ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு

ஜோசப் எட்வர்டு ஸ்ட்ரிக்லேண்டு (Joseph Edward Strickland) (பிறப்பு:31 அக்டோபர் 1958) ஐக்கிய அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் கத்தோலிக்க திருச்சபையின் டெய்லர் மறை மாவட்டத்தின் ஆயராக 28 நவம்பர் 2012 முதல் பணியாற்றியவர். இவர் திருத்தந்தை பிரான்சிசால் 11 நவம்பர் 2023 அன்று ஆயர்ப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேதகு ஆயர்
ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு
டெய்லர் மறைமாவட்ட முன்னாள் ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாவட்டம்டெய்லர் மறைமாவட்டம், டெக்சஸ் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
நியமனம்29 செப்டம்பர் 2012
ஆட்சி துவக்கம்28 நவம்பர் 2012
ஆட்சி முடிவு11 நவம்பர் 2023
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1 சூன் 1985
தாமஸ் அம்புரோஸ்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு28 நவம்பர் 2012
டேனியல் டிநார்டோ-ஆல்
பிற தகவல்கள்
பிறப்பு31 அக்டோபர் 1958
பிரிடெரிக்ஸ்பர்க், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
கல்விபுனித திருத்துவ குருத்துவக் கல்லூரி
டல்லஸ் பல்கலைக்கழகம்
அமெரிக்க கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்

டெய்லர் மறைமாவட்ட ஆயர் பதவியில்

தொகு

ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு அமெரிக்காவின் டெக்சஸ் மாநில டெய்லர் மறைமாவட்ட ஆயராக 29 செப்டம்பர் 2012 அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் நியமிக்கப்பட்டார்.[1]

பதவி நீக்கம்

தொகு

சமீப காலமாக கத்தோலிக்க கிறித்துவ சபையில் தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு, கருக்கலைப்பு, தன்பாலின திருமணம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஞானஸ்நானம் செய்விப்பது போன்றவை குறித்து பல சட்ட திட்டங்களை மாற்ற போப் பிரான்சிஸ் முடிவெடுத்தார்.[சான்று தேவை] வத்திக்கானின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ஆயர் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார். ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கிடையே மட்டுமே ஏற்பட வேண்டிய திருமணத்தை சீர்குலைக்கும் வகையிலும், திருவருட்சாதனங்களை சிதைக்கும் விதமாகவும், மாற்ற முடியாதவற்றை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஆயர் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து வத்திக்கான் விசாரணைகளை நடத்தி, அவரை பதவி விலக வலியுறுத்தியது. ஆனால், இதற்கு உடன்பட ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டை பதவியிலிருந்து 11 நவம்பர் 2023 அன்று நீக்கினார். அவரது நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, ஆற்றி வந்த பணிகளிலிருந்து முழுவதுமாக ஜோசப் விடுவிக்கப்பட்டுள்ளார் என பத்திதான் அறிக்கை வெளியிட்டுள்ளது. [2][3].[4][5][6]

ஆதார நூல்

தொகு
  • Strickland, Joseph (2020). Light and Leaven: The Challenge of the Laity in the Twenty-First Century. Catholic Answers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-68357-183-4.

மேற்கோள்கள்

தொகு
  1. "RINUNCE E NOMINE, 29.09.2012". Holy See Press Office. Archived from the original on 21 April 2013. பார்க்கப்பட்ட நாள் 5 October 2012.
  2. Pope Francis fires Texan bishop after criticism of reforms
  3. Vatican dismisses conservative Texas bishop who criticized Pope Francis
  4. Mares, Courtney (November 11, 2023). "Pope Francis Relieves Bishop Strickland of His Duties in Diocese of Tyler". National Catholic Register (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் November 12, 2023.
  5. "Pope removes Texas bishop who's been a frequent Francis critic". Crux (in ஆங்கிலம்). November 11, 2023. பார்க்கப்பட்ட நாள் November 11, 2023.
  6. Pullella, Philip (November 11, 2023). "In very rare move, Pope dismisses conservative US bishop Strickland". Reuters.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஸ்ட்ரிக்லேண்டு&oldid=4171022" இலிருந்து மீள்விக்கப்பட்டது