ஜொகூர் சுல்தான் இரண்டாம் முசபர் சா

ஜொகூர் சுல்தானகத்தின் இரண்டாவது அரசர்

ஜொகூர் சுல்தான் இரண்டாம் முசபர் சா அல்லது சுல்தான் முசபர் சா II (மலாய் மொழி: Sultan Muzaffar Shah II ibni Almarhum Alauddin Riayat Shah II; ஆங்கிலம்: Sultan Muzaffar Shah II); என்பவர் ஜொகூர் சுல்தானகத்தின் இரண்டாவது அரசர். அலாவுதீன் ரியாட் ஷா II இரண்டாவது மகனார்.[1]

ஜொகூர் சுல்தான் இரண்டாம் முசபர் சா
Sultan Muzaffar Shah II
ஜொகூர் சுல்தான்
ஆட்சிஜொகூர் சுல்தானகம்:
1564–1570
முடிசூட்டு விழா1564
முன்னிருந்தவர்இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா
பின்வந்தவர்ஜொகூர் சுல்தான் முதலாம் அப்துல் சாலில் சா
துணைவர்துன் மாஸ் ஜீவா
Tun Mas Jiwa
துன் திராங்
Tun Trang
தந்தைஇரண்டாம் அலாவுதீன் ரியாட் சா
பிறப்பு1546
இறப்பு1570 (வயது 24)
சமயம்இசுலாம்

இவர் பதவிக்கு வருவதற்கு முன்னர் ராஜா மூடா பெர்தானா (Raja Muda Perdana) என்று அழைக்கப்பட்டார். ஜொகூர் சுல்தானகத்தை 1564-ஆம் ஆண்டில் இருந்து 1570-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர்.

இவரின் தந்தையார் சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா II இறந்தவுடன் 1564-ஆம் ஆண்டில் ஜொகூர் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். ஜொகூர் மீதான அச்சே படையெடுப்பிற்குப் பிறகு இவரின் தந்தையார் பிடிபட்டார்.

வரலாறு

தொகு

1564-ஆம் ஆண்டில், அச்சேயின் சுல்தான், அலாவுதீன் அல்-காகர் (Alauddin al-Qahar), அருவின் மீது படையெடுத்து ஜொகூர் சுல்தானகத்தின் ஆளுமையைத் தோற்கடித்தார். அத்துடன் அச்சே படையினர் அருவில் இருந்து ஜொகூர் ஆட்சியாளர்களை வெளியேற்றினர்.

அச்சே சுல்தான், பின்னர் அருவில் இருந்து ஜொகூர் லாமா மீது தாக்குதலைத் தொடங்கினார். அங்கு இருந்த காரா கோட்டையும் ஜொகூர் லாமா நகரமும் அழிக்கப்பட்டன. அலாவுதீன் ரியாத் ஷா கைப்பற்றப்பட்டு அச்சேவுக்குக் கொண்டு வரப்பட்டார்.

இளம் வயதில் இறப்பு

தொகு

அலாவுதீன் ரியாத் ஷா பின்னர் அங்கு கொல்லப் பட்டார். அவரின் மரணத்திற்குப் பின்னர் மர்கும் சாயிட் அச்சே (Marhum Syahid di Acheh) எனும் சிறப்பு பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அலாவுதீன் ரியாத் ஷாவிற்குப் பிறகு அவரின் மகன் இரண்டாம் முசாபர் ஷா (Muzaffar Shah II) ஆட்சிக்கு வந்தார்.

சுல்தான் முசபர் ஷா II 1565-இல் தன்னுடைய தலைநகரை ஜொகூர் லாமாவில் இருந்து செலுயுட் (Seluyut) எனும் இடத்திற்கு மாற்றினார். அச்சே சுல்தானகத்தின் கட்டுப்பாட்டை அவர் விரும்பவில்லை.

சுல்தான் அப்துல் ஜாலில் ஷா I

தொகு

அவர் 1570-ஆம் ஆண்டில் விசம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருடைய மகன் சுல்தான் அப்துல் ஜாலில் ஷா I (Sultan Abdul Jalil Shah I) ஜொகூர் சுல்தானகத்தின் பொறுப்பை ஏற்றார்.

சுல்தான் முசபர் ஷா II-க்கு மூன்று மனைவிகள். அவரின் முதல் மனைவி துன் மாஸ் ஜீவா என்பவர், ஜொகூர் சுல்தானகத்தின் தெமாங்கோங் துன் அசன் என்பவரின் மகளாவார்.

மனைவி துன் திராங்

தொகு

அவரின் இரண்டாவது மனைவி துன் திராங். இவர் பகாங்கைச் சேர்ந்த ஸ்ரீ நர திராஜா துன் அலி (Tun Ali, Seri Nara Diraja of Pahang) என்பவருக்கும்; துன் பாத்திமா என்பவருக்கும் பிறந்த மகள்.

துன் திராங் மூலமாக சுல்தான் முசபர் ஷா II-க்கு இரு மகன்கள். மூத்தவர் அப்துல் ஜலீல் I (Abdul Jalil I). இளையவர் ராஜா ராடின் (Raja Radin). அவரின் மூன்றாவது மனைவி சுல்தான் அலி ஜல்லா அப்துல் ஜலீல் ஷா II (Sultan Ali Jalla Abdul Jalil Shah I) என்பவரின் முன்னாள் மனைவி; மற்றும் ஆச்சே சுல்தான் உசைன் அலி ரியாத் ஷாவின் (Sultan Husain Ali Riayat Shah of Aceh) மகளும் ஆவார்.

ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியாளர்கள்

தொகு
ஜொகூர் சுல்தான்கள் ஆட்சி காலம்
மலாக்கா ஜொகூர் வம்சாவழி
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா II
1528–1564
சுல்தான் முசபர் II
1564–1570
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா I
1570–1571
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா II
1571–1597
சுல்தான் அகமட் ரியாட் ஷா III
1597–1615
சுல்தான் அப்துல்லா மாயாட் ஷா
1615–1623
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா III
1623–1667
சுல்தான் இபுராகிம் ஷா
1677–1685
சுல்தான் மகமுட் II
1685–1699
பெண்டகாரா வம்சாவழி
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா IV
1685–1699
மலாக்கா ஜொகூர் வம்சாவழி
சுல்தான் அப்துல் ஜாலில் ரகமட் ஷா IV
1718–1722
பெண்டகாரா வம்சாவழி
சுல்தான் சுலைமான் பட்ருல் ஆலாம் ஷா
1722–1760
சுல்தான் அப்துல் ஜாலில் முவாசாம் ஷா
1760–1761
சுல்தான் அகமட் ரியாட் ஷா
1761–1761
சுல்தான் மகமுட் ஷா III
1761–1812
சுல்தான் அப்துல் ரகுமான் முவாசாம் ஷா
1812–1819
சுல்தான் உசேன் ஷா
1819–1835
சுல்தான் அலி இசுகந்தர் ஷா
1835–1855
தெமாங்கோங் வம்சாவழி
ராஜா தெமாங்கோங் இபுராகிம்
1855–1862
சுல்தான் அபு பாக்கார்
1862–1895
சுல்தான் இபுராகிம்
1895–1959
சுல்தான் இசுமாயில்
1859–1981
சுல்தான் இசுகந்தர்
1981–2010
சுல்தான் இபுராகிம் இசுமாயில்
2010–இன்று வரையில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Paduka Sri Sultan Muzaffar Shah II ibni al-Marhum Sultan Ala ud-din Ri'ayat Shah, Khalifat ul-Mukminin Zilu'llah fil'Alam, Sultan of Johor Dar-ul-Izam. b. 1546, elder son of Paduka Sri Sultan 'Ala ud-din Ri'ayat Shah II Zilu'llah fil'Alam Khalifat ul-Mukminin ibni al-Marhum Sultan Mahmud Shah, Sultan of Johor Dar-ul-Izam, by his wife, Raja Kesuma Devi, educ. privately. Styled Raja Muda Perdana before his accession. Succeeded on the death of his father, 1564. Established his capital at Bukit Seluyut. m." www.royalark.net. பார்க்கப்பட்ட நாள் 13 July 2022.

வெளி இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  • R.O. Winstedt (1992). A History of Johore. The Malaysian Branch of the Royal Asiatic Society (MBRAS). ISBN 9839961462.
  • Zakiah Hanum (2004). Asal Usul Negeri-Negeri Malaysia. Times Editions-Marshall Cavendish. ISBN 9812326081.
  • Tun Ahmad Sarji bin Abdul Hamid (2011). The Encyclopedia of Malaysia : Volume 16, The Rulers of Malaysia. Archipelago Press. ISBN 9789813018549.
ஜொகூர் சுல்தான் இரண்டாம் முசபர் சா
மலாக்கா - ஜொகூர் வம்சாவழி
பிறப்பு: 1570
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் ஜொகூர் சுல்தானகம்
1546
பின்னர்

மேலும் காண்க

தொகு