ஜோதின் பட்டாச்சார்யா

சோதின் பட்டாச்சார்யா (Jotin Bhattacharya) இந்துத்தானி இசையில் சரோத் கலைஞராவார். இவர், அலாவுதீன் கானின் சீடராக இருந்தார். [1]

சோதின் பட்டாச்சார்யா
இயற்பெயர்சோதின் பட்டாச்சார்யா
பிற பெயர்கள்சோதின் பட்டாச்சார்யா
பிறப்பு(1926-01-01)1 சனவரி 1926
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
பிறப்பிடம் இந்தியா
இறப்பு22 பெப்ரவரி 2016(2016-02-22) (அகவை 90)
வாரணாசி
இசை வடிவங்கள்இந்துத்தானி இசை
தொழில்(கள்)சரோத் கலைஞர்
இசைக்கருவி(கள்)சரோத்

சுயசரிதை

தொகு

பட்டாச்சார்யா 1926 இல் வாரணாசியில் ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். சி. எம். ஆங்கிலோ பெங்காலிக் கல்லூரியில் பயின்ற இவர், அலாவுதீன் கானிடமிருந்து தனது எட்டு ஆண்டு இசை பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டங்களைப் பெற்றார். அலாவுதீன் கானின் கீழ் பயிற்சியின்போது, அவருக்குச் செயலாளராக பணியாற்றினார். மேலும் அவரது அனைத்து கடிதங்களையும் கையாண்டார்.

தில்லியின், இலட்சுமி நகர், பூர்வ சமசுகிருத கேந்திரத்தில் உள்ள பாபா அலாவுதீன் கான் இசை அறக்கட்டளையில் பட்டாச்சார்யா நிகழ்ச்சியினை நிகழ்த்தினார்.

இசைத் தொகுப்பு

தொகு

1974ஆம் ஆண்டில், பட்டாச்சார்யாவின் சரோத் என்ற முதல் இசைத் தொகுப்பை எல்பி பதிவு வடிவத்தில் எச்.எம்.வி நிறுவனம் வெளியிட்டது. [2]

புத்தகங்கள்

தொகு

பட்டாச்சார்யா மூன்று புத்தகங்களை எழுதினார் (அனைத்தும் அலாவுதீன் கான் பற்றியது). [3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதின்_பட்டாச்சார்யா&oldid=3601828" இலிருந்து மீள்விக்கப்பட்டது