ஜேம்ஸ் பி. கார்மன்

ஜேம்ஸ் பேட்ரிக் கோர்மன் (James Patrick Gorman)[1]; பிறப்பு: 14 சூலை 1958) ஓர் ஆத்திரேலிய-அமெரிக்க நிதியாளர் ஆவார். இவர் மோர்கன் ஸ்டான்லியின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார் (2021 நிலவரப்படி).[2]அதற்கு முன்பு அதே நிறுவனத்தில் இணைத் தலைவராகவும், மூலோபாய திட்டமிடல்(Strategic Planning) துறையின் இணைத் தலைமை அதிகாரியாகவும் இருந்தார்.[3][4]

ஜேம்ஸ் கார்மன்
AO
பிறப்புஜேம்ஸ் பேட்ரிக் கார்மன்
14 சூலை 1958 (1958-07-14) (அகவை 66)
மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
கல்விமெல்பேர்ண் பல்கலைக்கழகம் (இளங்கலை, இளங்கலைச் சட்டம்)
கொலம்பியா பல்கலைக்கழகம் (முதுகலை வணிக மேலாண்மை)
பட்டம்மோர்கன் ஸ்டான்லியின் தலைவர் மற்றும் மற்றும் முதன்மை செயல் அலுவலர்
வாழ்க்கைத்
துணை
பென்னி டெட்மன்
பிள்ளைகள்2

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஜேம்ஸ் பி.கோர்மன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ணில் பிறந்தார். இவரின் உடன் பிறப்புகள் 9 பேர் ஆவர். இவர் மெல்பேர்ணில் உள்ள சேவியர் கல்லூரியில் கல்வி கற்றார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் இளங்கலைச் சட்டம் பட்டங்களையும் பெற்றார். அங்கு இவர் குடியிருப்பு உறுப்பினராகவும், நியூமன் கல்லூரியின் தலைவராக இருந்தார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கோர்மன் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடிமகன் ஆவார். இவர் மன்ஹாட்டனில் வசிக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோர்மன் 2019 இல் $ 27 மில்லியன் சம்பாதித்தார். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "James Patrick Gorman: Executive Profile & Biography". Bloomberg.
  2. "Board of Directors". Morgan Stanley (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
  3. [1] பரணிடப்பட்டது 2014-09-14 at the வந்தவழி இயந்திரம், November 29, 2007; accessed December 1, 2007. "Press Release: Walid Chammah and James Gorman Named Co-Presidents of Morgan Stanley".
  4. "The David Rubenstein Show: James Gorman". Bloomberg. 2017-04-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.
  5. Parker, Garrett (2018-09-03). "10 Things You Didn't Know About Morgan Stanley CEO James Gorman". Money Inc (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
  6. "Morgan Stanley CEO Gorman's total 2019 pay falls 7% to $27 million". 17 January 2020. https://www.reuters.com/article/morgan-stanley-compensation/morgan-stanley-ceo-gormans-total-2019-pay-falls-7-to-27-million-idUSFWN29M0J6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பி._கார்மன்&oldid=3624043" இலிருந்து மீள்விக்கப்பட்டது