ஜொகூர் சுல்தான்

ஜொகூர் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Johor; மலாய்: Sultan Johor; சீனம்: 柔佛苏丹; ஜாவி: سلطان جوهر‎‎) என்பவர் ஜொகூர் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், ஜொகூர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் சுல்தான் ஆவார்.

ஜொகூர் சுல்தான்
Sultan of Johor
Sultan Johor Darul Takzim
ஆட்சிக்காலம்ஜொகூர் சுல்தான் பதவியில்: (2010 – இன்று வரையில்)
முடிசூட்டுதல்23 மார்ச் 2015
முன்னையவர்ஜொகூர் சுல்தான் இசுகந்தர்
பின்னையவர்ஜொகூர் சுல்தான் இசுமாயில் இட்ரிஸ்
பிறப்பு22 நவம்பர்1958
மரபுதெமாங்கோங்
தந்தைஜொகூர் சுல்தான் இசுகந்தர்
தாய்யோசபீன் ரூபி திரெவொரோ

முன்னர் காலத்தில், ஜொகூர் சுல்தான் தன் மாநிலத்தின் மீது முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருந்தார்; மற்றும் ஒரு பெண்டகாராவால் அறிவுரை வழங்கப்பட்டார். தற்போது, பெண்டகாராவின் பதவி, மந்திரி பெசார் (Menteri Besar) எனும் மாநில முதல்வரால்; ஜொகூர் மாநில முடியாட்சி அரசியலமைப்பின் வழி ஏற்கப்பட்டுள்ளது. ஜொகூர் சுல்தானுக்கு ஜொகூர் அரச இராணுவப் படை எனும் சொந்த இராணுவப் படையும் (Royal Johor Military Force) உள்ளது.[1]

வரலாறு

தொகு

ஜொகூரின் முதல் சுல்தான் ஜொகூர் சுல்தான் இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா; இவர் மலாக்காவின் கடைசி சுல்தானான சுல்தான் மகமுட் சாவின் மகன் ஆவார். ஜொகூரில் இருந்த மலாக்கா சுல்தானகத்தின் வழித்தோன்றல்களின் ஆட்சி, 1699-இல் ஜொகூர் சுல்தான் இரண்டாம் மகமுத் சாவின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது. 1699-இல் அரியணை ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் சாலீல் சா என்பவரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து ஜொகூரில் புதிய ஜொகூர் பெண்டகாரா வம்சாவளியின் ஆட்சி தொடங்கியது. [2]

ஜொகூர் சுல்தான்களின் வம்சாவளிகளிகளைச் சார்ந்த ஜொகூர் சுல்தானகம் என்பது மலாய் மாநிலங்களில் உள்ள பழைமையான அரச வம்சாவளிகளில் ஒன்றாகும்.

சுல்தான் பதவி

தொகு
 
ஜொகூர் அரச குடும்பம்; 2015-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம்

தற்போதைய ஜொகூர் சுல்தான் பதவி, ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் என்பவரால் வழி நடத்தப்படுகிறது, 23 சனவரி 2010-இல் ஜொகூர் மாநிலத்தின் 23-ஆவது சுல்தானாக அறிவிக்கப்பட்டு; 23 மார்ச் 2015 அன்று ஜொகூர் பாரு இசுதானா பெசாரில் முடிசூட்டப்பட்டார்.

ஜொகூர் சுல்தான்கள்

தொகு
ஜொகூர் சுல்தான் ஆட்சி
மலாக்கா-ஜொகூர் வம்சாவளி
ஜொகூர் சுல்தான் இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா 1528–1564
ஜொகூர் சுல்தான் இரண்டாம் முசபர் சா 1564–1570
ஜொகூர் சுல்தான் முதலாம் அப்துல் சாலில் 1570–1571
ஜொகூர் சுல்தான் இரண்டாம் அலி சாலியா அப்துல் சாலில் சா 1571–1597
ஜொகூர் சுல்தான் மூன்றாம் அலாவுதீன் ரியாட் சா 1597–1615
ஜொகூர் சுல்தான் அப்துல்லா மாயாட் சா 1615–1623
ஜொகூர் சுல்தான் மூன்றாம் சாலில் சா 1623–1677
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் சா 1677–1685
ஜொகூர் சுல்தான் இரண்டாம் மகமுட் சா 1685–1699
பெண்டகாரா வம்சாவளி
ஜொகூர் நான்காம் அப்துல் சாலில் சா (பெண்டகாரா அப்துல் சாலில்) 1699–1720
மலாக்கா-ஜொகூர் வம்சாவளி
ஜொகூர் முதலாம் அப்துல் சாலில் ரகமட் சா (ராஜா கெச்சில்) 1718–1722
பெண்டகாரா வம்சாவளி
ஜொகூர் சுல்தான் சுலைமான பட்ருல் அலாம் சா 1722–1760
ஜொகூர் சுல்தான் அப்துல் சாலில் முவாசாம் சா 1760–1761
ஜொகூர் சுல்தான் அகமட் ரியாட் சா 1761–1770
ஜொகூர் சுல்தான் மூன்றாம் மகமுட் சா 1770–1811
ஜொகூர் சுல்தான் முதலாம் அப்துல் ரகுமான முவாசாம் சா 1811–1819
ஜொகூர் சுல்தான் அகமட் உசேன் முவாசாம் சா 1819–1835
ஜொகூர் சுல்தான் அலி இசுகந்தர் முவாசாம் சா 1835–1855
தெமாங்கோங் வம்சாவளி
(நவீன ஜொகூர் சுல்தான்)
ஜொகூர் சுல்தான் அபு பக்கர் 1886–1895
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் 1895–1959
ஜொகூர் சுல்தான் இசுமாயில் 1959–1981
ஜொகூர் சுல்தான் இசுகந்தர் 1981–2010
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் 2010–தற்போது

மேற்கோள்கள்

தொகு
  1. Wong Chun Wai (27 September 2017). "Dressing down for launderette". The Star. பார்க்கப்பட்ட நாள் 28 June 2018.
  2. Nadarajah, Johore and the Origins of British Control, pg 44

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_சுல்தான்&oldid=3953568" இலிருந்து மீள்விக்கப்பட்டது