் இப்போது 40 மணி.
- 23 ஏப்ரல் 2006: சுற்றுவட்ட உயரம் மேலும் குறைப்பு. சுற்றுக்காலம் இப்போது 25 மணி 43 நிமி.
- 7 மே 2006: வீனஸ் எக்ஸ்பிரஸ் தனது சுற்றுவட்ட இலக்கை அடைந்தது.
- 27 நவம்பர் 2007: பழைய பெருங்கடல்களின் ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. வெள்ளியில் மின்னல் இடம்பெறுவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது. பூமியை விட வெள்ளியில் அடிக்கடி இது நிகழ்கிறது. வெள்ளியின் தென் முனையில் பெரும் இரட்டை முனையச் சுழியோட்டம் உள்ளதைக் கண்டறிந்தது.[1][2]
- 20 மே 2008:வெள்ளியின் வளிமண்டலத்தில் ஐதரொக்சைல் (OH) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[3]
- 10 ஏப்ரல் 2010: வெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
- 7 அக்டோபர் 2011: வெள்ளியில் ஓசோன் படலம் இருப்பது கண்டுபிடிப்பு[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Various authors, Eric (November 2007). "European mission reports from Venus". Nature (450): 633–660. doi:10.1038/news.2007.297.
- ↑ "Venus offers Earth climate clues". BBC News. 28 November 2007. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7117303.stm. பார்த்த நாள்: 2007-11-29.
- ↑ "Venus Express Provides First Detection Of Hydroxyl In Atmosphere Of Venus". SpaceDaily.
- ↑ A layer of ozone detected in the nightside upper atmosphere of Venus, சயன்ஸ் டிரெக்ட்
- F.W. Taylor (2006). "The Planet Venus and the Venus Express Mission". Planetary and Space Science 54 (13-14): 1247–1496. doi:10.1016/j.pss.2006.06.013. Bibcode: 2006P&SS...54.1247T.
- "Venus Express launch campaign starts". ESA Portal. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2005.
- "Venus Express Launch Campaign Journal". ESA SciTech Website. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2005.
- "Venus Express 3D Model". ESA SciTech Website. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2005.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - "Venus Express Instruments". ESA Portal. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2005.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு
- ESA description of the Venus Express mission
- ESA Science & Technology - Venus Express page
- ESA Spacecraft Operations - Venus Express page
- Venus Express Program Page பரணிடப்பட்டது 2007-08-01 at the வந்தவழி இயந்திரம் by NASA's Solar System Exploration
- Venus Express: The first European mission to Venus
- Extrasolar-planets.com — Venus Express பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம்
- Orbit Insertion - Scheduled events to shape orbit concluding 6 May 2006
- Map of temperatures of South Hemisphere of Venus planet
- apr 2007-esa-1.html 04/03/07: Venus Express: Tracking Violent Winds and Turbulences பரணிடப்பட்டது 2011-09-30 at the வந்தவழி இயந்திரம் Site includes full coverage of the Venus Express Mission
- Amateurs Assist Venus Express Mission பரணிடப்பட்டது 2011-10-02 at the வந்தவழி இயந்திரம்
- Japan Aerospace Exploration Agency பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம்
- Planet-C mission to Venusபரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம்