ஜோதிரீசுவர் தாக்கூர்

சமசுகிருதம் மற்றும் மைதிலி மொழிப் புலவர்

ஜோதிரீசுவர் தாக்கூர் (Jyotirishwar Thakur) (1260-1340) [1] ஓர் மைதிலிக் கவிஞரும், நாடக ஆசிரியரும், இசைக்கலைஞரும் ஆவார். [2] ஆரம்பகால மைதிலி மற்றும் சமசுகிருத எழுத்தாளரான இவர், வர்ண ரத்னாகரம் என்ற தனது இலக்கியப் படைப்புக்காக அறியப்பட்டவர். [3] [4]

வாழ்க்கை தொகு

ஜோதிரீசுவர், ராமேசுவரரின் மகனும், தீரேசுவரரின் பேரனும் ஆவார். [5] இவர் மிதிலையின் கர்னாட் வம்சத்தின் மன்னர் அரிசிம்மதேவனின் (ஆட்சி; 1300-1324) அரசவைக் கவிஞராக இருந்தார். [6]

முக்கிய படைப்புகள் தொகு

மைதிலி மொழியில் இவரது மிக முக்கியமான படைப்பான வர்ண ரத்னாகரம் (1324) என்பது உரைநடையில் ஒரு கலைக்களஞ்சியப் படைப்பாகும். இந்தப் பணி பல்வேறு பாடங்கள் மற்றும் சூழ்நிலைகளின் விளக்கங்களைக் கொண்டுள்ளது. இது இடைக்கால இந்தியாவின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.[7] உரை நகர வர்ணம், நாய்க வர்ணம், அஸ்தான வர்ணம், ரிட்டு வர்ணம், பிரயாண வர்ணம், பதாதி வர்ணம் மற்றும் சம்சான வர்ணம் என ஏழு அலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 84 சித்தர்களின் முழுமையற்ற பட்டியல் 76 பெயர்களைக் கொண்ட உரையில் காணப்படுகிறது. இந்த உரையின் கையெழுத்துப் பிரதி, கொல்கத்தாவில் உள்ள ஆசியச் சமூகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.[8]

இவரது முக்கிய சமசுகிருத நாடகமான தூர்த்த சாமாகமம் (1320) என்ற நகைச்சுவை நாடகம், பிராமணரான அச்சாதிமிசுரரின் அழகான வேசியான அனங்கசேனை மீது மதவாதியான விசுவநகரருக்கும் அவரது சீடரான துராசருக்கும் இடையிலான போட்டியை நாடகம் விவரிக்கிறது. இந்த நாடகத்தில் உயர்குடி கதாபாத்திரங்கள் சமசுகிருதத்திலும், தாழ்ந்தகுடி கதாபாத்திரங்கள் பிராகிருதத்திலும், பாடல்கள் மைதிலியிலும் பேசுகின்றன. [9]

இவரது மற்றொரு சமசுகிருதப் படைப்பான பஞ்சசாயகா (ஐந்து அம்புகள்) ஐந்து பகுதிகளாக காம சாத்திரத்தின் மற்ற நிலையான படைப்புகளில் கையாளப்பட்ட அதே தலைப்புகளைக் கையாள்கிறது. [10]

மேற்கோள்கள் தொகு

  1. Ayyappappanikkar. Medieval Indian Literature: Surveys and selections. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-0365-5. https://books.google.com/books?id=KYLpvaKJIMEC&dq=Jyotirishwar+Thakur+poet&pg=PA281. 
  2. "Varna-Ratnakara of Jyotirisvara Kavisekharacarya | Exotic India Art". பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
  3. Chakravorty. Behar Herald, [1875-1975: Centenary Number]. Bengalee Association, Bihar. https://books.google.com/books?id=n_IdAAAAMAAJ&q=Jyotirishwar+Thakur+poet. 
  4. Chib. Bihar. Light & Life Publishers. https://books.google.com/books?id=XW9uAAAAMAAJ&q=Jyotirishwar+Thakur+poet. 
  5. Choudhary, Radhakrishna (1976) (in en). A Survey of Maithili Literature. Ram Vilas Sahu. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80538-36-5. https://books.google.com/books?id=C0f898HDLAYC&dq=Jyotirishwar+Thakur+father&pg=PA34. 
  6. Rakesh, Ram Dayal (2005) (in en). Janakpur: The Sacred Jewel of Nepal. Safari Nepal. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-99933-59-96-8. https://books.google.com/books?id=O5NuAAAAMAAJ&q=Jyotirishwar+Thakur+court+poet. 
  7. R. C. Majumdar; Pusalker, A. D.; Majumdar, A. K., தொகுப்பாசிரியர்கள் (1960). The History and Culture of the Indian People. VI: The Delhi Sultanate. Bombay: Bharatiya Vidya Bhavan. பக். 515. ""The Varṇa Ratnākara of Jyotirīśvara Ṭhākura ... was written about 1325. This is a work of set descriptions of various subjects and situations, to supply ready-made cliché passages to story-tellers ... [it] is important, not only because it gives us specimens of pure Maithilī prose ... but also because it is a store-house of information, conveyed through words, about the life and culture of early Medieval India in all their aspects."" 
  8. Shastri, Haraprasad Ed (1916). Hajar Bachorer Purano Bangla Bhashay Bouddha Gan O Doha. பக். 35–36. http://archive.org/details/in.ernet.dli.2015.315645. 
  9. Jha, V.N. (2003). Sanskrit Writings in Independent India, New Delhi: Sahitya Akademi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1812-7, p.179
  10. Majumdar 1960, p. 488. "The Pañchasāyaka by Jyotirīśvara Ṭhākura ... epitomises in five parts all that is said in standard works on Kāmaśāstra."

குறிப்புகள் தொகு

  1. Chatterji S.K. and S.K. Mishra (ed.) (1940). Varṇa Ratnākara of Jyotirīśvara, Bibliotheca Indica, Calcutta: The Asiatic Society.
  2. Majumdar, Ramesh Chandra; Pusalker, A. D.; Majumdar, A. K., eds. (1960). The History and Culture of the Indian People. VI: The Delhi Sultanate. Bombay: Bharatiya Vidya Bhavan.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிரீசுவர்_தாக்கூர்&oldid=3825582" இலிருந்து மீள்விக்கப்பட்டது