ஜொகூர் சுல்தானா சரித் சோபியா
ஜொகூர் சுல்தானா சரித் சோபியா (ஆங்கிலம்: Raja Zarith Sofiah binti Sultan Idris Shah; மலாய்: Raja Zarith Sofiah binti Almarhum Sultan Idris Shah) என்பவர் 31 சனவரி 2024 தொடங்கி மலேசியாவின் 17-ஆவது மலேசிய அரசி; மலேசிய அரசர், ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் அவர்களின் மனைவியும் ஆவார்.
ஜொகூர் சுல்தானா சரித் சோபியா Raja Zarith Sofiah Raja Zarith Sofiah Idris Shah | |||||
---|---|---|---|---|---|
ஜொகூர் அரசி | |||||
சுல்தானா சரித் சோபியாவின் எண்ணெய் ஓவியப்படம்; 2019-ஆம் ஆண்டில் இராஜசேகரன் பரமேசுவரன் வரைந்தது. | |||||
17-ஆவது மலேசிய அரசி | |||||
ஆட்சிக்காலம் | 31 சனவரி 2024 – தற்போது | ||||
முன்னையவர் | பகாங் சுல்தானா துங்கு அசிசா | ||||
ஜொகூர் பட்டத்து இளவரசரின் மனைவி | |||||
ஆட்சிக்காலம் | 22 செப்டம்பர் 1982 - 23 சனவரி 2010 | ||||
பிறப்பு | 14 ஆகத்து 1959 பத்து காஜா மருத்துவமனை, பேராக், மலாயா | ||||
துணைவர் | ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் (தி. 1982) | ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
மரபு | சியாக்-பேராக் (பிறப்பு வழி) ஜொகூர் தெமாங்கோங் (திருமண வழி) | ||||
தந்தை | பேராக் சுல்தான் இட்ரிஸ் சா | ||||
தாய் | இராஜா பெரம்புவான் மர்வீன் | ||||
மதம் | இசுலாம் |
சுல்தானா சரித் சோபியா பேராக் அரச குடும்பத்தில் பிறந்தவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள சோமர்வில் கல்லூரியில் படிக்கும் போது, ஜொகூர் அரியணையின் வாரிசான ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தரை மணந்தார். இப்போது ஆறு குழந்தைகளுக்கு தாயான இவர், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணிகளில் பங்கேற்கிறார்; மேலும் மலேசியாவில் பிரபலமான இஸ்டார் நாளிதழில் கட்டுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.[1][2]
பொது
தொகுசுல்தானா சரித் சோபியா, பேராக், பத்து காஜா மருத்துவமனையில் 1959 ஆகஸ்டு 14-ஆம் தேதி பேராக் சுல்தான் இட்ரிஸ் சா மற்றும் இராஜா பெரம்புவான் மர்வீன் இராஜா அரிப் சா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாகவும்; இரண்டாவது மகளாகவும் பிறந்தார்.[1]
அவர் தன் தொடக்கக் கல்வியை கோலாகங்சார் டத்தின் கதீஜா தொடக்கப் பள்ளியிலும்; உயர்நிலைப் படிப்பை கோலாகங்சார் ராஜா பெரெம்புவான் கால்சோம் பள்ளியிலும் பயின்றார். இடைநிலைக் கல்வியை முடிக்க இங்கிலாந்து செல்டென்காம் பெண்கள் கல்லூரிக்குச் சென்றார். பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள சோமர்வில் கல்லூரியில் பயின்றார். மற்றும் 1983-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சீன மொழியில் இளங்கலைப் பட்டத்தையும்; 1986-இல் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.[2][3]
பொது வழ்க்கை
தொகுசுல்தானா சரித் சோபியா, ஜொகூர் மாநில அளவிலும்; தேசிய அளவிலும் பல்வேறு சமூக பொது இயக்கங்களில் சேவை செய்து வருகிறார்.
- மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - வேந்தர்[4]
- மலேசிய செவ்விளம்பிறை சங்கம் - அரச ஆலோசகர்
- இராஜா சரித் சோபியா ஜொகூர் மாநில அறக்கட்டளை - தலைவர்
- ஜொகூர் துங்கு இலக்சமணா புற்றுநோய் அறக்கட்டளை - தலைவர்
- மலேசிய தேசிய பல்கலைக்கழகம் - மொழி ஆய்வுகள் மற்றும் மொழியியல் பள்ளி ஆய்வாளர்
- ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (மலேசிய கிளை) - அரச புரவலர்
- ஜொகூர் வலிப்பு நிலைபேறு குழந்தைகள் சங்கம் - அரச புரவலர்
சுல்தானா சரித் சோபியா, மலேசியாவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் தீவிர ஆதரவாளராக உள்ளார்.[5] மலாய் மொழி மற்றும் ஆங்கிலம் தவிர, இவர் மாண்டரின் மொழி, இத்தாலியம், பிரெஞ்சு மொழி போன்ற மொழிகளில் நன்கு பேசக் கூடியவர்.
அவர் குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை உட்பட பல குழந்தைகள் புத்தகங்களை எழுதியுள்ளார். மலேசியாவில் இஸ்டார் நாளிதழில் "மனித விசயங்கள்" எனும் பகுதியில் ஒவ்வொரு வாரமும் எழுதி வருகிறார். முன்பு நியூ இஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிலும் எழுதினார்.
சரித் சோபியா அறக்கட்டளை
தொகுசுல்தானா சரித் சோபியா மத நடவடிக்கைகளிலும் தீவிரமாக உள்ளார். ஜொகூர் சரித் சோபியா அறக்கட்டளையின் மூலமாக வசதி குறைந்த மாணவர்களுக்கும்; தனித்து வாழும் தாய்மார்களுக்கும் மாநில அளவில் நிதியுதவிகளை, அவரின் கணவரின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறார். இவரின் கடந்த கால சமூகப் பணிகளினால், மாநில அளவிலும் நாடளவிலும் சமூக ஆர்வலராக நன்கு அறியப்படுகிறார். மலேசியாவில் பல்வேறு இன மக்ககளிடம் நன்கு அறியப்பட்ட மலேசியப் பெண்மணியாகவும் பெருமை பெறுகிறார்.
நூல்கள்
தொகுஜொகூர் சுல்தானா சரித் சோபியா எழுதியுள்ள நூல்:
- பொதுவான அடிப்படையில்: கட்டுரைகளின் தொகுப்பு (2013) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789674150952
விருதுகள்
தொகுஜொகூர் விருதுகள்
தொகு- - Royal Family Order of Johor (DK I)
- - Royal Family Order of Johor (DK II)
- - Order of the Crown of Johor (SPMJ) – Datin Paduka
- - Order of Sultan Ibrahim of Johor (SMIJ) – Datin Paduka (2017)[6][7][8]
- - (PSI) (2015)
மலேசிய விருதுகள்
தொகுகௌரவ முனைவர் பட்டம்
தொகு- ஐக்கிய இராச்சியம் :
- நாட்டிங்காம் பல்கலைக்கழகம் (இங்கிலாந்து) - (2017)[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Born on Aug 14, 1959, at Batu Gajah Hospital in Perak, Her Majesty is the second daughter and the third child of the late Sultan of Perak, Paduka Seri Sultan Idris Shah II, and the late Raja Perempuan Perak, Muzwin Almarhum Raja Dato' Sri Ariff Shah". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2024.
- ↑ 2.0 2.1 "She has authored numerous children's books and writes a column for local newspaper The Star, often promoting multiculturalism and understanding between religious and ethnic communities in Malaysia". www.oumc.org.uk. பார்க்கப்பட்ட நாள் 6 March 2024.
- ↑ "In 1972, she continued her studies at Cheltenham Ladies' College in England before pursuing her Bachelor's degree at Somerville College, University of Oxford, in 1979. She obtained her Bachelor of Arts in Chinese Studies in 1983". New Straits Times 2024. பார்க்கப்பட்ட நாள் 6 March 2024.
- ↑ Raja Zarith Idris (15 March 2011). "A dire need to listen". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 11 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111211034144/http://thestar.com.my/columnists/story.asp?file=%2F2011%2F5%2F15%2Fcolumnists%2Fmindmatters%2F8683189&sec=Mind%20Matters.
- ↑ "Using English Doesn't Make One Less Patriotic, Says Raja Zarith". Bernama. 8 January 2008. http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=306675.
- ↑ "Tunku Ismail heads 83 award recipients". New Straits Times. 30 March 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "TMJ ketuai senarai 83 penerima anugerah Sultan Johor" (in Malay). Berita Harian. 30 March 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "TMJ dahului 83 penerima pingat darjah kebesaran Johor" (in Malay). Harian Metro. 31 March 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ List of consorts of Malay rulers (as of February 2013) with details of orders
- ↑ Articles evoking reception of Dk Perak by Zarith Sofia : in English பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Nottingham
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Raja Zarith Sofiah தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- இன்ஸ்ட்டாகிராமில் ஜொகூர் சுல்தானா சரித் சோபியா
- "Mind Matters" The Star (Malaysia)