வர்ண ரத்னாகரம்

மைதிலி மொழியின் மிகப் பழமையான இலக்கியப் படைப்பு

வர்ண ரத்னாகரம் (Varna Ratnakara) அதாவது "விளக்கக் கடல்" என்பது மைதிலி மொழியின் பழமையான உரைநடை ஆகும்.[3] இது பொது ஊழி 1324 இல் மைதிலி அறிஞரும் கவிஞருமான ஜோதிரீசுவர் தாக்கூரால் எழுதப்பட்டது.[4][5][6] ஆசிரியர் கர்னாட் வம்சத்தின் மன்னர் அரிசிம்மதேவனின் ( ஆட்சி. 1304-1324) அரசவையின் ஒரு பகுதியாக இருந்தார். அதன் தலைநகரங்கள் சிம்ரௌங்காத் (இப்போது நேபாளம் ) மற்றும் தர்பங்கா (இப்போது பீகார் ) ஆகிய இரண்டிலும் இருந்தன.[7]

வர்ண ரத்னாகரம்
ஆசியச் சமூகம்[1]
வகைகலைக்களஞ்சியம்[2]
தேதி1324
உருவான இடம்மிதிலைப் பிரதேசம்
மொழி(கள்)மைதிலி
ஆக்கியோர்ஜோதிரீசுவர் தாக்கூர்
Materialபனை ஓலை
அளவு12.7 × 5 cm; 77 leaves; 17 missing[1]
Conditionபாதுகாக்கப்பட்டுள்ளது
Scriptதிர்கூடம்
கண்டுபிடித்ததுநேபாளத்தின் பண்டிதர் ஹரபிரசாத் சாத்திரி (1885-90)

இந்தப் பணி பல்வேறு பாடங்கள் மற்றும் சூழ்நிலைகளின் விளக்கங்களைக் கொண்டுள்ளது. இது இடைக்கால இந்தியாவின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.[8] உரை நகர வர்ணம், நாய்க வர்ணம், அஸ்தான வர்ணம், ரிட்டு வர்ணம், பிரயாண வர்ணம், பதாதி வர்ணம் மற்றும் சம்சான வர்ணம் என ஏழு அலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 84 சித்தர்களின் முழுமையற்ற பட்டியல் 76 பெயர்களைக் கொண்ட உரையில் காணப்படுகிறது. இந்த உரையின் கையெழுத்துப் பிரதி, கொல்கத்தாவில் உள்ள ஆசியச் சமூகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.[9]

இந்த கலைக்களஞ்சியப் படைப்பில் அபகத்தம் என்ற சொல் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[10] பின்னர் மைதிலிக் கவிஞர் வித்யாபதி தனது கீர்த்திலதா என்ற கவிதையை அபகத்தத்தில் எழுதினார்.[11]

நூலாசிரியர் தொகு

வர்ண ரத்னாகரம் ஜோதிரீசுவர் தாக்கூரால் எழுதப்பட்டது. இவர், மைதிலி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிதிலையின் கர்னாட் வம்சத்தின் மன்னர் அரிசிம்மதேவரின் அரசவைக் கவிஞர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Jyotiśvara. (1998). Varṇa-ratnākara of Jyotiriśvara of Kaviśekharācārya. New Delhi: Sahitya Akademi. பக். ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-260-0439-8. இணையக் கணினி நூலக மையம்:40268712. https://archive.org/details/varnaratnakaraof0000jyot. 
  2. Mukherjee, Sujit. (1998). A dictionary of Indian literature. Hyderabad: Orient Longman. பக். 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-250-1453-5. இணையக் கணினி நூலக மையம்:42718918. 
  3. Chatterji, Suniti Kumar (1966) (in en). The People, Language, and Culture of Orissa. Orissa Sahitya Akademi. பக். 19. 
  4. Sharma, R.K.. "International Sanskrit Conference, New Delhi, March 26th-31st, 1972, Volume 2, Part 1". The Ministry, 1972 2: 141. 
  5. Choudhary, Indra Kumar (1988) (in en). Some Aspects of Social Life of Medieval Mithila, 1350-1750 A.D.: With a Special Reference to Contemporary Literatures. Kashi Prasad Jayaswal Research Institute. பக். 187. https://books.google.com/books?id=jCQaAAAAIAAJ. 
  6. Mukherjee, Ramkrishna (26 February 2019). Understanding social dynamics in South Asia : Essays in memory of Ramkrishna Mukherjee. Singapore. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-13-0387-6. இணையக் கணினி நூலக மையம்:1088722592. 
  7. Jha, Sureshwar (2005). "Political Thinkers in Mithila". p. 192. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  8. R. C. Majumdar; Pusalker, A. D.; Majumdar, A. K., தொகுப்பாசிரியர்கள் (1960). The History and Culture of the Indian People. VI: The Delhi Sultanate. Bombay: Bharatiya Vidya Bhavan. பக். 515. ""The Varṇa Ratnākara of Jyotirīśvara Ṭhākura ... was written about 1325. This is a work of set descriptions of various subjects and situations, to supply ready-made cliché passages to story-tellers ... [it] is important, not only because it gives us specimens of pure Maithilī prose ... but also because it is a store-house of information, conveyed through words, about the life and culture of early Medieval India in all their aspects."" 
  9. Shastri, Haraprasad Ed (1916). Hajar Bachorer Purano Bangla Bhashay Bouddha Gan O Doha. பக். 35–36. http://archive.org/details/in.ernet.dli.2015.315645. 
  10. Jyotiśvara. (1998). Varṇa-ratnākara of Jyotiriśvara of Kaviśekharācārya. New Delhi: Sahitya Akademi. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-260-0439-8. இணையக் கணினி நூலக மையம்:40268712. https://archive.org/details/varnaratnakaraof0000jyot. 
  11. Jha, Pankaj (2019). A political history of literature : Vidyapati and the fifteenth century (First ). New Delhi. பக். 4–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-948955-8. இணையக் கணினி நூலக மையம்:1083625313. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ண_ரத்னாகரம்&oldid=3849182" இலிருந்து மீள்விக்கப்பட்டது