ஜேனட் பானிக்

ஜேனட் பானிக் ( Janet Panic) (பிறப்பு ஜூன் 17, 1970) ஒரு மெடிஸ் பாடகர், கிதார் கலைஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். பியூ (1994-1995), 10 எஃப்.டி. ஹென்றி (1996-1997) இசைக்குழுவின் உறுப்பினராகவும் மற்றும் இவரது சொந்த பெயரில் இசையில் பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். ஜேனட் பானிக், 10 எஃப்.டி. ஹென்றி பாடல்களின் மூலமாக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இவரது பாடல்கள், "ஐ கான்ட் கெட் எனஃப்", "ஷோவ் இட்" மற்றும் "ஃபிஷ்" மற்றும் 2001 இன் தி கேர்ள் ஹூ பாஸ்ட் ஃபார் நார்மல் தொகுப்பில் உள்ள "பிளிங்க்" பாடல் ஆகியவை கனடிய கல்லூரி வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் தயாரிப்பாளராகவும் ஒளிபரப்பு பத்திரிகையாளராகவும் முதல் நாடுகளின் ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ஜேனட் ஒரு வேதியியல் பொறியியலாளரான டாக்டர் பாரி ப்ருடெனுக்கும், ஆரம்பகால குழந்தை பருவ கல்வியாளரான நார்மா ப்ருடெனுக்கும் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவரது பெயர் அலெக்சாண்டர் ப்ருடென் ஆகும்.

இவரது குடும்பம் கனடாவைச் சுற்றியுள்ள எண்ணெய் தொழிற்துறையைப் பின்தொடர்ந்தது. இவரது குழந்தை பருவத்தில் 13 முறை இடம் பெயர்ந்துள்ளார். ஜேனட் ஆல்பர்ட்டாவின் கல்கரியில் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், தனது 17வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். கியூபெக் மொண்ட்ரியாலில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் 1988 இல் சேர்ந்தார். இவர், இங்கு, கலை வரலாறு பிரிவை முதன்மைப் பாடமாகவும், இசை பிரிவை துணைப் பாடமாகவும் பயின்றார். பிறகு, இசையில் தன் ஆர்வத்தைக் கண்டறிந்த இவர், தனது முக்கிய பாடமாக இசையை மேற்கொண்டு, இசையில் ஒரு தொழிலைக் கருத்தில் கொள்ளத் தொடங்கினார்.

கான்கார்டியாவில் ஜேனட் சக இசைக்கலைஞரான டிராகன் பானிக்கைச் சந்தித்தார், பின்னர் இவர் திருமணம் செய்து விவாகரத்து செய்தார். இந்த ஜோடி 1992 இல் பிரித்தானிய கொலம்பியாவின் வான்கூவர் நகருக்கு குடிபெயர்ந்தது, அங்கு ஜேனட் பஞ்ச் லைன்ஸ் காமெடி கிளப்பில் வேலை செய்தார். அங்கு, கனடிய நகைச்சுவை நடிகர் ப்ரெண்ட் பட் ஐ சந்தித்தார். 2000 முதல் 2002 வரை, பட் மற்றும் ஜேமி ஹட்சின்சன் ஆகியோருடன் சேர்ந்து, ஜேனட் தி காமெடி ஸ்டோர் என்கிற குழுவை நடத்தி வந்தார். கனடிய சிட்காம், கார்னர் கேஸில் பணிபுரிய ப்ரெண்ட் பட் சென்றதால் குழு கலைக்கப்பட்டது.

ஊடக தயாரிப்பாளராக தொகு

2005 ஆம் ஆண்டில், திருமதி பானிக், ஏ.பி.டி.என். தொலைக்காட்சித் தொடரான பியோண்ட் வேர்ட்ஸின் குழுவில் சேர்ந்தார்,[1] இணை தயாரிப்பாளர், நேர்காணல் மற்றும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். மேலும் வாய்சஸ் ப்யூர் அண்ட் சிம்பிள் போன்ற தொடர்களில் இடம்பெற்றார்.[2]

2007 ஆம் ஆண்டில் முதல் நாடுகளின் இளைஞர் இசை இதழான மைடிவி என்ற தலைப்பில் ஏபிடிஎன் திட்டத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.

2009 ஆம் ஆண்டில் (தயாரிப்பாளர் மற்றும் கிதார் கலைஞர்) ஸ்டீவி சலாஸ் மற்றும் பிராண்டன் ஃப்ரைசென் ஆகியோருடன் ஆர்பர் லைவ் என்ற புதிய ஏபிடிஎன் தொடரை உருவாக்கினார், மேலும் இவர் அந்த நிகழ்ச்சியில் அதன் முதல் பருவத்தில் பணியாற்றினார், ஆனால் முதல் பருவத்திற்குப் பிறகு படைப்பு வேறுபாடுகளை மேற்கோள் காட்டி வெளியேறினார். பேனட், இதன் இரண்டாவது பருவத்தில் ஒரு சிறப்பு நடிகராக தோன்றினார்.[3]

2010 ஆம் ஆண்டில் ஜேனட் பானிக் கனடாவின் தேசிய வானொலி வலையமைப்பான அபோரிஜினல் - பழங்குடி குரல்கள் வானொலியில் சேர்ந்தார். அங்கு இவர் குழுவின் உறுப்பினராக அமர்ந்து, உதவி இசை அமைப்பாளராக செயல்பட்டார் மற்றும் கனடிய பழங்குடியின சமூகத்தின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்களை வாராந்திர ஒலிபரப்புக்காக நேர்காணல் செய்தார்.

2018 ஆம் ஆண்டில், இணைய வசதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பானிக் டொரொண்டோவில் உள்ள முதல் மக்கள் வானொலியின் சி.எஃப்.பி.டி-எஃப்.எம்மில் மாலை நேர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.[4]

குறிப்புகள் தொகு

  1. "Beyond Words | Gratis muziek, tourneedata, fotos, videos". Myspace.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-14.
  2. Beyond Words Season 6 - "Voices Pure and Simple" - 2006
  3. "Arbor Live - Season 2 episode 2 - 2010". Arborlive.tv. Archived from the original on 2011-12-23. பார்க்கப்பட்ட நாள் 2011-12-14.
  4. Grier, Chaka V. (2018-06-13). "APTN to launch new Indigenous radio station ELMNT.FM in Toronto" (in en-us). NOW Magazine இம் மூலத்தில் இருந்து 2018-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180717041703/https://nowtoronto.com/music/elmnt-fm-aptn-radio/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேனட்_பானிக்&oldid=3925122" இலிருந்து மீள்விக்கப்பட்டது